– 1996 – July | தன்னம்பிக்கை

Home » 1996 » July

 
 • Categories


 • Archives


  Follow us on

  பதவி

  இன்றைய மக்களாட்சி முறையில் பதவியும் முன்னேற்றத்தின் ஒரு அளவுகோலாகக் கருதப்படுகின்றது. பதவியும், தகுதிக்கும் உழைப்புக்கும் ஏற்ற வகையில் இருந்தால்தான் அது நிலைக்கும். மாறாகத் தகுதியும், திறமையும் இல்லாத பலர் உயர்ந்த பதவியில்

  Continue Reading »

  உயர்ந்து விளங்க வேண்டுமா?

  – ஆல்பர்ட் சுவைச்சர்

  வாழ்க்கை வரலாற்றைப் புரட்டிப் பாருங்கள். சிறந்த பொறியியல் வல்லுநரான விசுவேசுவரய்யாவின் ஈடுபாட்டை மேற்கொள்ளுங்கள். சிறந்த வழக்குரைஞரான நீதிபதி சர்.டி. முத்துசாமியின் வாழ்க்கை வரலாறு நமக்குத் துணைபுரியும். ஜ.க்ஷ. எஸ்ஸில் தேர்ச்சி பெற

  Continue Reading »

  உங்கள் முன்னோடிகளைக் கண்டுபிடியுங்கள்

  எந்த வழி நல்ல வழியோ, எந்த வழி சரியான வழியோ, எந்த வழி முன்னேற்றத்திற்குரிய வழியோ அந்த வழியில் செல்லுங்கள். மனம் போன போக்கெல்லாம் போகாதீர்கள் என்பது நமது முன்னோர்கள் நமக்குக் காட்டிய வழியாகும். முன்னேறியவர்கள்

  Continue Reading »

  முன்னோடிகளைப் பின்பற்றுவது

  நாம் உயர விரும்பும் துறையில், நமக்குமுன் நாம் விரும்புகின்ற அளவுக்க்உ உயர்ந்த நிலையை அடைந்தவர் யார் என்று காணவேண்டும். இதற்குப் பிறரை நாம் பின்பற்றுகிறோம் அல்லது பிரதிபலிக்கிறோம் அல்லது பார்த்துச் செய்கிறோம் என்று பொருள்

  Continue Reading »

  ஒரு சாதனையாளரின் சந்திப்பு

  பொறியாளர் திரு.கே. ஜெகதீசன்

  திரு.கே. ஜெகதீசன் ஒரு தொழில் முனைப்பாளர்; சிந்தனையாளர், எழுத்தாளர், கவிஞர், பொறியியல் துறையில் முதுநிலைப் பட்டதாரி. தாம் பயின்ற பி.எஸ்.ஜி. தொழில்நுட்பக் கல்லூரியிலேயே பத்தாண்டுகள் (1969-79) விரிவுரையாளராகப்

  Continue Reading »

  அந்தக் குழந்தை

  page starts – 11

  அந்தக் குழந்தை தரித்திரத்தில் வாழக்கூடியது என்று ஐயம் திரிபறக் கூறுகிறது சித்தர் வாக்கு. ஒன்பதாம் நாள் தரிக்கின்ற கரு. மிக உயர்ந்த செல்வ்வளம் கொண்ட குபேரயோகம் என்ற பெருத்த யோகமுடைய குழந்தையாக உருவாகும். பத்தாம் நாள் தரிக்கின்ற கரு காமம் மிகுந்த பிள்ளையாகவும், கெட்ட பழக்கங்கள் கொண்டதாய்த் தனக்கும், குடும்பத்திற்கும், குலத்திற்கும் அவமானம் கொண்டு வருவதாகவும் உருவாகும். பிதனோராம் நாள் தரிக்கின்ற கரு நோய் உள்ள குழந்தையாகும். பன்னிரண்டாம் நாள் கணவனும், மனைவியும் கூடுவது மிகச் சிறந்த செயல் என்றும், அப்படிப் பிறக்கின்ற குழந்தை பல கலைகளும் அறிவுநலன்களும் மிகுந்த மிகப்பெரிய பண்டிதனாகும் என்று உறுதி கூறப்பட்டிருக்கிறது. பதின்மூன்றாம் நாள் உருவாகின்ற குழந்தை அரசியல் ஞானமும், வருங்காலத்தை உணர்கின்ற குழந்தை விவேகமும் உடையதாகும். பதினான்காம் நாள் தரிக்கின்ற கரு, உலக இன்பங்களிலே திளைக்கின்ற போகியாகப் பிறக்கும். பிதனைந்தாம் நாளில் கரு, ஓர் அரசனுக்கு ஒப்பான வளங்களும் ஆற்றல்களும் உடையதாக நற்புகழோடு திகழும். பிதனாறாம் நாள் கூடிப் பிறக்கின்ற குழந்தை, பெரிய ஞானியாகவும், யோகியாகவும் தெய்வ ஆற்றல்கள் நிரம்பிய சித்தனாகவும் கூடி உருவாவதற்குரிய வாய்ப்புகள் உடைய நன்மகவாகும் என்றும் சித்தர் இலக்கியம் பேசுகிறது.

