– 1997 – March | தன்னம்பிக்கை

Home » 1997 » March

 
 • Categories


 • Archives


  Follow us on

  எப்பொருள் யார்யார்க் கேட்பினும்

  எப்பொருள் யார்யார்க் கேட்பினும் அப்பொருள்
  மெய்ப்பொருள் காண்ப தறிவு

  ஊருக்குப் பெரியவன்! அவன் உத்தரவுக்கு அனைவரும் அடிபணிய வேண்டும். மறுத்தால் தலை மண்ணல் உருளும்! அவன் ஒருநாள் புரவியேறி வீதி வலம் சென்றபோது, பூங்கொடியாள் ஒருத்தியைக் காணுகின்றாள். அடுத்த கணம் அவன் இல்லத்திலிருந்து ஆணை கிளம்புகிறது. அந்த வெல்லத்தை எப்படியும் கொண்டு வரவேண்டுமென்று! ஏவி விடப்பட்டோர் தாவிச் சென்று தங்கள் இறைவனின் தவிப்பை எடுத்தோதினர். தங்கம் நிகர்த்தவளோ தரையை உதைத்தவாறு பதில் விடுத்தாள். ‘நான் உதைத்தது தரையை அல்ல! உங்கள் தலைவனின் தலையை என்பதை எடுத்துரைப்பீர்’ எனச் சீறினாள்.

  பட்டாக்கத்தி வீர்ர் பதைத்துப்போயினர். அவள் கண்கள் கக்கிடும் அனலை எதிர்க்க மாட்டாமல் திரும்பி ஓடினர். ஊர்ப் பெரியவன் உறுமினான்.. அடி பட்ட புலிபோல! சிற்றூரைக்கூட்டினான். தன் விருபத்துக்கு இணங்காதள் மீது வீண்பழி சுமத்தினான். பொது மன்றத்தில் அந்தப் பூந்தளிர கொண்டுவந்து நிறுத்தப்பட்டாள்.

  அவளைக் கற்பிழந்தவள் என்று சாத்தித்தான் அவன்! விலைமகள் என்றான்! அவன் ஆணைக்கு அதுவரை அடங்கிக் கிடந்தவர்களால் அதைப்பொறுத்துக் கொள்ள முடியவில்லை. அவள் கற்பின் திறத்தை, ஊரார் நன்கறிவர். பொற்புடைய மகளை பற்றிப்பொல்லாங்கு உரைப்பதை ஏற்றிட எவரும் முன் வரவில்லை. காமுகனோ, கையில் வாள் தூக்கி, கம்பீரமாக எழுந்தான். ஊரார் அவனுக்கு எதிரே தங்கள் கைகளை மட்டுமே உயர்த்தினர். வீண் பழி சுமத்தாதே! என்ற குரல் நாலா திக்கிலுமிருந்து எழுந்தது.

  அவன் உடைவாளும், அன் ஆட்களின் துணையும் என்ன செய்ய முடியும். மக்களின் ஒன்று திரண்ட சக்தியின் முன்னே!

  அவன் ஆட்டம் அடங்கிற்று ஆணவம் அழிந்து பட்டது – தலை குனிந்தவாறு தன்னகம் நோக்கி நடந்தான்.

  இந்தக் கதையில்! பொய்களின் மூலம் ஊராரை ஏமாற்ற முயற்சி! ஊர் விழித்துக்கொள்கிறது.

  எப்பொருளை, யார் யாரிடம் கேட்டாலும், அவர்கள் சொன்னதை அப்படியே நம்பி ஏற்றுக்கொள்ளாமல், அது பற்றிய உண்மை என்ன என்பதை ஆராய்ந்து உணர்வதே அறிவாகும்.

  நன்றி:

  கலைஞரின் ‘குறளோவியம்’

  அறவலிமையின் ஐந்து அடிப்படைகள்

  – டாக்டர் என். ஸ்ரீதரன்

  அறம் வெல்லும் என்பது எக்காலத்திலும் எல்லோராலும் ஒப்புக்கொள்ளப்பட்டிருக்கிறது. ஆனால் அந்த வெற்றிப்பாதையில் குறுக்கிடும் தடைகளைக் கண்டு பெரும்பான்மையானவர்கள் அஞ்சுகின்றனர். பின்வாங்கி விடுகின்றனர் நம்மிடம் அறவலிமை குறைந்திருப்பது தான் இதற்குக் காரணம்.

