Home » Articles » முன்னேற்றப் பாதை

 
முன்னேற்றப் பாதை


இராமநாதன் கோ
Author:

“உங்கள் மனம் எப்படி”?

– டாக்டர் ஜி. இராமநாதன், எம்.டி.

மூன்று வகை மனிதர்கள்:

மூன்று வகை மனிதர்களை இப்போது அறிமுகப்படுத்துகிறேன்.

முதலாமவர்:

இவர் எப்போதும் உத்தரவிடுபவர். இதைச் செய்யக்கூடாது. இதைத்தான் செய்ய வேண்டும் என்று வலியுறுத்தும் மனம் கொண்டவர். வீட்டில் பார்ப்பர்களுக்கு கோபம் கொண்டவராக காட்சியளிப்பார். தான் இப்படித்தான் இருக்க வேண்டும் என்று சில முறைகளை தேர்ந்து, அதன்படியே பிடிவாதமாக செயலாற்றுபவர். மற்றவர்களை அடுக்குவார்; தண்டனை கொடுப்பார். பிறரிடம் குறைகளையே அதிகம் காண்பார். பிறரை மனந்திறந்து பாராட்டமாட்டார். அதிகாரம் செய்வார். சில சமயம் நியாயத்திற்கு எதிரானது என்று தெரிந்தாலும் அதிலேயே பிடிவாதமாக இருப்பார்.

இவருடைய செயல்கள், அவர் எப்படி பிறரிடம் கற்றுக் கொண்டாரோ, அதன் அடிப்படையில் தான் இருக்கும் முன்பே தீர்மானித்தபடிதான் நடக்கும். காலத்திற்கேற்ற மாற்றம் இராது. இவர் பெற்றோர் மனம் படைத்தவர்.

இரண்டாமவர்:

இவர் தன் அனுபவம் அறிவின்மூலம் ஆராய்ந்து செயல்படுவபர். தன்னை நம்பியுள்ளவர்களின் நலனில் அக்கரை கொண்டு, அவரகளுகு உதவுவார். பிறர் மூலம் எதைக்கேட்டாலும், அதைச் சரியா? என ஆராய்ந்து தெளிவு பெறுவார். பல பிரச்சினைகளை ஒன்றாக சந்தித்தாலும், அதில் குழப்பமடையாமல் சரிஆன முடிவை எடுப்பார். தமது எண்ணங்களை நடைமுறைக்கு ஏற்ப மாற்றியமைப்பார். பணம், புகழ், பதவி போன்றவைகள் இவருக்கு ஆணவத்தைக் கொடுக்காது. தோல்வியோ, பொருள் இழப்போ இவரைத் தளரச் செய்யாது. இவருடைய செயல்கள் அனுபவத்தின் அடிப்படையில் நடைமுறைக்கு ஏற்ப அமையும். இவர் முதிர்ந்த மனம் படைத்தவர்.

மூன்றாமவர்:

இவர் உணர்ச்சி வயப்படுபவர்; கற்பனைத்திறன் அதிகம் கொண்டவர். ஒரு எண்ணத்தை எடுத்தால், அதை முழுமூச்சுடன் செயல்படுத்தக் காட்டும் வேகம் கொண்டவர். தான் செய்வதுதான் சரி, தன்னை விட திறமையானவர் யாருமில்லை என தற்பெருமையுடையவர். அளவற்ற ஆசைகளை மனதில் வைத்திருப்பார். பிறரை கேலி செய்தல், துன்புறுத்தல் இவருக்கு பிடித்தமான செயல்கள், மற்றவர்கள என்ன பாதிப்பு அடைந்தாலும் சரி, தன்னுடைய எண்ணம் நிறைவேற வேண்டுமென அடம்பிடிப்பார். சுயநலமிக்கவர். ஆத்திரம் படைத்தவர். புதுப்புதுச சிக்கல்களை உருவாக்குபவர்.

இவர் செயல்கள், உணர்ச்சிகளின் அடிப்படையில் (Emotional) அமைந்தவை. இவர் குழந்தை மனம் படைத்தவர்.