  இனி, குழந்தை பிறக்கின்ற நாளிகையை வைத்தும் சில கணக்குகளைச் சித்தர்கள் கூறியுள்ளார்கள். இந்தக் கணக்கு சோதிவியலின் நுட்பமான கணக்குகளோடு பொருந்தியதாக அமைந்திருக்கின்றது. இந்தக் கணக்கின்படி பகல் இரண்டாம் சாமத்திற்கும், இரவின் இரண்டாம் சாமத்திற்கும், நான்காம் சாமத்திற்கும், மிகச் சிறப்பான பல இயல்புகள் கூறப்பட்டுள்ளன. இந்தச் சாமங்களோடு அந்தந்த மாதத்தில் சூரியன் நிற்கின்ற நிலையையும், சந்திரன் நிற்கின்ற நிலையையும், பிற கோள்களின் நிலையையும் விரிவாக ஆராய்ந்து குழந்தையின் பிறப்பு, வளர்ப்பு, இயல்பு, ஆயுள், வாழ்வில் அடைகின்ற சாதனைகள் ஆகியவற்றை விரிவாகப் பேசுகிறது சித்தர் இலக்கியம்.

  இன்றைய விஞ்ஞானத்திலே காஸ்மோ பயாலஜி என்று கூறப்படுகின்ற அறிவியற்றுறையின் நுட்பங்களை ஆராய்கின்ற மேனாட்டு விஞ்ஞானிகள் புதிது புதிதாக்க் கண்டுபிடித்து வருகின்ற பல உண்மைகளோடு, இந்தக் கணக்கு வியக்கத்தக்க முறையிலே பொருந்தி வருகின்றது என்பது இங்கே குறிப்பிடத் தக்கதாகும். இந்த நவீன ஆராய்ச்சி இன்னும் முன்னேறும்பொழுது, ஐம்பூத ஆற்றல்களும் கோள்களின் இயக்கங்களும் உயிர்களின் பிறப்பு இறப்புகளை எப்படி வகைப்படுத்துகின்றன, வாழ்வை எவ்வாறு இயக்குகின்றன. வாழ்வின் போக்கை எப்படியெல்லாம் பாதிக்கின்றன என்ற அறிவியலின் உண்மைகள் மேலும் தெளிவடைய இடமிருக்கிறது. இவை அனைத்திற்கும் மூலாதாரமாக அமைவது ஒரு குழந்தையின் குண்டலினி என்கிற ஆன்ம மையத்தின் தொழிற்பாடேயாகும். ஐம்பூத ஆற்றல்களும், தாய் தந்தையர் அந்தக்குழந்தைக்கு அதன் பிறவியிலே தருகின்ற இயல்புகளும், அகப்புற ஆற்றல்களும், ‘ஜீன்ஸ்’ என்று இன்றைய விஞ்ஞானம் அழைக்கின்ற அடிப்படை உயிர் மையமும், எல்லாம் ஒன்றுகூடி மண்டலங்கொண்டு செயற்படுகின்ற நிலையே இந்தக் குண்டலினியின் ஆற்றல் மையமாகும். இந்த ஆற்றல் மையத்தை எவ்வாறு காண்பது, அதனை எவ்வாறு வளர்ப்பது என்கிற இரகசியங்களைக் கூறுகிற சித்தர் இலக்கியம், பிறப்பிலே கொண்டுவந்த உயிரின் திட்டங்களை எப்படியெல்லாம் மாற்றலாம், எப்படியெல்லாம் ஆற்றுப்படுத்தலாம் என்பதையும் எடுத்து இயம்புகிறது.

