Home » Articles » மூன்றாவது…. கை!

 
மூன்றாவது…. கை!


கவிதாசன்
Author:

நமது
கையைப் பிடித்து
இலட்சிப் பாதையில்
அழைத்துச் செல்கின்ற
வெற்றியின்கை!

எவரெஸ்ட்டின்
தலையில் உட்காரவைத்து
மணிமகுடம் சூட்டுகிற
முயற்சியின் கை!

வீழ்ச்சியை வீழ்த்த
விசுவரூபம் எடுக்கும்
ஆற்றின் கை!

சருக்கும் –
தோல்வி பள்ளத்தாக்குகளை
கடக்க உதவும்
ஊன்றுகோலாகும்
உணர்ச்சிமிகு கை!

நம்
இரண்டு கைகளையும்
இயக்கும் மூன்றாவது கை!
அதுதான்… நமது
தன்னம்பிக்கை!

கவிஞர் கவிதாசன்
கோவை

 

No comments

Be the first one to leave a comment.

Post a Comment


 

 


May 1996

தொடர்ந்து முயற்சி
உங்கள் நெஞ்சம்
வேண்டுகோள்
மூன்றாவது…. கை!
திருவள்ளுவர் எச்சரிக்கிறார்
தன்னம்பிக்கை? இறுமாப்பா?
கோபத்தால் ஏற்படும் தீமைகள்
எண்ணங்களும் வாழ்க்கையும்
உறுதியா? பிடிவாதமா?
எண்ணம்
குழந்தைகள் நடை பயில்வதைப் பாருங்கள்