Home » Articles » நற்பண்புகள் என்னும் நீரோடையில்…

 
நற்பண்புகள் என்னும் நீரோடையில்…


admin
Author:

சமநிலை மனம்

முன்னேற்றப் பாதையில் செல்பவர்கள் அவசரப்படாமல், பதட்டப்படாமல் சமநிலை மனத்தோடு செயல்படவேண்டும் நம்மை மகிழ்ச்சியில் ஆழ்த்துகின்ற செய்திகள் கிடைத்தாலும், நம் நிலை தளர்ந்தோ நம் நிலை கிளர்ந்தோ சென்றுவிடுதல் கூடாது. இச் சமநிலை மனப்பான்மை அணுகுகின்ற ஏழை, பணக்காரர் யாராய் இருந்தாலும் அடிப்படை அறம் ஒன்றாகவே இருக்க வேண்டும். ஆளுக்கு ஏற்றாற்போல் பழகுகின்ற, சூழ்நிலைக்கு ஏற்றாற்போல் மாற்றிக்கொள்கின்ற மனிதர்கள் தற்காலிக முன்னேற்றம் பெறலாம். ஆனால், நிரந்தர முன்னேற்றம் பெற இயலாது. அத்தகைய இரட்டை வேடமே அவர்களுக்குத் தோல்வியாக முடிந்துவிடும்.

உண்மையாக நடந்து கொள்க

ஒரே சொல்லில் சொல்ல வேண்டுமானால் நிலைத்த முன்னேற்றம் விரும்புகின்றவர்கள் உண்மையாக நடந்து கொள்ள வேண்டும். எப்போதும் உண்மை பேசுவது, நிரந்தர வெற்றியை நல்கும். முன்னேற்றம் என்பது பொருள் சேர்ப்பது மட்டும் அல்ல, வாழ்க்கையில் ஒரு கூறு. வாழ்க்கைக்கு அடித்தளமானது. அதை வைத்துக்கொண்டு உண்மையாகவும் நேர்மையாகவும் வாழ்வதும் முன்னேற்றம்தான். சாதனைமிக்க வாழ்க்கைதான். இன்று எத்தனை பணக்காரர்களை நினைத்துக் கொண்டிருக்கின்றோம், ஆனால் உண்மையில் வழி நடந்த மகாத்மா காந்தி, உலகத்து மக்கள் எல்லார் உள்ளத்திலும் வாழ்கிறாரே. எது சாதனை என்பதை நீங்கள் முடிவு செய்யுங்கள்.

இனிமை

பிறரிடம் இனிமையாகப் பேசுவதும் பழகுவதும் மிகவும் இன்றியமையாததாகும். இனிய பேச்சும் பழக்கமும் இடை வெளியைக் குறைக்கும்; நெருக்கத்தை உண்டாக்கும். நம்மைச் சுற்றியும் அன்பானவர்கள் இருக்கிறார்கள் என்று உணர்ந்தாலே மனம் எழுச்சி பெறும். ஆர்வம் பெருகும். புதிய ஆற்றல் உண்டாகும் நாம் எடுத்துக்கொண்ட செயலை அறிவோடும் ஆற்றலோடும் செய்து முடித்து விடலாம். இதற்கு மாறாக நீங்கள் யாரிடமாவது கடுமையாக நடந்துகொண்டுவிட்டீர்கள் என்று வைத்துக்கொள்ளுங்கள், அவர்கள் எதிர்ப்பைத் தேடிக் கொண்டவர்கள் ஆவீர்கள். நமது அறிவும் ஆற்றலும் அவர்கள் எதிர்ப்பைச் சமாளிப்பதற்குத்தான் செலவிட வேண்டி வருமே ஒழிய வளர்ச்சிக்குப் பயன்படுத்த முடியாது. ஒரு சிறிய உதாரணம், உங்கள் மனம் நோகுமாறு யாரேனும் நடந்து கொண்டிருந்தால் அதை நினைத்தே அந்த ஒருநாள் வீணாகிவிடுவதை நீங்கள் நன்கு அறிவீர்கள். அந்த நிகழ்ச்சியை மறந்து நீங்கள் மீண்டும் பழைய மனநிலைக்கு வர இரண்டு நாட்களுக்குமேல் ஆகிவிடும். வாழ்க்கையில் இரண்டு நாட்கள் வீண். அதனால் நம் சூழ்நிலையை எப்போதும் இனிமையாக வைத்துக்கொள்வதே அறிவுடைய வளர்ச்சிக்கு வழி.


Share
 

No comments

Be the first one to leave a comment.

Post a Comment


 

 


July 1996

பதவி
உயர்ந்து விளங்க வேண்டுமா?
உங்கள் முன்னோடிகளைக் கண்டுபிடியுங்கள்
முன்னோடிகளைப் பின்பற்றுவது
ஒரு சாதனையாளரின் சந்திப்பு
அந்தக் குழந்தை
எண்ணங்களும் வாழ்க்கையும்
நற்பண்புகள் என்னும் நீரோடையில்…
முன்னேறு….! முன்னேறு….! முன்னேறு….!!!
இல.செ.க.வின் சிந்தனைகள்