Home » Articles » எப்பொருள் யார்யார்க் கேட்பினும்

 
எப்பொருள் யார்யார்க் கேட்பினும்


admin
Author:

எப்பொருள் யார்யார்க் கேட்பினும் அப்பொருள்
மெய்ப்பொருள் காண்ப தறிவு

ஊருக்குப் பெரியவன்! அவன் உத்தரவுக்கு அனைவரும் அடிபணிய வேண்டும். மறுத்தால் தலை மண்ணல் உருளும்! அவன் ஒருநாள் புரவியேறி வீதி வலம் சென்றபோது, பூங்கொடியாள் ஒருத்தியைக் காணுகின்றாள். அடுத்த கணம் அவன் இல்லத்திலிருந்து ஆணை கிளம்புகிறது. அந்த வெல்லத்தை எப்படியும் கொண்டு வரவேண்டுமென்று! ஏவி விடப்பட்டோர் தாவிச் சென்று தங்கள் இறைவனின் தவிப்பை எடுத்தோதினர். தங்கம் நிகர்த்தவளோ தரையை உதைத்தவாறு பதில் விடுத்தாள். ‘நான் உதைத்தது தரையை அல்ல! உங்கள் தலைவனின் தலையை என்பதை எடுத்துரைப்பீர்’ எனச் சீறினாள்.

பட்டாக்கத்தி வீர்ர் பதைத்துப்போயினர். அவள் கண்கள் கக்கிடும் அனலை எதிர்க்க மாட்டாமல் திரும்பி ஓடினர். ஊர்ப் பெரியவன் உறுமினான்.. அடி பட்ட புலிபோல! சிற்றூரைக்கூட்டினான். தன் விருபத்துக்கு இணங்காதள் மீது வீண்பழி சுமத்தினான். பொது மன்றத்தில் அந்தப் பூந்தளிர கொண்டுவந்து நிறுத்தப்பட்டாள்.

அவளைக் கற்பிழந்தவள் என்று சாத்தித்தான் அவன்! விலைமகள் என்றான்! அவன் ஆணைக்கு அதுவரை அடங்கிக் கிடந்தவர்களால் அதைப்பொறுத்துக் கொள்ள முடியவில்லை. அவள் கற்பின் திறத்தை, ஊரார் நன்கறிவர். பொற்புடைய மகளை பற்றிப்பொல்லாங்கு உரைப்பதை ஏற்றிட எவரும் முன் வரவில்லை. காமுகனோ, கையில் வாள் தூக்கி, கம்பீரமாக எழுந்தான். ஊரார் அவனுக்கு எதிரே தங்கள் கைகளை மட்டுமே உயர்த்தினர். வீண் பழி சுமத்தாதே! என்ற குரல் நாலா திக்கிலுமிருந்து எழுந்தது.

அவன் உடைவாளும், அன் ஆட்களின் துணையும் என்ன செய்ய முடியும். மக்களின் ஒன்று திரண்ட சக்தியின் முன்னே!

அவன் ஆட்டம் அடங்கிற்று ஆணவம் அழிந்து பட்டது – தலை குனிந்தவாறு தன்னகம் நோக்கி நடந்தான்.

இந்தக் கதையில்! பொய்களின் மூலம் ஊராரை ஏமாற்ற முயற்சி! ஊர் விழித்துக்கொள்கிறது.

எப்பொருளை, யார் யாரிடம் கேட்டாலும், அவர்கள் சொன்னதை அப்படியே நம்பி ஏற்றுக்கொள்ளாமல், அது பற்றிய உண்மை என்ன என்பதை ஆராய்ந்து உணர்வதே அறிவாகும்.

நன்றி:

கலைஞரின் ‘குறளோவியம்’


Share
 

No comments

Be the first one to leave a comment.

Post a Comment


 

 


March 1997

எப்பொருள் யார்யார்க் கேட்பினும்
அறவலிமையின் ஐந்து அடிப்படைகள்
அருட்தந்தை திரு. டெஸ்மாண்டு டுடூ (Desmand Tutu)
மனமும், மனித வாழ்வும்
வெறுப்பினால் வெறுப்பை குணப்படுத்த முடியாது
ஆளுமைத்திறன் மேம்பாடு
வாசகர் கடிதம்
நல்ல சூழ்நிலையை உருவாக்கிக்கொள்வது எப்படி?
நண்பர்கள்
உறவு
விடிவு
ஓ…. இளைஞனே..
தொண்டனும் தலைவனும்
ஒரு விழா துவங்குவதற்கு முன்
சாதிச் சோறு
நம்மை பரிகாசிப்பவர்களை…
முன்னேற்றப் பாதை
அதிஷ்டம் (Luck)
உள்ளத்தோடு உள்ளம்