Home » Articles » உங்கள் நெஞ்சம்

 
உங்கள் நெஞ்சம்


admin
Author:

நல்வாழ்விற்கு ஏங்கும் இளைஞர்களுக்கும், யுவதிகளுக்கும், அன்பான, ஆறுதலான அற்புதமான வழிகாட்டியே நம் தன்னம்பிக்கை. உடல், உள்ளம், அறிவு, ஆன்மா, வாழ்வு, ஆகிய ஒப்பற்ற இவ் ஐந்தும் ஒருங்கே வளர மலர்ச்சியும், வளர்ச்சியும் ஊட்டுவதே தன்னம்பிக்கை.

மனிதனை மாமனிதனாக்கவும், மாமனிதனை தேவனாக்கும் முயற்சியே நம் தன்னம்பிக்கை.

அன்புடன்,
பி.என். இலட்சுமணன், கொங்கரை

தன்னம்பிக்கை ‘ஏப்ரல் 96’ இதழ் படித்தேன். குறைவான பக்கங்களுடன் வெளிவருவதாலும் நிறைவான தகவல்களை தன்னம்பிக்கையுடன் ஊட்டியிருந்தது உண்மை.

இளைய தலைமுறையினருக்கு தேவையான சில விசயங்கள் பயனுள்ளதாக இருந்தது. மனோவியல் பிரச்சனைகள் பற்றியும், “உங்க் முன் ஏழு கேள்விகளும், தன்னம்பிக்கைகளை பற்றிய முக்கிய அம்சமாய் இருந்தது.

இந்த தன்னம்பிக்கை இதழ் மனித வரலாற்றில் இன்றைய கால கட்டத்தில் சரியான மாற்றத்தை மனிதனுக்கான தேவையை கொண்டு என்பதே என்னுடைய நம்பிக்கை!

கருப்பரசன், கோவை – 2

கேள்வி: முக்கியமாய் ஒன்று கவிதைகள் ஏன் அதிகம் வெளியிடுவதில்லை? இலக்கியத்திலும் மனிதனுக்கு தேவையான அனைத்தும் இருக்கும்போது அதை ஏன் விட்டு வைக்க வேண்டும்?

இளைஞர்களுகு தேவையான வரலாறுகளும், அதன் உண்மைகளையும் இலக்கிம் தந்திருகும் போது அவற்றையும் நாம் கற்று வாழ்வில் தெளிவுற எத்தனையோ இருக்கின்றதே? அவற்றையும் இணைத்து வெளியிடலாம் என் எண்ணம்.

கருப்பரசன், கோவை – 2

பதில்: உங்கள் கருத்து வரவேற்கத்தக்கது: இலக்கிய இதழ்கள் குறிப்பாக அவற்றை அலசி ஆராய்கின்றன. தன்னம்பிக்கை தற்கால இயலுக்கேற்ற அவசரமான சூழலுகுத் தகுந்தபடி கண்ணியாகப் பயன்பட வேண்டுமென்பது அமரர் இல.செ.க. அவர்களின் இளைஞர்கள் ஆவலுடன் எதிர்பார்க்கும் ஆதங்கம். பக்கங்கள் கூடுகையில் ஆலோசிக்கப்படும்.


Share
 

No comments

Be the first one to leave a comment.

Post a Comment


 

 


May 1996

தொடர்ந்து முயற்சி
உங்கள் நெஞ்சம்
வேண்டுகோள்
மூன்றாவது…. கை!
திருவள்ளுவர் எச்சரிக்கிறார்
தன்னம்பிக்கை? இறுமாப்பா?
கோபத்தால் ஏற்படும் தீமைகள்
எண்ணங்களும் வாழ்க்கையும்
உறுதியா? பிடிவாதமா?
எண்ணம்
குழந்தைகள் நடை பயில்வதைப் பாருங்கள்