  நாம் முழு நினைவுடன் முயற்சித்து அறவலிமையை வளர்த்துக் கொண்டே வந்தால் தடைக் கற்களைப் படிகற்களாக மாற்றிவிட முடியும். இந்த வலிமை நமது மனத்தில் ஊறிப்பெருக ந்து அடிப்படைகளைக் கவனிக்க வேண்டும்.

  நம்பிக்கை:

  நம்மிடம் சில குறைபாடுகள் இருக்கலாம். யாரிடம்தான் குறையில்லை? முழு நிலவிலும் முயல்கறை எனப்படும் கருப்பு மாசு உண்டல்லவா? நம்முடைய சில பலவீனங்களுக்காகத் தாழ்வு மனப்பான்மை கொள்ளாமல், நாம் நல்லவர்கள்; அற வழியில் செல்வதில் வல்லவர்கள் என நாமே நம்ப வேண்டும். மனச்சாட்சியின் குரலுக்கு மதிப்பளிப்பதுதான் நம்மை நாமே நம்புவது என்று அறிய வேண்டும்.

  நாம் மனச்சாட்சியை வழி காட்டியாகக் கொண்டால் தடம் புரளாமல் இருக்க முடியும். அட்சியெனில் கண். சாட்சி எனில் கண்ணுடையவன். மனச் சாட்சி எனில் மனத்தைக் கண்ணாகக் கொண்டிருத்தல் என்று பொருள்படும். முகத்திலுள்ள கண் மதி மயக்கும். ஏமாற்றி விடும். மனக்கண் ஆகிய மனச் சாட்சி சரியான பாதையையே காட்டும். மனக்கண் வழி நடந்தால் மனமெங்கும ஆரோக்கிய உணர்வு பரவும். என்னதான் நடந்தாலும் சரி, நாம் ஒழுக்கம் தவறாமல் இருக்க வேண்டும். அப்பொழுதுதான் நாம் கூச்சப்படாமல், கண்களைத் தாழ்த்திக்கொள்ளாமல், நம்மையே கண்ணாடியில் பார்த்துக்கொள்ள முடியும்.

  பெருமிதம்:

  நாம் நல்லவர்கள்தான் என்று நமக்கு ஏற்படும் மனநிறைவு போதுமானது. இதுவே பெருமிதம் எனப்படுகிறது. மற்றவர்களும் நம்மை நல்லவர்கள் என்று கருதிச் சான்றிதழ் வழங்க வேண்டுமென நாம் எதிர்பார்க்க வேண்டியதில்ல. மற்றவர்களின் ஏற்பு நமக்குத் தேவை இல்லை. மனம்தான் ராஜா. ராஜா நம்மை நல்லவராக ஒப்புக்கொண்டு விட்டால், மந்திரி, சேனாதிபதி, போன்றோர் ஏற்பு தேவைப்படாதல்லவா?

  ஆனால் நமது பெருமித உணர்வு மிகையாக இருந்தால்திமிர் என நிந்திக்கப்படும். பெருமித உணர்வு குறைவாக இருந்தாலோ தாழ்வு மனப்பான்மை என இகழப்படும். எனவே நாம் நல்லவர்கள் என்ற உணர்வு எல்லைகளுக்குட்பட்டு வெளிப்பட வேண்டும். பிறர் நம்மை அங்கீகரிக்க வேண்டும் என்ற ஏக்கம் நமக்கு ஏற்படாதிருந்தால, நாம் யாருக்கும் வளைந்து கொடுக்காமல் சுதந்திரமாக முடிவுகள் எடுக்க முடியும்.

  பொறுமை:

