Home » Cover Story » இளம் தொழிலதிபர் கோவை இரமேஷ் அவர்களுடன் ஓர் உரையாடல்….

 
இளம் தொழிலதிபர் கோவை இரமேஷ் அவர்களுடன் ஓர் உரையாடல்….


இரமேஷ்
Author:

தன் 13வது வயதில் தந்தையை இழந்து, தன் வருமானத்தால் மட்டுமே குடும்பத்தை நிர்வகிக்க முடியும் என்ற கட்டாயத்தின் பேரில் பல்வேறு இடங்களில் வேலைபார்த்து படிப்படியாக பரிசுப்பொருட்கள் தயாரிப்பு மற்றும் சந்தைப்படுத்துதல் (Marketing) ஆகிய தொழில்களையும் திறம்பட நிர்வகித்து வருகிறார். ஒவ்வொரு இளைஞனும் கட்டாயம் சுயதொழில் தொடங்கியே ஆகவேண்டும். அதுவே வளர்ச்சிக்கு வழி என்று சொல்வதோடு அல்லாம் அதற்கான வழிமுறைகளையும் தெளிவாக எடுத்துரைக்கிறார். நம் தன்னம்பிக்கை வாசகர்களுக்கு இவரின் அனுபவம் ஒரு பாடமாக இருகும் என்ற நோக்கத்தோடு இவரிடம் உடையாடிய போது…

தங்களின் ஆரம்கால வாழ்க்கையைப் பற்றிக் கூறுகளேன்…

13வது வயதில் தந்தையை இழந்த நான் 1984 – ம் ஆண்டு +2 தமிழ்வழியாகத் தேர்ச்சி பெற்றேன். பின்னர் கோவை கே.ஜி. மருத்துவமனையில் வரவேற்பாளர் மற்றும் டெலிபோன் ஆபரேட்டராக பணியைத் துவக்கினேன். கே.ஜி. மருத்துவ மனையின் தலைவர் Dr. G. பக்தவச்சலம் அவர்களின் கொள்கை என்னெனில் தன்னிடம் ஒருவர் பணியாற்றினால் அவரைத் தன் தொழிலின் எல்லா துறைகளிலும் பயிற்சி கொடுத்துப் பயன்படுத்திக்கொள்ள வேண்டும் என்பதே. அதன்படி நான் Operation Theatre Assistant ஆகவும், Van Driver ஆகவும் பயிற்சி பெற்று நான்கு ஆண்டுகள் பணியாற்றேன். பின்னர் கோவை மருத்துவமையம் (KMCH) என்ற நிறுவனத்தில் 1-1/2 ஆண்டுகள் Reception incharge ஆக பணியாற்றினேன். இதற்கிடையில் பணியில் இருந்து கொண்டு பல பகுதிநேர (Part Time) வேலைகளையும் செய்து வந்தேன்.

இந்தத் தொழிலுக்கு எப்படி வந்தீர்கள்?

பணியில் இருந்துகொண்டே பல பகுதி நேர வேலைகளைச் செய்து வந்த நான் அதற்கிடையிலும் 1988 ஆம் ஆண்டு அக்டோபர் மாதம் சிறிய தொகைகளுக்காக (ரூ. 1000 மற்றும் ரூ. 5000 சீட்டு சேகரிக்க ஆரம்பித்தேன். முதலில் நெருங்கிய நண்பர்களை மட்டும் உறுப்பினர்களாகச் சேர்த்தேன். பின்னர் படிப்படியாக நல்ல நண்பர்களின் வட்டத்தை அதிகப்படுத்திக்கொண்டேன். 1-1/2 வருடங்கள் கழித்து முழுநேரமாக Chits and Finnce Company ஆரம்பித்தேன்.

இந்தத் தொழிலில் என்னென்ன பிரச்சனைகளைச் சந்தித்தீர்கள்?

வேண்டியவர்கள் பணம் கேட்பார்கள். சில சமயம் தேவைப்பட்ட அன்றே திரட்ட முடியாது. நமக்குச் சேரவேண்டிய பணம் நமக்குத் தேவைப்பட்ட போது வராமல் தாமதமாகும். குறிப்பாக நன்கு வேண்டிய நண்பர்கள் மற்றும் வாடிக்கையாளர்கள் கேட்ககும் போது

எப்படிச் சமாளிக்கிறீர்கள்?

அதிக நண்பர்களை குறிப்பாக நல்ல நண்பர்களை ஏற்படுத்திக் கொள்கிறேன். அவ்வப்பொழுது அவர்களின் உதவியையும், ஆலோனைகளையும் பெற்றுக்கொள்கிறேன். என்னுடைய கொள்கையே Knowing Each other an Helping Each other என்ற முறையில் தான். இதையே என் நண்பர்களும் கடைபிடிக்கின்றனர். இதனால் தான் எந்தப் பிரச்சனைகளையும் கூடுமான வரை எளிதாகச் சமாளிக்க முடிகிறது.

