நன்றியோடு வாழ்வோம்
நன்றி மறப்பது நன்றன்று என்றார் வான்புகழ் கொண்ட வள்ளுவர். மனித வாழ்வு ஒவ்வொரு மனிதனுடனும் இணைந்துள்ளது. பள்ளியில் படிக்கும் மாணவனுக்கும் ஆசிரியருக்கும் ஆசிரியர் மாணவர் உறவு உருவாகின்றது. ஆசிரியரின் பெருமையை காக்க மாணவன் முற்படுகிறான். மாணவன் சிறப்பாக படித்து உலகம் போற்றும் மாணவனாக மிளிர ஆசிரியர் ஆசைப்படுகின்றார்.
பஸ்ஸில் பயணம் செய்கின்றோம். ஓட்டுநர் பயணிகளை பத்திரமாக அவரவர்கள் போக வேண்டிய இடத்தில் இறக்க வேண்டிய பொறுப்பில் இருக்கின்றார். பயணம் இடர்பாடுகள் இல்லாமல் இனிமையாக அமைய மற்ற பயணிக்கு தொந்தரவு இல்லாமலிருக்க சக பயணிகளின் ஒத்துழைப்புத் தேவைப்படுகின்றது.
இப்படி மனித வாழ்வு ஒவ்வொருவரும் ஏதாவது ஒருவகையில் இணைந்து போகும் நிலையில் தான் அமைந்துள்ளது.
ஒவ்வொருவரும் அவரவர்களுக்கென்று தனித்தனிப் பொறுப்பு இருந்தாலும் அதன் மூலம் நன்மை அடைந்தவர்கள் நன்றியோடு புன்னகை பூத்தால் உதவியவரின் உள்ளம் குளிர்ந்து போகும். தன் பணியை பொறுப்பை இன்னும் பலர் நன்மையடைய வாய்ப்பு ஏற்படுகின்றது.
ஏதோ ஒரு வகையில் மனிதர்கள் ஒவ்வொரும் இணைந்து வாழ வேண்டிய சூழ்நிலையில் இருக்கின்றோம். உறவு முறையில் உலகம் அமைந்துள்ளது. அந்த உறவு முறை நட்பு முறையில் அமைவது அவசியம். ரோல் ரிலேசன்சிப்பை உணர்ந்தாக வேண்டும். ஒரு கணவன் என்றால் அவர் ஆற்ற வேண்டிய பணிகள் உள்ளன. தாய்க்கு சில கடமைகள் உள்ளன.
உணர்வுகளை நட்பால் உருவாக்கி கொள்ள வேண்டும். தினமும் பார்க்கின்றவர்களிடம் நட்பு உறவை வளர்த்துக் கொள்ள வேண்டும். மனைவியை நட்பாக நண்பராக ஏற்றுக்கொண்டு பழக வேண்டும். வெறும் மனைவியாக மட்டும் அதாவது – மனைவி என்றால் சமைக்க வேண்டும் – கிழிந்து போன பட்டனைத் தைத்து வைக்க வேண்டும் – துவைக்க துணிகளை அயன் செய்து வைக்க வேண்டும் என்று எண்ணாமல் அவளை மனித நேயத்துடன் இனிய நண்பராக ஏற்றுக்கொண்டு வாழ்ந்தால் அதில் கிடைக்கும் மகிழ்ச்சியே அலாதி. நண்பராக ஏற்றுக்கொண்டால் உரிமை எடுத்துக் கொண்டு பேசலாம். சலுகையை ஏற்படுத்திக் கொள்ளலாம். உரிமையுடன் விவாதித்து முடிவெடுக்கலாம். அது நலன் பயக்கும். நன்மை தீமைகளை ஆராய வழிவகுக்கும். நல்ல முடிவாக அமையும்.
இப்படி வாழ்நாள் முழுவதும் பின்னிப் பிணைந்தவர்களே ஒருவருக்கொருவர் நன்றி சொல்லிக் கொண்டால் இல்லறம் மகிழ்ச்சிக் கடலில் துள்ளும்.
தினசரி பார்க்கின்ற ஓட்டுநர் தான் ஆயிலும் வண்டியை விட்டு இறங்கும் போது ஒரு புன்னகையை நன்றியாக உதிர்த்துவிட்டு வந்தால் அந்த ஓட்டுநர் மனதில் நீங்கள் இடம் பெறுவீர்கள். ஒரு நாளில் நீங்கள் தாமதாக ஓடி வந்தாலும் உங்களுக்காக ஓடும் பஸ்ஸை ஓட்டுநர் நிறுத்தி உங்களை ஏற்றிச் செல்லுவார். இது பார்வை தந்த உறவு. நன்றியால் விளைந்த நட்புறவு.