இம்மூன்றுவகை மனம் படைத்தவர்கள்தான் நம்மை அவ்வப்போது ஆட்டிப் படைக்கிறார்கள். இவர்கள் வேறு யாருமல்ல. நமக்குள் இருக்கும் நம்மை செயல்பட வைக்கும் மூன்று மனங்கள் தான்.பெற்றோர்மனம், முதிர்ந்த மனம், குழந்தை மனம் இந்த மூன்றுமே ஒவ்வொரு மனிதனிடமும் இருக்கிறது. இந்த மூன்றில் எந்த மனத்தின் ஆதிக்கம் அதிகம் உள்ளதோ, அதற்கேற்ப ஒவ்வொருவரும் செயல்படுகிறார்கள். அதனால் ஒருவருக்கொருவர் வித்தியாசப்படுகிறார்கள். குழந்தையாக பிறந்ததும், உலகத்தில் மற்றவர்களுடன் (பெற்ற தாய் முதற்கொண்டு) தொடர்பு கொள்ள ஆரம்பிக்கும் மழலைப் பருவத்திலேயே, இது போன்ற மனங்கள் நம்மில் உருவாகிவிடுகின்றன. பெரியவர்களானாலும் குழந்தைப் பருவத்தில் எப்படிப்பட்ட மன அடிப்படையிலேதான் நாம் செயல்படுகிறோம்.

நீங்கள் எந்த வகையைச் சேர்ந்தவர்?

இப்போது உங்களுடைய மனம் எத்தகையது என்பதை ஆராய்வோம். கீழே சில கேள்விகள் கொடுக்கப்பட்டுள்ளன. அதற்குப் பதில்கள் அ, ஆ, இ என்ற வரிசையில் உள்ளன. அந்த மூன்றில் நீங்கள் விரும்பும் பதிலை வட்ட மிடுங்கள்.

1. நீங்கள் விரும்பும் நண்பர் மற்றொருவனிடம் நெருங்கிப் பழகுவதாக பார்க்கிறீர்கள். அல்லது கேள்விப்படுகிறீர்கள், அதைப்பற்றி உங்கள் உணர்வு எப்படி?

அ) அவர் மீது ஆத்திரப்படுவேன். அடுத்து என்னிடம் வரும்போது முகம் கொடுத்து பேசமாட்டேன்.

ஆ) நம்பிக்கைக்கு உரியவர் அல்ல; யாரையோ நம்பி கெட்டுப் போகட்டும்.

இ) மற்றவர்களுடன் பழகுவதனால் என் நட்பிற்கு எந்த குறையுமில்லை.

2. ரயில் நிலையத்தில் தற்செயலாக பிளாட்பாரம் டிக்கெட் வாங்காமல் சென்று விடுகிறீர்கள். திரும்பி வரும்போது மேற்பார்வயாளர் உங்களை பரிசோதித்து த்டனைக்கட்டணம் கட்டச் சொல்கிறார். உங்கள் மனநிலை எப்படி இருக்கும்?

அ) பிளாட்பாரம் டிக்கெட்தொலைந்து விட்டதாக பொய் சொல்வேன் அல்லது உயர் அதிகாரிகள் (அ) அரசியல் வாதிகள் பெயரை சொல்லி, அவருக்கு வேண்டியவர் எனக் கூறி தப்பித்துவிடுவேன்.

ஆ) இதென்ன பெரிய தவறு? இரண்டே ரூபாய்தான். அவனவன் ரயில் பயணமே டிக்கெட் இல்லாமல் செய்யும் போது இதற்கென்ன தண்டனை. வேண்டுமானால் இப்போது ஒரு பிளாபாரம் டிக்கெட் வாங்கி கொள்கிறேன்.

இ) நான் செய்தது தவறுதான். அதற்கான தவறை ஒப்புக் கொண்டு தண்டனைத் தொகையையும் கட்டிவிடுவேன்.

3. உங்களுக்கு கீழ் வேலை செய்பவர், உங்கள் எதிர்ப்பார்ப்புக்கு மாறான செயலை செய்தால் உங்கள் மனநிலை எப்படி?

அ) அவன் ஒரு முரண்டு பிடிக்கும் ஆசாமி. போய்த் தொலையட்டும் என விட்டுவிடுவேன்.

ஆ) அவனைத் திட்டி வேலையை விட்டு வெளியேற்றுவேன்.

இ) ஏன் அப்படிச் செய்தாய்? என அவனிடம் விளக்கம் கேட்டு அதில் நியாயம் உள்ளதா என ஆராய்ந்து முடிவெடுப்பேன்.

