Home » Articles » எண்ணங்களும் வாழ்க்கையும்

 
எண்ணங்களும் வாழ்க்கையும்


கிருட்டிணமூர்த்தி கே.கே
Author:

7.மனமும் மகாத்மாவும்

உலகத்திலுள்ள மக்களை மூன்று வகையினராகப் பிரிக்கலாம். முதற்பிரிவினர் சமுதாயத்தின் அடித்தளத்தில் இருப்பவர்கள். அவர்களைத் ‘தொழிலாளர்கள்’ எனக் கொள்ளலாம். இரண்டாவது பிரிவினர் நடுத்தளத்திலுள்ளவர்கள். அவர்களைப் ‘பணியாளர்கள்’ எனச் சொல்ல்லாம். மூன்றாவது பிரிவினர் மேல் தளத்தில் உயரமாக உயர்ந்து நிற்பவர்கள். அவர்களைச் ‘சாதனையாளர்கள்’ கொள்கையில் வெற்றி கொண்டவர்கள் எனக் கொள்ளலாம்.

தொழிலாளர் என்று கூறும்பொழுது அவர்கள் கூலி வேலை அல்லது அடிமை வேலை செய்து பிழைப்பவர் என்று பொருள் இல்லை. ஒரு தொழிலாளியிடம் ‘நீர் ஏன் இந்த வேலையில் ஈடுபட்டிருக்கிறீர் என்று வினவினால் அவரிடமிருந்து வருகின்ற பதில், பணம் சம்பாதிக்க என்பதும் அதனைக் கொண்டு தன் மனைவி மக்கள், குடும்பத்தை நன்றாக வாழவைக்க வேண்டுமென்றதும் ஆகும். எனவே தனக்காகவும், தன் சொந்தக் குடும்பத்துக்காகவும் பாடுபடுவர், அவர்கள் நலனில் மட்டுமே அக்கறை கொண்டவர், இந்த மனப்பான்மையில் உள்ளவர் அனைவருமே அவர்கள் எந்த விதமான தொழில் ஈடுபட்டிருந்தாலும் அதாவது டாக்டர், வழக்கறிஞர் முதல் முதலமைச்சர் ஆளுநர் வரை அவர்கள் தொழிலாளிகள் எனத்தான் கருதப்படவேண்டியவர் ஆகிறார்கள். ஏனெனில் தான், தனக்கு, தன் குடும்பம் என்ற சிறிய வட்டத்தினை விட்டு வெளியே வர இயலாதவர்களாக அவர்கள் இருக்கிறார்கள்.

சமுதாயத்தில் பலர் சமூகப்பணியில் ஈடுபட்டுள்ளார்கள் சிலர் ஆன்மீகப் பணியிலும், வேறு சிலர் அறப்பணியிலும், இன்னும் சிலர் அரசியல் பணியிலும் ஈடுபட்டுள்ளார்கள். இத்தகையோரை சமுதாயத் தொழிலாளர் என்றோ, அரசியல் தொழிலாளர் என்றோ நாம் குறிப்பிடுவதில்லை. இவர்கள் பணி சமுதாயத்திற்காகச்செய்யப்படுவதொன்று. மக்களுக்காகச் செய்யப்படுகின்ற சேவையில், அவர்கள் நன்மையடைவதற்காகச் செய்யப்படுகின்ற பணிகளில் இவர்கள் பங்கு கொள்கிறார்கள். இவர்கள் தங்களுடைய சொந்த நலனை மட்டும்


Share
 

No comments

Be the first one to leave a comment.

Post a Comment


 

 


July 1996

பதவி
உயர்ந்து விளங்க வேண்டுமா?
உங்கள் முன்னோடிகளைக் கண்டுபிடியுங்கள்
முன்னோடிகளைப் பின்பற்றுவது
ஒரு சாதனையாளரின் சந்திப்பு
அந்தக் குழந்தை
எண்ணங்களும் வாழ்க்கையும்
நற்பண்புகள் என்னும் நீரோடையில்…
முன்னேறு….! முன்னேறு….! முன்னேறு….!!!
இல.செ.க.வின் சிந்தனைகள்