நாம் கடைக்குச் செல்கிறோம். பொருட்களை வாங்குகிறோம். பணம் கொடுக்கின்றோம். விடை பெறும்போது நன்றீங்க வருகிறேன் என்று சொல்லிப் பாருங்கள். அடுத்த முறை நீங்கள் அந்த கடைக்குச் செல்லும்போது எவ்வளவு கூட்டம் இருந்தாலும் உங்களுக்கு தனி முக்கியத்துவம் கொடுப்பதை நீங்கள் உணரலாம்.
நெடுஞ்சாலை கூட நன்றி சொல்வதை நாம் பார்த்திருக்கிறோமல்லவா? மாவட்ட எல்லை முடிந்தது நன்றி மீண்டும் வருக என்ற போர்டுகளை மாவட்ட எல்லையில் நெடுஞ்சாலைத் துறையினர் வைத்திருப்பார்கள்Ð
திரைப்படம் முடிந்தவுடன் நன்றி என்று போடுவதையும் பார்த்திருக்கின்றோம். விமான பயணிகள் இறங்கும்போது விமான பணிப்பெண்கள் இரு கரங்கûள் கூப்பி நன்றி சொல்வதைப் பார்க்கும் போதும் நம் உள்ளத்தில் குளிர்ச்சியும் மகிழ்ச்சியும் குடி கொள்கிறது.
ஒருவரிடமிருந்து உதவி பெற்றால் தான் நன்றி சொல்ல வேண்டும் என்றில்லை. உள்ளம் உவந்தாலே நன்றி சொல்ல வேண்டும்Ð ஆனால் நன்றியை எதிர்பார்க்கக்கூடாது. லிப்டில் உடன் வந்தவர் லிப்டைவிட்டு இறங்கும்போது நன்றி சொல்லுவதை பார்த்திருக்கின்றோம் அல்லவாÐ உடன் பணியாற்றுயவர் ஓய்வு பெறும்போது விடைபெறுவிழா நடத்துகின்றோமல்லவாÐ அது கூட நன்றி தெரிவிக்கும் கூட்டம் தான். தேர்தலில் தோற்றவர்கள்கூட நன்றியறிவிப்பு கூட்டங்கள் நடத்துவதைப் பார்க்கின்றோம். ஜெயித்தவர்கள் மட்டும் தான் நன்றி சொல்ல வேண்டும் என்ற கட்டாயம் இல்லை.
இதுக்கெல்லாம் அவர் நன்றியை எதிர்பார்க்க மாட்டார் என்று நீங்களே முடிவெடுத்துக் கொள்ளக்கூடாது. அவர் எதிர்பார்க்காவிட்டால் என்ன? நாம் நன்றி சொன்னால் அடுத்த உதவிக்கும் தயங்காமல் செல்லலாமேÐ அவ்வாறன்றி காரியம் முடிந்தவுடன் கண்டுக்காமல் போய்விட்டால் மீண்டும் அவரைச் சந்தித்து வேறு ஒரு உதவி கேட்க உங்களுக்கே தயக்கம் ஏற்படும். அவரும் இவனுக்கு வேற வேலை இல்லை என முகம் சுழிக்க வாய்ப்புண்டு.
உதவி என்பது உங்களுக்குத் தேவைப்படாவிட்டாலும் உங்களது நண்பர்களுக்குத் தேவைப்படலாம். உறவினருக்கு ஏற்படலாம். எனவே இனி இவரிடம் ஏன் வரப்போகிறோம் என்று முடிவெடுத்தல் கூடாது. உங்களுக்கு இன்று நன்னடத்தைச் சான்றிதழ் வழங்கிய எம்.எல்.ஏ. நாளை அமைச்சர் ஆகலாம். இன்று ஒரு சின்ன உதவி செய்த அதிகாரி நாளை பெரிய அதிகாரியாக பதவி உயர்வு பெறலாம். அல்லது பெரிய அலுவலகத்தில் பணியாற்ற வாய்ப்பு கிடைக்கலாம். எனவே மனித சந்திப்புக்கள் – மனித உறவுகள் தொடர்ந்து நடக்கக்கூடியது; முடிவற்றது.