  நமது நோக்கம் நல்லதாகவும், முயற்சி உண்மையான தாகவும் இருக்குமேயானால் நமது விருப்பம் சரியாக நிறைவேறும். நடுவில் எதிர்பாராத நிகழ்ச்சிகள் எத்தனையோ குறுக்கிடலாம். இதனால் நமது விருப்பம் நிறைவேறுவதில் காலதாமதம் ஏற்படக்கூடிய பிரச்சினை உள்ளது. ஒவ்வொரு விஷயமும் கட்டாயமாக, உடனடியாக, நமக்கு சாதகமாகவே நிகழும் என்று நாம் எதிர்பார்க்கக்கூடாது. ஒவ்வொரு விஷயத்திலம் அவ்வப்பொழுது என்னென்ன நடைபெறுகிறதோ அதை ஏற்றுக்கொள்வோம். எதிர்பான சூழ்நிலையில் நாம் கட்டுண்டால, பொறுமையாக இருந்து காலம் மாறும் எனக் காத்திருப்போம். ஓட்டப்பந்தயத்தில் ஒவ்வொரு கட்டத்திலும் ஒவ்வொருவன் முதலிடத்தில் தென்படுவான். ஆனால் ஒரே சீராக ஓடிக்கொண்டிருப்பவன் இறுதி வெற்றியடைவான். இந்த வெற்றி பொறுமையான முயற்சிக்குக் கிடைக்கும் பரிசாகும்.

  உறுதிப்பாடு:

  நாம் மலையிலோ, மரத்திலோ ஏறும்பொழுது கெட்டியாகப் பிடித்துக் கொள்கிறோம். வழுக்கும் தன்மையை அதிகமாக உணர்ந்தால், முன்பைவிட உறுதியாகப் பிடித்துக்கொள்வோம். இது போல் நமக்கென்று உள்ள கொள்கைகளில் நாம் உறுதியாக இருக்க வேண்டும். கொள்கைகளைப் பின்பற்றுவது எப்பொழுது சிரம்மாகத் தோன்றுகிறதோ அப்பொழுது தான் முன்பைவிட அதிகம் உறுதியாக இருப்பது அவசியமாகிறது. இருள் விலகப்போகும் நேரத்தில்தான் அதிக இருட்டாகத் தெரியும். துன்பம் முடிவடையப் போகும் நேரத்தில்தான் அதிக பட்ச வேதனை ஏற்டும். எனவே கூடுதான காலம் வரை உறுதியாக இருந்து விட்டால் நிலைமை சாதகமாக மாறத் தொடங்கும். இருளகன்று வெளுக்க தொடங்கும்.

  கண்ணோட்டம்:

  இன்றைய வாழ்க்கையில் நிதானம் இல்லை. எப்பொழுதும் ஓட்டமாக, எதிலும் பரபரப்பாக வாழ்க்கை அமைந்து இருக்கிறது. தலைக்கு மேலுள ஆகாயத்தை, சன்னலுக்கு அப்பாலுள்ள மரத்தைப் பார்க்கக்கூட நமக்கு நினைவுமில்லை. நேரமும் இல்லை. பணத்தத்துரத்தக் கொண்டு நாம் ஓடுகிற ஓட்டத்தில் சற்று இடைவெளி ஏற்பட்டாலும், பணம் நம்மை விட்டு வெகு தொலைவில் சென்றுவிடும் என அஞ்சுகிறோம். பணம் நம்முடைய மனத்தை மட்டுமல்ல, நம்முடைய உடல் அசைவுகளையும் கூட மாற்றிவிட்டது. நம் குரல்கூடத்தான் மாறிவிட்டது. பணக்கார்ரின் குரலும் வசதியற்றவரின் குரலும் வெவ்வேறு தொனியில் அல்லவா ஒலிக்கின்றன.

  நாம் நமது கண்ணோட்டத்தைமாற்றிக் கொள்ள வேண்டும். பணம் நமக்குத் தேவை. நிறையவும் தேவைதான். ஆனால் ஒழுக்கத்தை விற்றுப் பணம் வேண்டாம். உடல் நலத்தைக் கெடுத்துக் கொண்டு பணம் வேண்டாம். கண்ணை விற்று யாராவது சித்திரம் வாங்குவார்களா? சூடாகிவிட்ட மோட்டார் என்ஜினில் தண்ணீர் கொட்டுவது போல், மனத்தை சமனப்படுத்த நாம் தினமும் , சில நிமடங்களுக்காவது அமைதியாக, தனித்திருந்து சிந்தனையில் ஆழ்ந்திருக்க வேண்டும். இத்தகைய மௌன ஓய்வு நமது சிந்தனையைத் தெளிவுபடுத்தும். ஒருமுகப்படுத்தும். அந்த மௌனத்தில் ஆத்மாவின் இன்னொலியை நாம் கேட்க முடியும். இதனால் நமது மனம் சாந்தமாகிப் பக்குவமடைகிறது. இத்தகைய நிலையில் நாம் வெளியுலக நிகழ்ச்சிகளைச் சரியான கண்ணோட்டத்தில் பார்க்க முடிகிறது. இன்றைய விளைவு எதுவாயினும் இறுதி விளைவாக அறமே வெல்லும் என்ற கருத்து வலுப்பெறுகிறது.

