Home » Editorial » உள்ளத்தோடு உள்ளம்

 
உள்ளத்தோடு உள்ளம்


admin
Author:

நெஞ்சிற்கினியீர்,

புத்துணர்ச்சியோடும், புதிய பொலிவோடும் தன்னம்பிக்கை புறப்பட்டு வருகிறது. இல.செ. கந்தசாமி என்ற சமூக சிந்தனையாளர் ஏற்றிவைத்த இந்த தன்னம்பிக்கைச் சுடரை ஏந்தி கேள்விக்குறிகளாக கூனிக் குறுகி இருக்கும் இளைஞர்களின் உள்ளத்தில் தன்னம்பிக்கை ஒளியேற்றி அவர்களை வியப்புக் குறிகளாக நிமிர்ந்து நிற்க்கச்செய்வது நமது கடமை.

தங்கள் சிக்கல்களுக்குத் தீர்வு வேண்டி தன்னம்பிக்கைக்கு மடல்கள் வந்த வண்ணம் உள்ளன. சிக்கல்களின் அடர்த்தியையும் அவசரத்தையும் பொறுத்து சிலருக்குத் தாமதமாகவும் சிலருக்கு உடனடியாகவும் தீர்வுகளைக் கடிதம் மூலம் எழுதுகிறோம். இனியும் தொடர்ந்து எழுதுங்கள்.

இனிவரும் இதழ்களில் தன்னம்பிக்கை வாசகர்களிடையே நட்புறவை வளர்க்கும் நோக்கில் தன்னம்பிக்கை அஞ்சல் நண்பர்கள் (Self Confidence pen friends) பகுதியையும் மேலும் பல புதுமைகளையும் அறிமுகம் செய்ய இருக்கிறோம்.

தன்னம்பிக்கை மேலும் தழைத்திட ஒவ்வொரு உறுப்பினரும் ஒரு புதிய உறுப்பினரை சேர்த்து விடுங்கள். ஆண்டு உறுப்பினர்கள் ஆயுள் கட்டணம் கட்டுங்கள். சந்தாவைப் புதுப்பிக்காதவர்கள் புதுப்பித்துக்கொள்ளுங்கள்.

ஒரு சிற்றிதழ் சந்திக்கக் கூடிய அத்துணை இடர்பாடுகளையும் தன்னம்பிக்கை சந்தித்துக் கொண்டிருப்பினும், இடையறாது இதழ் தொடர்ந்து வெளிவர தங்களின் கருத்து மணிகளைக் கட்டுரையாக, கவிதையாக, துணுக்குகளாக எழுதி அனுப்பியும், புதிய சந்தாக்களைச் சேர்த்து அனுப்பியும் எங்களுக்கு உற்சாகம் அளித்து வருகிற வாசகர்களுக்கு நெஞ்சார்ந்த நன்றியை தெரிவித்துக் கொள்கிறோம்.

கடந்த காலங்களில் மாதந்தோறும் இதழை வெளிக்கொணர இயலாமல் சில சமயம் இரண்டு-மூன்று இதழ்கள் ஒரு சேர வெளிவந்திருக்கின்றன. இந்த நிலை இனி மாறும். கருத்து கனத்தோடும், காலந்தவறாமலும், குறைபாடுகள் இன்றியும் இதழைக் கொண்டுவரவும், இதழுக்குப் புதிய இரத்தம் பாய்ச்சவும் ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. இப்போது உறுதியளிக்கிறோம். இனிவரும் நாட்களில் மாதந்தோறும் முதல் வாரத்திலேயே தன்னம்பிக்கை இதழ் முந்திக்கொண்டு உங்களைச் சந்திக்க வரும், சிந்திக்கத்தரும்.

இளைஞர்களே இளங்காலைப் பொழுது விடிந்துவிட்டது. தாமதிக்க வேண்டும். உடனே புறப்படுங்கள். வெற்றி உம்முடையதே!. ‘Don’t delay, Don’t Delay. The Golden moments fly”

அயர்வை நீக்கி அச்சம் போக்கி
உயர்ந்த எண்ணம் உள்ளத் தமைத்து
உள்ளத் தளவு உயர்வு காண
உள்ளத் தோடு உள்ளம் சேர்ப்போம்.

என்றென்றும் அன்புடன்
ஆசிரியர் குழு


Share
 

No comments

Be the first one to leave a comment.

Post a Comment


 

 


August 1996

அறிவு வேறு அனுபவம் வேறு
பற்களும் பாதுகாப்பும்
இளைஞர்கள் – நேற்று, இன்று, நாளை.
சிந்தனைக் களம் – 1
ஒரு தவறு நேர்ந்துவிட்டால் என்ன செய்யலாம்.
உங்கள் நெஞ்சம்
பாராட்டுகிறோம்
தண்ணீரும் தத்துவமும்
இலட்சியம் வாழ்க்கையின் திறவுகோல்
உடல் மட்டுமே ஊனம்
பொறாமை என்னும் பொல்லாக்குணம்.
உள்ளத்தோடு உள்ளம்
இல.செ.க.வின் சிந்தனைகள்
தன்னம்பிக்கை பெற….