Home » Articles » தன்னம்பிக்கை? இறுமாப்பா?

 
தன்னம்பிக்கை? இறுமாப்பா?


ஆசிரியர் குழு
Author:

இது என்னால் முடியும் என்பது தன்னம்பிக்க. எப்படியும் முயன்று இதைச் செய்து முடித்து விடுவேன் என்பது தன்னம்பிக்கை. அவனைப்போல் நானும் இதனைச் செய்து முடித்துவிட முடியும் என்ற தனது அனுபவத்தையும் கலந்து சொல்வது தன்னம்பிக்கை. தன்னம்பிக்கை என்பது அடக்கமும் உறுதியும் கொண்டது. தன்னம்பிக்கை நட்பை உருவாக்கும்.

இறுமாப்பு

இது என்னால் தான் முடியும் என்பது இறுமாப்பு, என்னைத் தவிர வேறு யாராக இருந்தாலும் இதைச் செய்து முடித்திருக்க முடியாது என்பது இறுமாப்பு.. யாரையும் எடுத்தெறிந்து பேசுவது இறுமாப்பு. யாரையும் துச்சமாக்க் கருதுவது இறுமாப்பு. அடங்கா தன்மையும் ஆரவாரமும் கொண்டது இறுமாப்பு. இறுமாப்பு வெறுப்பை மட்டுமே விளைவிக்கும். இதோ இன்னும் ஒரு காட்சியைக் காணுங்கள்.

ஒருவர் தொலைபேசியில் பேசிக்கொண்டிருக்கிறார். உரையாடல் இப்படி நடக்கிறது.

“நான் தான் தலைவர் பேறேன்னு சொல்லு”

” அவர் வெளியில் நின்றுகொண்டு இருக்காருங்க”

“அட” நான் கூப்பிடரேன்னு சொல்லையா”

“ஐயா யாருன்னு தெரிஞ்சுக்கிளாங்களா?”

“தலைவர் பேசறார்னு சொல்லு”

“சரிங்க.. சரிங்க சொல்லறேனுங்க”

……………….

“ஹலோ, ஹலோ”

“நான் தானையா பேசறேன்”

“வணக்கமுங்க”

“வணக்கம் கிடக்கட்டும். நான் சொன்னதா அவர்கிட்டச் சொன்னையா?”

“சொன்னனுங்க அவர் அது முடியாதுன்னு சொல்லிட்டாருங்களே”

“என்ன? என் பெயரைச் சொல்லியுமா? சரி நான் பார்த்துக்கிறேன். போனை வை”. இப்படி எண்ணிப்பாருங்கள். நான் என்ற தொணிக்கிறது என்று எண்ணிப்பாருங்கள். நான் என்ற ஆணவம் நிறைந்து காணப்படுகிறது. நான்தான் என்னால்தான் – என்னை யார் என்று நினைத்தாய் இதெல்லாம் நான்தான் செய்தேன. இப்படி ஒரு செருக்கு – ஆணவம் – இறுமாப்பு, தற்பெருமை இவைகள் எல்லாம் ஒரு மனிதனிடம் இருக்கின்ற ஆற்றலை – திறமையை பின்னுக்கு தள்ளி தோல்வியை உண்டாக்கும்.

தன்னம்பிக்கையால் பேசுவது வேறு – மேற் சொன்னபடி செருக்கினால் பேசுவது வேறு என்பதை தன்னம்பிக்கை உடையவர்களே முதலில் தெளிவாகத் தெரிந்துகொள்ள வேண்டும். இல்லாவிடில் தன்னம்பிக்கை பிறரால் தவறாகப் புரிந்து கொள்ளப்பட்டு ஒருவனுக்கு தோல்வியை வரவழைத்துவிடும். செருக்கு என்பது என்ன? பிறரை மதியாமை, ஆணவம் என்பது பிறர் நம்மிடம் வந்து பேசும்போதும் அவரிடம் பேசாமலேயே இருந்துவிடுவது. தற்பெருமை என்பது தன்னிடம் உள்ளவைகளை எல்லாம் பேச்சிலும் நடையிலும் கடைவிரித்துக் காட்டுவது இவற்றோடு திமிர் என்பதும் உண்டு. எதிர் மறையாகவே எதையும் செய்வது. அவை எல்லாம் தன்னம்பிக்கயை அழிக்கும் தீய பண்புகளாகும்.

தன்னம்பிக்கை என்பது அடக்கமானது. ஆழமானது. தெளிவானது. துணிவானது. தன்னம்பிக்கை உள்ளவன் துள்ளமாட்டான். அவசரப் படமாட்டான். ஆரவாரம் செய்யமாட்டான். அமைதியாகப் பணியைத் தொடங்குவான். எத்தனை எதிர்ப்புகள் வந்தாலும் அவற்றை எல்லாம் தாங்கித் தாங்கி மென்று விழுங்கி தொடர்ந்து பணியினைச் செய்வான். முடிவு தன்னம்பிக்கை உள்ளவனுக்கு வெற்றியாக இருக்கும். அடக்கம், தெளிவு, துணிவு இவறின் மறுபெயரும் ஒரே பெயரும் தன்னம்பிக்கை என்பது தான். இந்த பண்புகள் நம்மிடம் எந்த அளவில் இருக்கிறது என்று உரைத்துப் பார்த்து, வேண்டாதவற்றைக் கொஞ்சம் கொஞ்சமாகக் குறைத்துக்கொள்ள மாறக்கூடியவை. மறையக்கூடியவை. இவைகள் நல்லது. ஆனால் இறுமாப்போடு இருந்து விடுதல் கூடாது. உங்களை நீங்கள் இந்தக் கருத்துக்களை கொண்டு உரைப்புப்பாருங்கள். நீங்கள் பேசுகின்றவற்றில் நீங்கள் அதிகமாக் கவனம் செலுத்தவேண்டும். எந்தக் கருத்தையும் அழுத்தம் திருத்தமாக்க் கூறுங்கள். ஆனால் அதில் ஒரு பணிவு இருக்கட்டும். பணிவு நமக்கு அன்பானவர்களை தேடிக்கொண்டு வந்து சேர்க்கும்.

எடுத்தெறிந்து பேசுவது, வெட்டு ஒன்று துண்டு இரண்டு என்று பேசுவது நமக்கு எதிரிகளைத்தான் கொண்டுவந்து சேர்க்கும்.

 

No comments

Be the first one to leave a comment.

Post a Comment


 

 


May 1996

தொடர்ந்து முயற்சி
உங்கள் நெஞ்சம்
வேண்டுகோள்
மூன்றாவது…. கை!
திருவள்ளுவர் எச்சரிக்கிறார்
தன்னம்பிக்கை? இறுமாப்பா?
கோபத்தால் ஏற்படும் தீமைகள்
எண்ணங்களும் வாழ்க்கையும்
உறுதியா? பிடிவாதமா?
எண்ணம்
குழந்தைகள் நடை பயில்வதைப் பாருங்கள்