Home » Articles » தொடர்ந்து முயற்சி

 
தொடர்ந்து முயற்சி


admin
Author:

ஒரு செடி வைக்கிறோம். அது வேர் பிடித்துக்கதழைக்கின்றது. வளர்கின்றது. மரமாகின்றது. பூக்கின்றது. பருவத்திலும் அதற்குரிய பாதுகாப்புகளை பராமரிப்புக்களைத் தொடர்ந்து செய்து கொண்டே வரவேண்டும். நடுவதோடு நமது கடமை முடிந்தது என்று நமது முயற்சிகளை நிறுத்திக் கொண்டால் கனிகள் பறிக்க முடியாது. இலைகளை வளர்ப்பதிலும், வண்டி வாகனங்களைப் பராமரிப்பதிலும் தொடர்ந்த முயற்சி தேவை. இதனையே அலுவலகங்களில் தொடர்ந்த நடவடிக்கை என்பார்கள். (Follow up action) ஒரு கடிதம் எழுதிவிட்டால், காரியம் நடந்து விடும் என்று எண்ணுவது தவறு. 15 நாட்களுக்குப் பிறகு நினைவூட்ட வேண்டும். தேவையானால் மீண்டும் ஒரு முறைகூட நினைவூட்ட வேண்டும். இவ்வளவும் ஏன் அந்தச் செயல் முடியும் வரை அந்தக் கோப்பை (file) பார்வையில் வைத்துக் கொண்டே நடவடிக்கை எடுத்துத்தான் ஆகவேண்டும். சாதனை படைக்கின்றவர்கள் எல்லாம் இந்த வழியைத்தான் பின்பற்றி வருகிறார்கள்.

ஒவ்வொர்க்கும் முயற்சி என்பது இன்றியமையாதது ஒன்றாகும். உங்களுக்குத் தண்ணீர்த் தாகம் எடுக்கின்றது. தண்ணீரும் உங்களுக்கு முன்னால் குவளையில் வைக்கப்பட்டு இருக்கிறது. எடுத்துக் குடித்து உங்கள் தாகத்தைத் தணித்துக் கொள்ள வேண்டியது உங்கள் கடமை. எடுத்துக் குடிப்பதற்கு நீங்கள் செய்ய வேண்டியது எழுந்து குவளையை எடுப்பதும் தான். இந்த முயற்சி உங்கள் எல்லாச் செயல்களிலும் இருக்கட்டும். முயற்சி திருவினை (கொண்டு வந்து சேர்க்கும்) ஆக்கும்.


Share
 

No comments

Be the first one to leave a comment.

Post a Comment


 

 


May 1996

தொடர்ந்து முயற்சி
உங்கள் நெஞ்சம்
வேண்டுகோள்
மூன்றாவது…. கை!
திருவள்ளுவர் எச்சரிக்கிறார்
தன்னம்பிக்கை? இறுமாப்பா?
கோபத்தால் ஏற்படும் தீமைகள்
எண்ணங்களும் வாழ்க்கையும்
உறுதியா? பிடிவாதமா?
எண்ணம்
குழந்தைகள் நடை பயில்வதைப் பாருங்கள்