Home » Articles » பெற்றோர் கவனத்திற்கு

 
பெற்றோர் கவனத்திற்கு


admin
Author:

கல்வியில் தேர்ச்சி பெற்றால் தான் எதிர்காலத்தில் நல்ல வேலைவாய்ப்பு உண்டு. நல்ல வருமானம் ஈட்டி, வாழமுடியும் எனவும், கல்வியில் சிறப்பான தேர்ச்சிபெறாவிடில் சாதாரண வேலையும், குறைந்த வருமானமும் பெற்று வாழ்க்கையில் சிரமத்தை எதிர்நோக்க நேரிடும் என்பது பெற்றோர்களுக்கு உள்ள அனுபவமாகும்.

பிள்ளைகளுக்கு அதனை எடுத்துரைத்தாலும் அதில் உள்ள மகிழ்ச்சியையோ – துன்பத்தையோ முழுமையாகப் புரிந்து கொள்ள முடியாது.

நம்முடைய சமுதாயத்தில் பிள்ளைகளின் கல்வி என்பது பெற்றோர் எடுக்கின்ற முடிவாக அமைகிறது. நான் படிக்க வைக்கிறேன். நீ படிக்க வேண்டும் என்னும் எதிர்பார்ப்பு மட்டுமே பெற்றோர்களிடம் நிலவுகிறது.

வேலைக்குச்செல்கின்ற நாம் மாதம் முடிந்துடன் வருமானத்தை வாங்கிக் கொள்கிறோம். ‘வருமானம்’ தான் நாம் தொடர்ந்து வேலைக்குச் செல்வதை உறுதிபடுத்தும் உந்துதல் ஆகும். மாத இறுதியில் வருமானம் கிடைக்காது என்ற நிலை இருக்குமானால் அந்த வேலைக்குச் செல்ல மாட்டோம்.

‘வருமானம்’ நமது கடமையையும் – பொறுப்புக்களையும் சரியாகச் செய்யவும் – மகிழ்ச்சியும், திருப்தியும் தரவல்லது.தொடர்ந்து உழைப்பதற்கு ஏற்ற உந்து சக்தியும் ஆகும்.

பிள்ளைகளைப் பொறுத்த வரையில் 10 அல்லது 15 ஆண்டுகளுக்குப் பின்னர் வரக்கூடிய ‘வருமானம்’ தான் எதிர்காலம் – வருமானம் – வாழ்க்கை என்பதெல்லாம். இது எந்த விதத்தில் ஊக்குவிப்பாக இருக்க முடியும் என்பதைப் பெற்றோர்கள் சிந்தித்துப் பார்க்க வேண்டும்.

இந்த மாத உழைப்பிற்கு மாத இறுதியில் வருமானம் கிடைப்பதால், கல்வியில் நாட்டமில்லாத பிள்ளைகளுக்கு ஒவ்வொரு மாதமும் அல்லது ஒவ்வொரு தேர்வுக்குப் பிறகும் வருமானமாக பரிசுகள் வழங்குவது மிகச் சிறந்தொரு ஊக்குவிப்பாகும்.

பள்ளியிலும் – வீட்டிலும் சரியாகச் செயல்படாத பிள்ளைகளை உற்சாகப்படுத்தவும் – நேர்படுத்தவும், ஒப்புக்கொண்ட படி ஒரு காரியத்தை முடித்தவுடன் புள்ளிகள் (Points) வழங்குவதும் – குறிப்பிட்ட புள்ளிகள் கிடைத்தவுடன் பிள்ளைகளுக்கு பரிசு கொடுப்பதும் மேலைநாட்டுப் பெற்றோர்கள் கடைப்பிடிக்கும் சிறந்த திட்டமாகும்.

உதாரணமாக;

காலையில் குறிப்பிட்ட நேரத்தில்:

சுயமாக எழுந்தால் – 2 புள்ளிகள்.

எழுப்பியவுடன் எழுந்தால் – 1 புள்ளி.

தாமதமாக எழுந்தால் புள்ளிகள் இல்லை.

இது போன்று பள்ளிப் பாடங்களைப் படித்தல், வீட்டுப் பாடங்களைச் செய்தல் போன்ற மற்ற ஒவ்வொரு நடவடிக்கைகளுக்கும் ஒவ்வொரு நாளும் புள்ளிகள் வழங்கி வர வேண்டும்.

மாத இறுதியில் 100 புள்ளிகள் ஈட்டயிருந்தால் – உணவருந்த வெளியில் அழைத்துச் செல்லுதல்.

