உனது எழுச்சிக்குரல் கேட்டு
உன்வழியே நடப்பதற்கு
ஒருவரும் இல்லையாயினும்
உன்வழி நீ நடப்பாய்!
உன்தனி வழி நடப்பாய்!
அச்சத்தில் ஊமையாராறாக
அனைவருமே சுவர் ஒதுங்கி
அசைவற்றுப் போனாலும்
ஓ…! திக்கற்ற… தோழனே!
மனம்திறந்து பேசிடுவாய்
மனிதரிடை தனித்தொலிப்பாய்!
இடர்செறி கானகத்தின்
இருள்வழி நீ நடக்கையில்
இணைந்துடன் வந்திடாமல்
இடையில் உனைவிட்டுச்செல்வர்
எனினும்
ஓ…! திக்கற்ற தோழனே! நீ தான்
முள்படக் பாதையின் மீது
முன்வைத்த கால்களால்
கோடீட்ட தடயம் பற்றி
மேலும் உன் வழி நடப்பாய்!
புயல் வீசும் இராப்போதில்
போகின்ற வழியில்
தீபச் சுடர் உயர்ந்திநிற்கும்
தீரர் உனக்கில்லை எனினும்
ஓ…! திக்கற்ற தோழனே!
உன் இதயச் சோக மின்னல்
உரசிவைத்த அகல் விளக்கே….
உன் ஒளியாய் நீ நடப்பாய்!
முன்வைத்த கால்களை பின் வாங்காதே!
முன்னேறு! முன்னேறு!!
முன்னேறு!!!
– தாகூர்.
(இதனை முன்னாள் பிரதமர் இந்திராகாந்தி ஆங்கிலத்தில் மொழிபெயர்த்துள்ளார்கள்)

July 1996










No comments
Be the first one to leave a comment.