Home » Articles » அறிவு வேறு அனுபவம் வேறு

 
அறிவு வேறு அனுபவம் வேறு


சுகி சிவம்
Author:

ஒரு வேடிக்கையான நிகழ்ச்சி. தோட்டக்கலை இயலில் முதுகலைப் பட்டம் பெற்றவர் பண்ணை ஒன்றின் இயக்குனராகப் பதவி ஏற்றார். கம்பீரமாக கை வீசியபடி தோட்டத்தை சுற்றிப்பார்த்தார்.
ஐம்பதாண்டு கால அனுபவம் மிக்க தோட்டப்பணியாளர் கைகளைக் கட்டியபடி பின்னால் வந்தார். அடர்ந்து கிடந்த குட்டை மரத்தைச் சுட்டிக்காட்டி, ‘இதில் இலைகளை எல்லாம் தரிச்சு விடனும்’ என்று உத்தரவு போட்டார். ‘சரிங்க’ என்றார் பண்ணையாள். ‘நல்லா இலை எல்லாம் வெட்டிவிட்டாத்தான் மாங்காய் நிறைய காய்க்கும் தெரியுமா?’ என்றார் அதிகாரி. ‘எவ்வளவு வெட்டினாலும் மாங்காய் காய்க்காதுங்க’ பண்ணை ஊழியர் பணிவாகப் பதில் சொன்னார்.

‘ஏன்யா காய்க்காது…. ஏன்யா மாங்காய் காய்க்காது?’ சீறி விழுந்தார் முதுகலைப் பட்டதாரி.

‘அது இலுப்பை மரங்க. அதில மாங்காய் காய்க்காது’. என்றார் அனுபவஸ்தர்.

அறிவு வேறு அனுபவம் வேறு.

– சுகி சிவம்.

 

No comments

Be the first one to leave a comment.

Post a Comment


 

 


August 1996

அறிவு வேறு அனுபவம் வேறு
பற்களும் பாதுகாப்பும்
இளைஞர்கள் – நேற்று, இன்று, நாளை.
சிந்தனைக் களம் – 1
ஒரு தவறு நேர்ந்துவிட்டால் என்ன செய்யலாம்.
உங்கள் நெஞ்சம்
பாராட்டுகிறோம்
தண்ணீரும் தத்துவமும்
இலட்சியம் வாழ்க்கையின் திறவுகோல்
உடல் மட்டுமே ஊனம்
பொறாமை என்னும் பொல்லாக்குணம்.
உள்ளத்தோடு உள்ளம்
இல.செ.க.வின் சிந்தனைகள்
தன்னம்பிக்கை பெற….