4. உங்கள் எதிரி, பெரிய சிக்கலில் மாட்டிவிட்டார். உங்கள் மனநிலை எப்படி?

அ) மனதிற்குள் மகிழ்ச்சி அடைவேன்.

ஆ) அவன் செய்த தவறுக்கு இதுதான் தண்டனை என்று எண்ணுவேன்.

இ) தான் செய்த தவறை உணர்து சரி செய்தால் போதும். சிக்கலில் இருந்து விடுபடட்டும்.

5) உங்கள் மீது வீண்பழி சுமத்துகிறார்கள், என்ன செய்வீர்கள்?

அ) அப்பாவியான என் மீது பழியா? அழுவேன்.

ஆ) பழி சுமத்தியவர்களைத் தண்டிக்க புகார் நடவடிக்கை எடுப்பேன்.

இ) இதெல்லாம் வீண்பேச்சு; எதுவும் பொருட்படுத்தாமல் தொடர்ந்து செயல்படுவேன்.

6) உங்களை விருந்துக்கு ஓட்டலுக்கு அழைக்கிறார்கள். அந்த குறிப்பிட்ட நேரத்தில் யாரும் இல்லை. ஒருமணி நேரம் தாமதித்து வருகிறார்கள். நீங்கள் எப்படி செயல்படுவீர்கள்?

அ) சரி, நேரமானால் என்ன? விருந்து கிடைத்தால் போதும் என சாப்பிடுவேன்.

ஆ) காலந்தவறாமையைக் (PUNCTUALITY) கடைப்பிடிப்பது பற்றிய குறைகளை மற்றவர்களிடம் பேசுவேன்.

இ) எதனால்தாமதமான்னார்கள்? என்பதன் காரணத்தை ஆராய்வேன்.

7) உங்கள் குந்தைகள் பற்ற உங்கள் கருத்து என்ன?

அ) என் மகன்/ மகளைப் போன்ற புத்திசாலி யாருமில்லை.

ஆ) குழந்தைகளை எப்போதும் கண்டித்து வளர்க்க வேண்டும். அப்போதுதான் நல்லவர்களாக வளருவார்கள்.

இ) தவறு செய்தால் சுட்டிக்காட்டுவேன்; வெற்றிபெற்றால் பாராட்டுவேன்.

8) உங்கள் பெற்றோர் வாங்கிக் கொடுத்த, விலையுயர்ந்த கடிகாரத்தை தொலைத்து விட்டீர்கள். தந்தை கண்டிக்கிறார் என்ன செய்வீர்கள்?

அ) நீங்களாகத்தான் வாங்கிக் கொடுத்தீர்கள். நான் கேட்க வில்லையே. கடிகாரம் தானகத் தொலைந்தது. நான் என்ன செய்யட்டும்?

ஆ) நான் சின்ன பிள்ளை. அதனால்தான் திட்டுகிறீர்கள். நீங்களெல்லாம் எதையும் தொலைக்கவில்லையா?

இ) எதற்கும் பல இடங்களில் தேடிப்பார்ப்பேன். இனிமேல் இதுபோன்று தொலைக்காமல் இருக்க, எச்சரிக்கையாக இருப்பேன்.

9) உங்கள் வீட்டில் அடிக்கடி சண்டை, குழப்பமும் கொந்தளிப்பும் இருக்கிறது. உங்கள் நிலை என்ன?

அ) தற்கொலை அல்லது விவாகரத்து செய்தால்தான் நிம்மதி.

ஆ) சண்டைக்கு அவள்/அவர் தான் காரணம்.

இ) இருவர் மீதும் தவறு இருக்கலாம்; ஒருவருக்கு ஒருவர் அனுசரித்து செல்வது தான் நன்று.

10) நுழைவுத் தேர்வு எழுதி தோல்வியடைந்தால், உங்கள் உணர்வு எப்படி?

அ) மிகவும் அவமானம் அடைந்து விட்டதாக அழுவேன்.

ஆ) தேர்வுமுறைகள் சரியில்லை; லஞ்சமும் சிபாரிசும் செய்பவர்களே தேர்வு பெறுவார்கள்.

இ) தோல்வியை ஏற்று, அடுத்த தேர்வில் வெற்றிபெற முயற்சிப்பேன்.

