Home » Editorial » உள்ளத்தோடு உள்ளம்

 
உள்ளத்தோடு உள்ளம்


admin
Author:

நெஞ்சிற்கினியீர்,

அதிக பக்கங்களில் அதிக செய்திகளுடன் ‘தன்னம்பிக்கை’ வெளிவர இருக்கிறது என்ற செய்தியினை வரவேற்று பல கடிதங்கள் வந்துள்ளன. இன்னும் சிறப்பாக செய்யும் ஆவலைத் தூண்டுகிறது.


வெற்றிப் பாதையில் அடியெடுத்து வைத்துள்ள உங்களுக்கு எங்கள் வாழ்த்துக்கள். வெற்றி பெறுவோம் என்ற எண்ணம் மட்டுமோ அல்லது உயர்ந்த குறிகோள் மட்டுமோ வெற்றியை ஈட்டித்தராது. அதற்கான முறையான செயல்தான் வெற்றியைத்தரும். வாழ்க்கையில் எல்லோருக்குமே ஓர் இலட்சியம் இருக்கும். ஆனால் தொடர்ந்த இடையறா முயற்சியின்மையே பலருடைய இலட்சியங்கள் நிறைவேறாமற் போக வாய்ப்புக்களாக அமைகின்றன.

உங்கள் குறிக்கோள் குறித்த தெளிவான மாதாந்திரத் திட்டம் உங்கள் கையில் உள்ளது. இத்திட்டத்தின் அடுத்த கட்டமாக ஒவ்வொரு மாதமும் எவ்வளவு பணிகள் முடிவடைந்துள்ளன. எவ்வளவு தூரம் முன்னேறியுள்ளோம். விடுப்பட்டுப்போன பணிகள் என்னென்ன எனக் கண்காணியுங்கள். ஏனெனில் வெற்றி என்பது எளிதில் கிடைக்கக் கூடிய சுலபப் பொருள் அல்ல. ஒவ்வொரு கட்டப் பணி முடித்த பின்னும் தற்சோதனை செய்து வாருங்கள். எந்த வேலையையும் சரியான நேரத்தில் துவங்கி சரியான நேரத்தில் முடிக்கக்கற்றுக் கொண்டாலே அவை வெற்றிகரமாக முடியும்.


Share
 

No comments

Be the first one to leave a comment.

Post a Comment


 

 


March 1997

எப்பொருள் யார்யார்க் கேட்பினும்
அறவலிமையின் ஐந்து அடிப்படைகள்
அருட்தந்தை திரு. டெஸ்மாண்டு டுடூ (Desmand Tutu)
மனமும், மனித வாழ்வும்
வெறுப்பினால் வெறுப்பை குணப்படுத்த முடியாது
ஆளுமைத்திறன் மேம்பாடு
வாசகர் கடிதம்
நல்ல சூழ்நிலையை உருவாக்கிக்கொள்வது எப்படி?
நண்பர்கள்
உறவு
விடிவு
ஓ…. இளைஞனே..
தொண்டனும் தலைவனும்
ஒரு விழா துவங்குவதற்கு முன்
சாதிச் சோறு
நம்மை பரிகாசிப்பவர்களை…
முன்னேற்றப் பாதை
அதிஷ்டம் (Luck)
உள்ளத்தோடு உள்ளம்