Home » Articles » பற்களும் பாதுகாப்பும்

 
பற்களும் பாதுகாப்பும்


ஜவகர். S
Author:

– Dr. S. ஜவகர் B.D.S.,

கரு தாயின் வயிற்றில் 6வது வார வளர்ச்சியின் போதே பால்பற்கள் உருவாகின்றன.

பால்பற்கள் குழந்தைகளின் மென்மையான உணவுக்குத் தகுந்த படி வளர்கின்றன.

குழந்தைகளுக்கு அதிகமான மிட்டாய், பிஸ்கட் ஆகியவைகளை கொடுக்கும் போது பால் பற்களில் சொத்தை சீக்கிரம் உருவாகின்றன.

சிறு குழந்தைகளுக்கு விளையாட்டுகளில் அதிக ஆர்வம் இருப்பதால் பால் சொத்தைகளை அவர்கள் கவனிக்க மாட்டார்கள்.

பால் பற்களில் வரும் சொத்தையானது, அவற்றின் கீழே உருவாகி வரும் நிலையான பற்களின் வடிவத்தைச் சிதைக்கின்றன.

குழந்தைகளுக்கு சொத்தை வருவதற்கு முன்பே சொத்தை வராமல் தடுக்கும் மருத்துவ முறைகள் உள்ளன.

பெற்றோர்கள் 6 மாதத்திற்கு ஒரு முறை பல் பரிசோதனைக்காக குழந்தைகளை அழைத்து வருவதன் மூலம் பற்சொத்தையின் பின் விளைவுகளைக் கட்டுப்படுத்தலாம்.

குழந்தைகளுக்கு இனிப்பான செயற்கை வேதிப் பொருட்கள் நிறைந்த தின்பண்டங்களை கொடுப்பதைக் குறைக்கவும்.

தினமும் இரு முறை, பல் தேய்க்கும் பழக்கத்தை ஏற்படுத்தவும்.

கீரை, பச்சைக்காய்கறிகள், பழங்கள், ஆகியவைகளை உணவில் அதிகம் சேர்ந்துக்கொள்ளவும்.


Share
 

No comments

Be the first one to leave a comment.

Post a Comment


 

 


August 1996

அறிவு வேறு அனுபவம் வேறு
பற்களும் பாதுகாப்பும்
இளைஞர்கள் – நேற்று, இன்று, நாளை.
சிந்தனைக் களம் – 1
ஒரு தவறு நேர்ந்துவிட்டால் என்ன செய்யலாம்.
உங்கள் நெஞ்சம்
பாராட்டுகிறோம்
தண்ணீரும் தத்துவமும்
இலட்சியம் வாழ்க்கையின் திறவுகோல்
உடல் மட்டுமே ஊனம்
பொறாமை என்னும் பொல்லாக்குணம்.
உள்ளத்தோடு உள்ளம்
இல.செ.க.வின் சிந்தனைகள்
தன்னம்பிக்கை பெற….