200 புள்ளிகள் ஈட்டியிருந்தால் – உல்லாசப் பயணம் அழைத்துச்செல்லுதல் போன்ற பரிசுகளை வழங்கலாம்.

இதனை செயல்படுத்துவதில் ஒரமுறையான குறிப்பு அட்டை தயாரிக்கப்பட்டு வீட்டில் பார்வையில் படும்படியாக வைத்திருக்க வேண்டும். ஒவ்வொரு நாளும் பெற்றோர்கள் இந்த அட்டையில் புள்ளிகளை குறித்து வைக்க வேண்டும். இந்த விசயத்தில் பெற்றோர்கள் சோம்பேறித்தனமாக இருந்து விடக்கூடாது. ஒவ்வொரு நாளும் புள்ளகளை எழுத வேண்டியது மிகவும் முக்கியம். அவ்வாறே பிள்ளைகள் குறிப்பட்ட புள்ளிகளைப் பெற்றவுடன் ஒப்புக்கொண்டபடி பரிசுகளை வழங்க வேண்டியதும் மிகவும் முக்கியமாகும்.

நன்றாக படிக்காதபோது, தண்டிக்கும் பெற்றோர்கள் சிறப்பாக ஒழுங்காக படிக்கும்போது பிள்ளைகளுக்கு மகிழ்வூட்டும் வகையில் பரிசுகளைத் தர வேண்டும். வெறுமனே படி படி என்பதைவிட ஒரு ஊக்குவிப்புத்திட்டமாக பிள்ளைகளுக்கு பரிசுத் திட்டங்களை அமுல் படுத்துவது சிறப்புக் குரிய ஒன்றாகும்.

பிள்ளைகளன் நடைமுறைகளை உணர்ந்து அவர்களின் உணர்வுகளை மதித்து அதற்கேற்ற செயல்பாடுகளை செய்யாமல், வெறுமனே பிள்ளைகள் திருந்த வேண்டும், நேர்படுத்திக்கொள்ள வேண்டும். சதா புத்தகமும் கையுமாக இருக்க வேண்டும். என்று எதர்பார்ப்பதும், கண்டிப்பதும், தண்டிப்பதும், பெருப்பாலும் பலனை தருவதில்லை என்பதை பெற்றோர்கள் உணர வேண்டும்.

எந்த ஒரு ஊக்குவிப்பும் அல்லது உற்சாகமும் திட்டமும் இன்றி வெறுமனே அறிவுரை வழங்குதும் – தண்டிப்பதும் பெற்றோர் செய்யக்கூடாத தவறாகும்.

நாம் எவ்வளவு பேச வேண்டும்? எவ்வளவு கேட்க வேண்டும்?

இயற்கை நமக்களித்துள்ள நியதி என்ன? இரண்டு காதுகள். ஆனால் வாய் ஒன்று மட்டும்தான். இரண்டு மடங்கு விஷயங்களைக் கேட்டு ஒரு மடங்குதான் பேச வேண்டும். மேலும்,காதுக்கு ஒரே ஒரு வேலையே உண்டு. அது கேட்பது. ஆனால், வாய்க்கு பேசுவதும், இரண்டாவது வேலையாக உணவை உண்பதும் ஆகும்.

எனவே, நான்கு மடங்கு விஷயங்களைக்கேட்டு அதில் ஒரு பங்கு அளவே பேச வேண்டும். குறைவான, தேவையில்லாத பேச்சுக்களால் பல சச்சரவுகளை தவிர்க்கலாம். இவ்வாறு நாம் வீண் பேச்சுக்களை பேசும்போது, நம் கடமைகளை தவற விடுகிறோம். இவ்வாறும் நாம் செய்யும் தவறுகளுக்கு, உரிய அபராதத்தையும் பெற்று வருந்துகிறோம்.

Work More Talk Less

 

No comments

Be the first one to leave a comment.

Post a Comment


 

 


April 1997

உங்கள் மதிப்பை அதிகப்படுத்தும் வழி
கவலையை போக்க எட்டு வழிகள்
ஆளுமைத்திறன் மேம்பாடு
நண்பனே!
கவிதை
மனித பலவீனங்கள்
வாசகர் கடிதம்
வெற்றியாளர்களை உருவாக்கும் 10 அம்சங்கள்
அவர்களும் நீயும்
முன்னேற்றப் பாதை
பெற்றோர் கவனத்திற்கு
உள்ளத்தோடு உள்ளம்
இல.செ.க வின் சிந்தனைகள்