Home » Editorial » உள்ளத்தோடு உள்ளம்

 
உள்ளத்தோடு உள்ளம்


admin
Author:

வெற்றி…

ஏப்ரல் ’97 தன்னம்பிகை இதழ், சென்ற மார்ச் 97 இதழ் சென்றடைந்த வாசகர்களைப் போல் இரண்டுமடங்கு வாசகர்களைச் சந்திக்கிறது. ஆம் தன்னம்பிக்கை வாசகர்களின் எண்ணிக்கை ஒரே மாதத்தில் இரட்டிப்பாகிவிட்டது. ஆச்சிரியமாக இருக்கிறதா? இது எப்படி சாத்தியம் என்கிறீர்களா. உண்மைதான்.தன்னம்பிக்கை படப்பவர்களின் எண்ணிக்கை நாள், தோறும் கூடிவருகிறது. அதைப்போல நாள்தோறும் எங்களுக்கு வரும் கடிதங்களின் எண்ணிக்கையும் கூடி வருகிறது சில மாதங்களின் திட்டமிட்ட செயல் இன்று பலனாய் உருவெடுத்துள்ளது. இன்னும் ஒரு சிலமாதங்களில் இந்த எண்ணிக்கை மேலும் இரட்டிப்பாகும்.

தமிழக மக்கள் தொகையில் பாதியாய் உள்ள இளைஞர்களின் எண்ணிக்கையோடு ஒப்பிடுகையில் இது சொற்ப சதவீதம் தான். நமது விருப்பம் அனைத்து இளைஞர்களையும், எல்லா வீடுகளையும் தன்னம்பிக்கை சென்றடைய வேண்டும் என்பதுதான். ஆனால் நமக்கு எண்ணிக்கை மட்டுமே பெரிதல்ல. இவ்விதழைப் படிப்பதால் எத்தனைபேர் பயன் பெற்றார்கள் என்பதே பெரிது. எங்கள் வாழ்க்கை நன்றாக இருக்கிறது. முன்பைவிட என்னால் சிறப்பாக செயல்பட முடிகிறது. இப்போதுதான் என்னால் மனநிறைவுடன் மகிழ்ச்சியோடு வேலை செய்யமுடிகிறது. இந்த இதழைப் படித்தபின்தான் வாழ்க்கையில் ஒரு பிடிப்பு ஏற்பட்டுள்ளது என்று எழுதும் வாசகர்களின் கடிதங்கள்தான் நாம் சரியான பாதையில் சென்று கொண்டுள்ளோம் என்பதை உறுதிப்படுத்துகின்றன.

இந்த இதழ் வளர்ந்தால் மட்டும் போதாது. இதைப்படிக்கிற ஒவ்வொருவரும் வளர்ச்சியடைய வேண்டும். இதற்கு என்ன செய்யலாம். உங்கள் குறிக்கோளை தனித்தாளில் எழுதி அதற்கான செயல் திட்டத்துடன் அனுப்பிவையுங்கள். குறிப்பிட்ட கால இடை வெளியில் தகுந்த ஆலோசனைகளுடன் உங்களை நினைவூட்டி உங்கள் திட்டம் தொய்வின்றி நடைபெற உதவுகிறோம்.

நமது குறிக்கோள் வெற்றி ஒன்றே…

தடைக்கற்களால் சாதாரணமானவர்களை தடுக்க முடியும் நம்மை போன்ற சாதனையாளர்களையல்ல.

வாழ்த்துக்களுடன்,

ஆசிரியர் குழு.

 

No comments

Be the first one to leave a comment.

Post a Comment


 

 


April 1997

உங்கள் மதிப்பை அதிகப்படுத்தும் வழி
கவலையை போக்க எட்டு வழிகள்
ஆளுமைத்திறன் மேம்பாடு
நண்பனே!
கவிதை
மனித பலவீனங்கள்
வாசகர் கடிதம்
வெற்றியாளர்களை உருவாக்கும் 10 அம்சங்கள்
அவர்களும் நீயும்
முன்னேற்றப் பாதை
பெற்றோர் கவனத்திற்கு
உள்ளத்தோடு உள்ளம்
இல.செ.க வின் சிந்தனைகள்