நம் அன்றாட வாழ்க்கை நிகழ்ச்சிகளின் அடிப்படையில், நமது மனநிலை எப்படி என்பதை அறிய, இந்த கேள்விகள் கொடுக்கப்பட்டுள்ளன. இந்த பதில்தான் சரி என்பது இங்கு முக்கியமல்ல. (அ), (ஆ), (இ) இந்த மூன்றிலும் எத்தனை பதில்கள் என்பதைக் கணக்கிடுங்கள்.

அ – பதில்கள் அதிகமாயிருப்பின் (6-க்கு மேல்), நீங்கள் குழந்தை மனம் மேலோங்கியவர்.

ஆ – பதில்கள் அதிகமாயிருப்பின் (6- க்கு மேல் நீங்கள் பெற்றோர் மனம் மேலோங்கியவர்.

இ – பதில்கள் அதிகமாயிருப்பின் (6- க்கு மேல் நீங்கள் முதிர்ந்த மனம் மேலோங்கியவர்.

பதில்கள் அ, ஆ, இ மூன்றிலும் சமமாக இருப்பின், நீங்கள் சராசரி மனிதர், உணர்ச்சி வயப்படுதலை குறைக்க வேண்டும். மன இறுக்கத்தைக் குறைக்க வேண்டும்.

நீங்கள் சந்திக்கும் மனிதர்கள் எப்படிப்பட்டவர்கள்?

மேற்கண்ட கேள்விகளுக்கு மற்றவர்கள் எப்படி செயல்படுகிறார்கள் என்பதிலும், பிறர் என்னென்ன சொற்களைப் பயன்படுதுகிறார்கள் என்பதை ஆராய்ந்தும், மற்றவர்களின் மனநிலையை நாம் அறியலாம். நாம் எல்லா நேரங்களிலும் பிறரிடம் கணவன்/ மனைவி, தாய்,தந்தை,மகன்,மகள், சகோதர்ர், சகோதரி,ந்பர், உறவினர், மேலதிகாரி, கீழ் பணிபுரிவோர், வாடிக்கையாளர், அரசியல்வாதி இப்படி அனைவரிடமும்தொடர்பு கொண்டு இருக்கிறோம். மறுதரப்பில் உள்ளவரின் வார்த்தைகளை சற்று ஆராய்ந்து பாருங்கள்.

பெற்றோர் மனம் மேலோங்கிவர் பயன்படுத்தும் சொற்கள்:

ஏன்உன் பொறுப்பை உணர்ந்து செய்வதில்லை?

இந்த நாட்டை யாரும் திருத்து முடியாது?

என் உத்தரவின்றி எதையும் செய்யாதேழ

உன்போன்ற சோம்பேறிகளைக் கண்டாலே எரிகிறது?

பொறுப்பின்மை இல்லாதவர்களே நாட்டில் அதிகம்?

என்னுடைய பணிநேரம் முடிந்துவிட்டது. உங்கள் வேலையை நாளைதான் பார்க்க முடியும்!

நான் சொன்னால் மீறிப் பேசாதே!

முதிர்ந்த மனம் மேலோங்கியவர் பயன்படுத்தும் சொற்கள்:

நானிருக்கும்போது உங்களுக்கென்ன கவலை!

அந்த சம்பவம் எப்படி நடந்தது என்று விவரமாக சொல்லுங்கள்!

வேறு வழிகளில் முயற்சி செய்து பார்க்கிறேன்!

களைப்பாக தெரிகிறீர்கள்; நான் உதவுகிறேன்!

இது சம்பந்தப்பட்ட அனைவரையும் கலந்து பேசலாம்!

இந்த தவறுக்குக் காரணம் என்னுடைய கவனக்குறைவுதான்!

குழந்தை மனம்மேலோங்கியவர் பயன்படுத்தும் வார்த்தைகள்:

என்னுடைய பிரச்சினையே தலைக்கு மேல் இருக்கிறது!

வண்டியை ஓட்டும்போது அதிக வேகத்தில் ஓட்டினால்தான் மகிழ்ச்சியாக இருக்கிறது!

இதெல்லாம் என்னுடையதலை விதி!

நான் நினைத்தால் எதையும் சாதித்துக் காட்டுவேன்!

என்னைப் பார்த்து குறை சொன்னால் தலை வெடித்துவிடும்!

