Home » Articles » வேண்டுகோள்

 
வேண்டுகோள்


admin
Author:

நாட்டையும் நாட்டுமக்களையும் அரசியல் கொள்ளையர்களிடமிருந்து மீட்டுப்பாதுகாக்கப்படவும் நாட்டின் முன்னேற்றம் காணவும் …..

1. சமுதாய முன்னேற்றத்திற்கு மக்கள் திருமணம். மஞ்சள் நீர் விழா. ஆண்டு நிறைவு விழா, இறப்புச் சடங்குங்கள் போன்ற சமூகக்காரியங்களுக்குக் கடன்பெற்று வீண் ஆடம்பரச் செலவு செய்வது தவிர்க்கப்பட வேண்டும்.

2. அரசியல் கட்சிகள் நடத்தும் மாநாடுகளிலும் பேரணிகளிலும் கலந்து கொள்ள கூலி வாங்கிக்கொண்டு “பொதுமக்கள் – குடிமக்கள்” தங்கள் பொன்னான நேரத்தையும், காலத்தையும் வீணாக்குவது தவிர்க்கப்பட வேண்டும்.

3. பொது சுகாதாரக்கெடுதி, ஆக்கிரமிப்புக்கள், போக்குவரத்து விதிகளை மீறுவது போன்ற ஒழுங்கீனங்களைச் செய்பவர்களுக்கு கடுமையான அபராதம் (Spot Fine) விதித்து வசூல் செய்ய வேண்டும்.

4. அரசியல்வாதிகள், படித்தவர்கள், பட்டம் பெற்றவர்கள், வேலைகளிலிருப்பவர்கள், பணக்காரர்கள் ஆகியோர் சாதாரண ஏழை எளிய பாமர மக்களை (பாட்டாளிகள்) விட அதிக அதிவில் சட்ட விரோத சமூகவிரோத செயல்களில் ஈடுபடுகின்றனர். இவர்கள் நீதியையும் நேர்மையையும் நிலைநிறுத்தினால்தான் நாடு வளம்பெறும்.

5. அரசியல் சட்டங்கள், சமூக ஒழுக்கமுறைகள் முறையாகப் பேணிக்காக்கப்பட நாட்டுக்கும் நாட்டு மக்களுக்கும் நல்ல எண்ணங்களுடன் தொண்டாற்றும் பத்திரிக்கைகள், எழுத்தாளர்கள், சினிமாத்துறை மற்றும் நாடகத்துறை கலைஞர்கள், பொதுநலத் தொண்டர்கள், தலைவர்கள், நீதிபதிகள், சமுதாய நற்பணி மன்றத்தினர். அரிமா சங்கதினர். சுழற்சங்கத்தினர், மாதர் சங்கத்தினர், மாணவர் மன்றத்தினர், ஆசிரியர் கழகத்தினர், வானொலி நிலையத்தினர், தொலைக்காட்சி நிலையத்தினர் ஆகிய அனைத்து துறையினருக்கும் தொடர்ந்து தொண்டாற்ற வேண்டியது முக்கியமான கடமையாகும்.

தமிழ்நாடு மாநில சமுதாய மேம்பாட்டுக் கழகம்


Share
 

No comments

Be the first one to leave a comment.

Post a Comment


 

 


May 1996

தொடர்ந்து முயற்சி
உங்கள் நெஞ்சம்
வேண்டுகோள்
மூன்றாவது…. கை!
திருவள்ளுவர் எச்சரிக்கிறார்
தன்னம்பிக்கை? இறுமாப்பா?
கோபத்தால் ஏற்படும் தீமைகள்
எண்ணங்களும் வாழ்க்கையும்
உறுதியா? பிடிவாதமா?
எண்ணம்
குழந்தைகள் நடை பயில்வதைப் பாருங்கள்