உங்கள் சமூக சேவையைப்பற்றி…

கோவை இரத்த தானம் செய்வோர் சங்கம் என்ற அமைப்பை ஏற்படுத்தி 8000 யூனிட் இரத்தம் இலவசமாகப் பெற்றுத் தந்திருக்கிறேன். நானும் 32 முறை இரத்ததானம் செய்திருக்கிறேன். மேலும் 8 இணை கண்கள் பெற்று கண்ணொளி கிடைக்க ஏற்பாடு செய்திருக்கிறேன்.

எப்படி சமூக சேவையில் ஈடுபாடு ஏற்பட்டது?

நான் கேஜி மருத்துவமனையில் வேலை செய்தபோது, கோவை குப்புசாமி நாயுடு மருத்துவமனையில் நண்பர் ஒருவரின் குழந்தைக்கு O வகை இரத்தம் தேவைப்பட்டதாக அறிந்தேன். அவர்கள் மூன்று நாட்கள் அலைந்தும் இரத்தம் கிடைக்கவேயில்லை. எனவே என் நண்பர்கள் முகவரிகளைப் பட்டியலிட்டு அவர்களை ஒருங்கிணைந்து இரத்தானம் செய்தேன். சுமார் 10 வருடங்களுக்கு முன்பு இரத்த தான சேவை என்பது மிகக்குறைவு. ஒரு கட்டத்தில் இந்தச் சேவையை முழுமையாகச் செய்ய முடியவில்லை. ஆகவே அரிமா சங்கத்தின் சார்பான Leo Club உடன் சேர்ந்து LEO Blood Donar’s Association என்ற அமைப்பை ஏற்படுத்தினோம். கோவையில் உள்ள சுமார் 60 உறுப்பினர்கள் கிடைத்தனர். பின்னர். அது கோவை மாவட்ட இரத்த தானம் செய்வோர் சங்கமாக மாற்றப்பட்டது.

சமூக சேவையில் உங்கள் எதிர்கால இலட்சியம்..?

தமிழ்நாடு முழுவதும் இரத்த தானம் செய்வோர்களை ஒருங்கிணைந்து தமிழ்நாட்டில் எந்த இடத்தில் யாருக்கு இரத்தம் தேவைப்பட்டாலும் 1/2 மணி நேரத்தில் இலவசமாகக் கிடைக்க ஏற்பாடு செய்ய வேண்டும்.

என் இறுதிக் காலத்திற்குள் 1000 பேருக்கு கண்ணொளி வழங்க ஏற்பாடு செய்ய வேண்டும்.

தங்கள் குடும்பத்தைப் பற்றி…

தாய் உண்டு. தந்தை இல்லை. என் ஒரே தம்பியை என்னுடன் தொழிலில் ஈடுபடுத்திக் கொண்டேன். எனக்குத் திருமணமாகிவிட்டது. என் மனைவி M.A (Music) முடித்துள்ளார். அவர் ஒரு பார்வையற்றவராவார்.

தற்கால இளைஞர்களுக்கு என்ன சொல்ல விரும்புகிறீர்கள்?

ஒவ்வொருவரும் கட்டாயம் சுயதொழில் செய்ய வேண்டும். அதற்கான திறமைகளை வளர்த்துக்கொள்ள வேண்டும். அது தான் நம் பொருளாதார வளர்ச்சிக்கும், நாட்டுக்கும் நலம் பயப்பதாய் இருக்கும்.


Share
 

No comments

Be the first one to leave a comment.

Post a Comment


 

 


January 1997

உன்னோடு சில நிமிடம் சகோதரா…!
ஆலோசனைப் பகுதி
மனமென்னும் மகாசக்தி – IV
உங்கள் நெஞ்சம்
உங்களுக்கு மன உளைச்சல் உள்ளதா? எந்த அளவு?
தேவைகள்தான், மனிதனை
இளம் தொழிலதிபர் கோவை இரமேஷ் அவர்களுடன் ஓர் உரையாடல்….
ஆளுமைத்திறன் மேம்பாடு
வா! வரலாறு படைக்கலாம்!
முன்னேற்றம் என்பது முற்றுப் பெற்றதல்ல
உள்ளத்தோடு உள்ளம்
இல. செ. க. வின் சிந்தனைகள்
இல.செ.க வின் சிந்தனை
பொள்ளாச்சியில் மனித நேயப் பயிலரங்கு