Home » Editorial » வெற்றியின் வித்து…!

 
வெற்றியின் வித்து…!


admin
Author:

மனம் நொறுங்கி
மனிதன் வாழ்ந்து
வெற்றி கண்டதாய்
குறளிலும்… காணவில்லை!

குலைந்துபோன
அவநம்பிக்கையுடன்
குழம்பி நாளும்
குட்டையாயிருந்து
தீர்வு மீனைப் பிடிப்பது எப்படி?

வித்தையின் வேர்களைக்
கண்டறி…
தீர்வுகளின் தடங்களைத்
தேடிப்பிடி…

கடலலையென உன்
கைக்குள்ளேயே…
தன்னம்பிக்கை இருக்கும் போது
ஆமையெனச்
சுருண்டு கிடப்பது ஏன்?

காலம் கனிவிக்கும்
வெற்றியின் வித்தை
காளையென
நெஞ்சை நிமிர்த்து
அஞ்சாமல்… ஆண்மையோடு
ஆற்றலைப் பரப்பி ஆவன செய்!


Share
 

No comments

Be the first one to leave a comment.

Post a Comment


 

 


June 1996

நன்றியோடு வாழ்வோம்
எண்ணங்களும் வாழ்க்கையும்
ஒரு தேர்த்திருவிழா…
வெற்றியின் வித்து…!