அவனுடைய அவஸ்தைகளைப்பார்த்தால் சிரிப்பு தான் வரும்!

இதைப்போல மற்றவர்கள் பேசும்போது, அவர்களுடைய மனநிலையை நாம் அறியலாம்.

மன ஆராய்வினால் என்ன பயன்

மனங்களும் அதன் செயல்திறனும் என்ற நூலில் டாக்டர். மனோகர் டேவிட் இதன் பயன்களை தெளிவாக விளக்குகிறார். பிறருடன், நமது உறவுகளை பின்வரும் நான்கு விதமாகத் தான் அமைக்கிறோம்.

1. நான் தாழ்ந்தவன் – மற்றவர்கள் உயர்ந்தவ்கள் எனும் மனம்:

நான் சரியல்ல – மற்றவர்கள் தான் சரி என வாழும் வாழ்க்கை முறை. இது ஒருவகை குழந்தை மனம்கொண்ட நிலை. குழந்தை மனம் படைத்தவர்கள். பெரும்பாலும் மற்றவர்களுடன் அடிக்கடி கருத்து வேறுபாடுகளை உண்டாக்கி சிரம்ப்படுவார்கள். இவர்கள் உணர்ச்சி மிகுந்த மன முடிவுகளை குறைக்க வேண்டும்.

2. நான் உயர்ந்தவன் – மற்றவர்கள் தாழ்ந்தவர்கள் எனும் மனம்:

நான் சரி – மற்றவர்கள் சரியல்ல என வாழும் வாழ்க்கை முறை. இது ஒருவகை பெற்றோர்மனம் கொண்ட நிலை. அளவுக்கதிகமான கட்டுப்பாடும், மன இறுக்கமும் நிறைந்தவை. இவைகளை தளர்த்தி செயல்பட்டால், மனச்சுமைகள் குறையும்.

நானும் சரி – மற்றவர்களும் சரி என வாழும் வாழ்க்கை முறை. இது முதிர்ந்த மனம் கொண்ட நிலை. இவர்கள் மனிலை பெரும்பாலும் மற்றவர்களால் ஏற்கப்படும். நடைமுறைகளை ஏற்று – சிக்கல்களை சமாளிப்பவர்கள். இந்த நிலையை அடைய முயற்சிப்பது வாழ்க்கையில் அமைதியும் பிறர் ஒத்துழைப்பையும் அததிமாக்கும்.

4. நானும் தாழ்ந்தவன் – மற்றவர்களும் தாழ்ந்தவர்கள் எனும் மனம்:

நானும் சரியல்ல – மற்றவர்களும் சரியல்ல என வாழும் வாழ்க்கை முறை. இது மிகுவும் தாழ்வான நிலை. பெரும்பாலும் பெற்றோர்களால் ஒதுக்கப்பட்ட குழந்தைகள், அனாதைகள், குழந்தைப் பருவத்தில் கொடுமைக்கு ஆளானவர்கள் இது போன்ற மன நிலையை பெறுகிறார்கள். இவர்கள் வளர்ந்ததும் சமூக விரோதிகளாகும் நிலைக்குப் போய் விடுவதுண்டு.

மனித மனத்தில் ஆய்வுகளை பல்வேறு கோணத்தில் செய்யலாம். நாம் இதுவரை பார்த்த TRANSACTIONAL ANALYSIS ஒரு சிறந்த வழிமுறை. இதன் மூலம் பிறர் எந்த மன நிலையில் செயல்படுகிறார்கள் என்பதை அறியலாம். நாமும் எந்த மன நிலையில் திட்டமிடலாம். வாழ்க்கையின் உயர்வை பெறலாம்.


Share
 

No comments

Be the first one to leave a comment.

Post a Comment


 

 


April 1997

உங்கள் மதிப்பை அதிகப்படுத்தும் வழி
கவலையை போக்க எட்டு வழிகள்
ஆளுமைத்திறன் மேம்பாடு
நண்பனே!
கவிதை
மனித பலவீனங்கள்
வாசகர் கடிதம்
வெற்றியாளர்களை உருவாக்கும் 10 அம்சங்கள்
அவர்களும் நீயும்
முன்னேற்றப் பாதை
பெற்றோர் கவனத்திற்கு
உள்ளத்தோடு உள்ளம்
இல.செ.க வின் சிந்தனைகள்