உங்க தாத்தாவும், நானும் கிளாஸ்மேட்ஸ். நிறைய சந்தர்ப்பத்திலே எனக்கு உதவி இருக்கின்றான். ஒரு வேளை இன்று என் மகன் பேரக் குழந்தைகள் இன்று இவ்வளவு தூரம் முன்னேறி இருக்கின்றதற்கு அவனும் ஒரு காரணம் என்று சிலர் வெளிப்படுவதையும் பார்க்கலாம்.
ஏதேச்சையாக நடந்தாலும் இன்முகத்துடன் நன்றி சொல்லும்போது இருவருமே மகிழ்ச்சியடைகின்றனர்.
நன்றி சொல்லுவது உரிய நேரத்தில் நன்றி சொல்ல வேண்டும். காலங்கடந்து நன்றி சொல்வது கிண்டல் செய்தவற்கு சமமாகும். உரிய நாளில் உரிய முறையில் உள்ளம் உவந்து நன்றி சொல்லுவது அவசியம்.
எல்லாவற்றிற்கும் மேலாக இறைவனுக்கு நன்றி சொல்லும் பழக்கத்தை பழகிக் கொள்வது – வாழ்க்கைக்க வேண்டிய பயனுள்ள பழக்கமாகும். தினசரி நன்றி சொல்ல வேண்டும். வாய்ப்பு கிடைக்கும் போதெல்லாம் நன்றி சொல்ல வேண்டும்.
இறைவனுக்கு நன்றி சொல்லுவதற்காகவே தியானம்Ð கோவில்கள் ஆங்காங்கே கட்டப்படுவது மனிதன் சிரமப்பட்டால் நன்றி சொல்லவே. ஆனால் இறைவன் நன்றி எதிர்பார்த்துக் கொண்டிருக்கவில்லை.
இந்த நாளை இறைவன் நமக்களித்திருக்கின்றான். நல்லன நடந்தன. நாம் இந்த நாளில் உயிர்வாழ இறைவன் வாய்ப்பளித்திருக்கின்றான். இந்த நாளை முழுமையாக துய்க்க அனுமதி தந்துள்ளான். இறைவன் அதற்காக நாம் நன்றி சொல்ல வேண்டும்.
இப்படி இறைவனுக்கு நன்றி சொல்லுவது நமது உள்ளத்திற்கும் உடலுக்கும் நல்லது. வாழ்வில் உறுதி ஏற்படும் நல்லன நடக்கும் என்று நம்பிக்கை ஏற்படும்.
ஆள் உயர மாலை போட்டுத்தான் நன்றி சொல்ல வேண்டும் என்ற அவசியமில்லை. உள்ளம் நிறைந்த ஒரு புன்னகை போதும். நன்றியை ஏற்பதிலும் மனப்பக்குவம் வேண்டும். பிறர் நம்மிடம் நன்றி சொல்லும்போது – அட இதற்கெல்லாம் எதுங்குங்க நன்றி என்னால் முடிந்ததைச் செய்தேன். என்றோ பரவாயில்லைங்க என்று புன்முறுவலோடோ ஏற்புரை சொல்ல வேண்டும். அவ்வாறன்றி இம் இம் இந்த நன்றி சொல்ல இவ்வளவு நாளா? அல்லது இப்பத்தான் கண் தெரிந்ததா? நன்றி சொல்ல: என்றோ உன் நன்றியை குப்பைத் தொட்டியில் கொண்டு போய் போடு என்றோ கோபத்துடன் சொல்லக்கூடாது. அது இருவருக்கும் பயனற்றது.
நன்றியோடு இருப்பது நம் நல்வாழ்க்கைக்கு நல்லது. நட்பைத் தொடர அதுவகை செய்யும். வாழ்நாள் முழுதும் தொடரும் மனித உணர்வுகளின் உறவு வலுப்படும். வளர்ச்சிக்கு அது வழிகாட்டும். எங்கும் வெற்றி. எதிலும் மகிழ்ச்சி என்ற நிலை உருவாக வாய்ப்புக் கிட்டும்.
நன்றியோடு இருப்போம். நலன் பெறுவோம். நல்வாழ்வு வாழ்வோம்.
விடைபெறுகிறேன். நன்றி… வணக்கம்!
0 comments Posted in Articles