  இதனைத்தான் மடைமாறல் என்று திருமூலரும், மாற்றிப் பிறக்கும் வகை என்று பிற சித்தர்களும் கூறக் காணுகிறோம்.

  குண்டலி யோகம் என்று சித்தர்கள் கூறுகின்ற பயிற்சி முறையில் அடிப்படையாக அமைந்துள்ள கருத்து ஒன்று உண்டு. அதுவே ஐந்து புலன்களையும் இயக்குகின்ற முறை பற்றியது.

  உலக இச்சைகளிலே திரிகின்ற ஐம்புலன்களையும் இறைவனை நோக்கித் திருப்பவேண்டிய அவசியத்தையும், அதன் நற்பண்புகளையும் பற்றிப் பகவத்கீதை விரிவாக விளக்குகிறது. இந்த உண்மையைச் சித்தர்கள் தங்களுடைய போயமுறையிலே வற்புறுத்திக் கூறுகிறார்கள். வெளியே வெல்லுகின்ற ஐம்புல ஆற்றல்களையும் உள்முகமாகத் திருப்ப வேண்டும் என்கிறார்கள் ஞானிகள், குண்டலியின் பயிற்சிக்கு முதலாவது தேவை இதுதான்.

  வெளிமுகமாகச் செல்கின்ற ஐந்து புலங்களையும் உளுமுகமாகத் திருப்பவேண்டும். இதுவே குண்டலி யோகத்தின் அடிப்படையான முதலாவது பாடம் ஆகும்.

  இவ்வாறு சித்தர்கள் கூறுவதற்குக் காரணம் தர்மார்த்த காமமோட்சம் என்றும், அறம், பொருள், இன்பம், வீடு என்றும் குறிப்பிடுகின்ற நான்கும், இந்த உடம்பின் செயல்களினாலேதான் உண்டாகின்றன என்ற அடிப்படை உண்மையே ஆகும். இதைச் சித்தர்கள் கண்டு விளக்குகிறார்கள். எனவே இந்த உடல் அமைப்பின் ஐம்பூதக் கூறுகளை அவர்கள் மிகவும் விளக்கமாக ஆராய்ந்துபகுத்துச் சொல்கிறார்கள்.

  எண்ணங்களும் வாழ்க்கையும்

  7.மனமும் மகாத்மாவும்

  உலகத்திலுள்ள மக்களை மூன்று வகையினராகப் பிரிக்கலாம். முதற்பிரிவினர் சமுதாயத்தின் அடித்தளத்தில் இருப்பவர்கள். அவர்களைத் ‘தொழிலாளர்கள்’ எனக் கொள்ளலாம். இரண்டாவது பிரிவினர் நடுத்தளத்திலுள்ளவர்கள். அவர்களைப் ‘பணியாளர்கள்’

  Continue Reading »

  நற்பண்புகள் என்னும் நீரோடையில்…

  சமநிலை மனம்

  முன்னேற்றப் பாதையில் செல்பவர்கள் அவசரப்படாமல், பதட்டப்படாமல் சமநிலை மனத்தோடு செயல்படவேண்டும் நம்மை மகிழ்ச்சியில் ஆழ்த்துகின்ற செய்திகள் கிடைத்தாலும், நம் நிலை தளர்ந்தோ நம் நிலை கிளர்ந்தோ சென்றுவிடுதல் கூடாது. இச்

  Continue Reading »

  முன்னேறு….! முன்னேறு….! முன்னேறு….!!!

  உனது எழுச்சிக்குரல் கேட்டு
  உன்வழியே நடப்பதற்கு
  ஒருவரும் இல்லையாயினும்
  உன்வழி நீ நடப்பாய்!

  Continue Reading »

  இல.செ.க.வின் சிந்தனைகள்

  உங்களால் முடியும்

  உங்களால் முடியும் என்று அழுத்தமான தன்னம்பிக்கை கொள்வீர்களானால் அது முடிந்தே தீரும். (You cna do it if you believe you can) நீங்கள் எதை நினைக்கிறீர்களோ அதை அடைந்தே

  Continue Reading »