  விலாசம்

  டாக்டர் என். ஸ்ரீதரன்
  3061 கிழக்கு இரண்டாவது தெரு
  புதுக்கோட்டை – 622 001

  அருட்தந்தை திரு. டெஸ்மாண்டு டுடூ (Desmand Tutu)

  அருட்தந்தை திரு. டெஸ்மாண்டு டுடூ (Desmand Tutu) – வை நினைவிருக்கிறதா, தென்னாப்பிரிக்க இனவெறிக் கெதிராக திரு. நெல்சன் மண்டேலாவுடன் சேர்ந்து போராடிய மதபோதகர் அவர் ஒரு நகைச்சுவை மன்னர். அவர் பேச்சுக்கள் சிந்தித்து சிரிக்க

  Continue Reading »

  மனமும், மனித வாழ்வும்

  மனம் போல் வாழ்வு, எண்ணம் போல் வாழ்வு என்கிறோம். எண்ணங்கள் நமது உடலை இயக்குகின்றன. உணர்ச்சிகள் நமது உடலை ஆட்சி செய்கின்றன. மனம் பாதித்தால் உடல் உறுப்புக்களின் இயக்கமே பாதிப்புக்குள்ளாகின்றன. ஒரு மனிதன்

  Continue Reading »

  வெறுப்பினால் வெறுப்பை குணப்படுத்த முடியாது

  வெறுப்பினால் வெறுப்பை குணப்படுத்த முடியாது

  இது எப்படிப்பட்ட அருமையான வாசகம். இதற்கு அர்த்தம் என்னவென்றால் ஒருவர் மீது கொண்டுள்ள வெறுப்பை மேலும் அவரை வெறுப்பதனால் நமது மனம் தான் கெடுகிறது. ஆனால் அவரை விரும்புவதன் மூலம் இருவர் மனமும் சமாதானமாகி,

  Continue Reading »

  ஆளுமைத்திறன் மேம்பாடு

  நடிப்பு:

  ஒவ்வொருவரும் ஒவ்வொரு பாணியை கையாண்டு பேச்சுக் கலையில் வெற்றி பெற்றிருக்கிறார்கள். பேச்சாளர்களுக்கு ஓரளவுக்கு நடிப்பாற்றலும் தேவை. சொல்லுகின்ற கருத்துக்கேற்ப கைகால்களின் அசைவுகள் மற்றும்முகபாங்கள் பேச்சடன் இயைந்து

  Continue Reading »

  வாசகர் கடிதம்

  ‘முன்னேற்றப்பாதை நேரத்தை வீணாக்கமல் வெற்றிப்பாதையில் நம்மை நாம் அழைத்துச் செல்ல காலத்தை வகுத்துக்கொண்டு, பயன்றறு வீணாகும் நேரத்தையும் பயனுள்ள நேரமாக மாற்ற உதவியது. நன்றிகள் பல. இரயில்வே தகவல்கள் பகுதி இனிய

  Continue Reading »

  நல்ல சூழ்நிலையை உருவாக்கிக்கொள்வது எப்படி?

  அலைகள், ஓய்ந்தபிறகுதான் கடலில் குளிப்பதென்பது முடியாது. நீந்தத் தெரிந்த பிறகே நீரில் இறங்குவது என்பதும் இயலாது. வாழ்க்கையும் அப்படித்தான். எல்லாம் அமைந்த பிறகே வாழ்வது என்பதோ, அமைதியான சூழ்நிலை என்பதோ, பெரும்பாலும் நடைபெறாத ஒன்று.

  Continue Reading »

  நண்பர்கள்

  நண்பர்கள் விலை மதிக்க
  முடியாத புத்தகங்கள்
  நம் இன்ப துன்பங்களைப்
  பகிர்ந்து நம்மை

  Continue Reading »

  உறவு

  வாழ்க்கை எனும் ஆலமரத்தை
  தாங்கி நிற்கும் விழுது;
  திருமணம் எனும் இலக்கியத்தால்
  இயற்றப்படும் புதிய புத்தகம்;

  Continue Reading »