Home » Cover Story » திருவள்ளுவர் எச்சரிக்கிறார்

 
திருவள்ளுவர் எச்சரிக்கிறார்


கந்தசாமி இல.செ
Author:

உங்களுக்குத் திருவள்ளுவரை மிக நன்றாகவே தெரியும். அவர் நம் எல்லோருக்கும் சொந்தக்காரர். அவர் காலத்தைச் சரியாகப் பயன்படுத்தாதவர்களுக்கு எச்சரிக்கை விடுகின்றார்.

நான் என்பது வேறொன்றும் இல்லை. அது ஒரு கூரிய கத்தியைப் போன்றது. நம்முடைய வாழ்நாளை அது அறுத்துக் குறைத்துக் கொண்டே வருகிறது. ஒருவர் எண்பது ஆண்டுகள் வாழக்கூடியவர் என்று வைத்துக்கொண்டால், அவருடைய வாழ்நாளில் இன்று ஒருநாள் முடிந்துவிட்டது. இன்றைய நாள் என்ற கத்தி, அவரது ஒரு நாளை அறுத்துக் குறைத்து விட்டது. நாளையும் நாளை மறுநாளையும் அது நம்முடைய வாழ்நாளைக் குறைப்பது உறுதி. அதனால் கவனமாக இருந்து இன்றைய நாளை நீங்கள் நல்ல முறையில் பயன்படுத்துங்கள் என்று எச்சரிக்கின்றார்.

அதனால் காலம் என்பது வேறொன்றும் அல்ல – அது நமது வாழ்க்கைதான். ஏன்? காலம்தான் நமது உயிர். அந்த உயிரைப் போற்றுவதில்தான் நமது வாழ்க்கையின் வளம் அடங்கியிருக்கிறது.

இன்று உங்கள் நாளை எவ்வாறு பயன்படுத்தினீர்கள்? இன்று முதல் புதிய திட்டத்தோடு உங்கள் நாளைப் பயன்படுத்த வழிவகுத்துக் கொள்ளுங்கள். அதனை இப்போதே தொடங்குங்கள்.

டாக்டர். இல.செ.கந்தசாமியின் இதுவோ நாகரிகம்? என்ற நூலிலிருந்து

 

No comments

Be the first one to leave a comment.

Post a Comment


 

 


May 1996

தொடர்ந்து முயற்சி
உங்கள் நெஞ்சம்
வேண்டுகோள்
மூன்றாவது…. கை!
திருவள்ளுவர் எச்சரிக்கிறார்
தன்னம்பிக்கை? இறுமாப்பா?
கோபத்தால் ஏற்படும் தீமைகள்
எண்ணங்களும் வாழ்க்கையும்
உறுதியா? பிடிவாதமா?
எண்ணம்
குழந்தைகள் நடை பயில்வதைப் பாருங்கள்