Home » Articles » பொறாமை என்னும் பொல்லாக்குணம்.

 
பொறாமை என்னும் பொல்லாக்குணம்.


விஜயராகவன்
Author:

– லேனா தமிழ்வாணன்

யாரோ ஒருவர் பென்ஸ் கார் வாங்கினால் நமக்குப் பொறாமை ஏற்படுவது இல்லை. நமக்குத் தெரிந்த ஒருவர் வாங்கிவிட்டாலோ, ஊம்! பென்ஸா! என்று வாயிலிருந்து புகையைக் கிளப்புகிறோம்.

எவருக்கோ லாட்டரியில் பரிசு விழுந்தால் அதிஷ்டக்காரன் என்று விமர்சிப்பவர்கள் தங்கள் வட்டத்தில் ஒருவருக்கு பரிசு விழுந்தால் பொறாமைத் தீயில் வெந்து சாகிறார்கள்.

இது ஒரு தவறான உணர்ச்சி!

என் நண்பன்தான் இந்த ஊரில் மிகப்பெரிய பணக்காரன். எங்க சொந்தக்காரருடையதுதான் இந்த தொழிற்சாலை. எங்க சித்தப்பாகிட்ட மூணு கார் இருக்கு. என்றெல்லாம் மூன்றாவது மனிதர்களிடத்தில் பெருமையடித்துக் கொள்பவர்கள்கூட அந்த நண்பரையும், அந்தச் சொந்தக்காரரையும், அந்தச் சித்தப்பாவையும் பார்த்து கபகப என்று எரிகிறார்கள்.

ஏன் இந்த தவறான அணுகுமுறை?

அந்த நண்பரைப் பார்த்து உங்களை நண்பர்னு சொல்லிக்கிறதில எனக்குப் பெருமை என்று அதே உணர்ச்சியைத் தானே வெளிப்படுத்த வேண்டும்.

நமக்கு வேண்டியவர்கள் சொல்லிக் கொள்ளும்படியாக இருந்தால்தானே நல்லது! அவர்களது வளர்ச்சியை அல்லது அதிர்ஷ்டத்தைப் பார்த்து ஏன் காய்ந்து போக வேண்டும். யாரோ நன்றாக இருப்பதைவிட நம்மவர்கள் நன்றாக இருந்துவிட்டு போகட்டுமே!

நம்மைச்சுற்றியவர்கள் நன்றாக இருக்க வேண்டும் என்கிற எண்ணம் இருந்தால் பொறாமை வராது வளராது.

அவர்கள் நன்றாக இருப்பதால் மூன்று நன்மைகள். முதலாவது ஏற்கனவே குறிப்பிட்டதுபோல் வெளியில் பெருமையாகச் சொல்லிக்கொள்ளலாம். இரண்டாவதாக நமக்கு அவர்களால் தொந்தரவு இராது. மூன்றாவது அவர்களால் நமக்கு உதவிகூடக் கிடைக்கலாம்.

இந்தக்கோணங்களில் சிந்திக்காமல் பொறாமைப்பட்டுச் சாகிறவர்களை மிகச்சரியாக இனங்கண்டு கொண்டு நன்கு வளர்ந்தவர்கள் உதுக்க ஆரம்பித்து விடுகிறார்கள்.

உங்கள் வளர்ச்சி, உங்களுக்குக் கிடைத்த பரிசு, விருது எல்லாமே எனக்கு மகிழ்ச்சியைத் தருகின்றன என்று இதயத்தின் அடித்தளத்திலிருந்து பாராட்டுகிறவர்கள் பொறாமை வலைக்குள் விழுவதே இல்லை.

அடுத்து, வெந்து சாவதை விட்டுவிட்டு இவர்களைப்போல் நாமும் முன்னுக்கு வரவேண்டும் என்கிற உணர்வை வளர்த்துக்கொண்டால் அதுதான் உத்தமமான வழியாக இருக்கும்.


Share
 

No comments

Be the first one to leave a comment.

Post a Comment


 

 


August 1996

அறிவு வேறு அனுபவம் வேறு
பற்களும் பாதுகாப்பும்
இளைஞர்கள் – நேற்று, இன்று, நாளை.
சிந்தனைக் களம் – 1
ஒரு தவறு நேர்ந்துவிட்டால் என்ன செய்யலாம்.
உங்கள் நெஞ்சம்
பாராட்டுகிறோம்
தண்ணீரும் தத்துவமும்
இலட்சியம் வாழ்க்கையின் திறவுகோல்
உடல் மட்டுமே ஊனம்
பொறாமை என்னும் பொல்லாக்குணம்.
உள்ளத்தோடு உள்ளம்
இல.செ.க.வின் சிந்தனைகள்
தன்னம்பிக்கை பெற….