Home » Editorial » எண்ணம்

 
எண்ணம்


admin
Author:

இன்றைய இளைய தலைமுறையினர் நமது அனுதாபத்திற்கு உரியவர்கள். பள்ளிகளிலும் கல்லூரிகளிலும் படிக்கும் வரை அவர்கள் சமுதாயத்தின் வெறுப்புக்கு ஆளாகிறார்கள் என்பது உண்மையே. கல்விநிலையங்களில் படிக்கும்வரை அவர்கள் கணநேரத்தில் ஒன்று கூடி விடுவார்கள். இனி அசைக்க முடியாது என்று நினைக்கும் ஆட்சி பீடங்களையும் அசைத்துக் காட்டுவார்கள். அத்தகைய ஆற்றல் வாய்ந்த அவர்கள் படிப்பு முடிந்ததும், தனித்தனியாக த்த்தம் வீடுவந்து சேர்ந்ததும் வலிமை இழந்த நிலையில், தங்களைத் தாங்களே தாங்கிக்கொள்ள முடியாமல், சிட்டுகளாய் பறந்த நிலைமாறி, சிறைப் பறைவைகள் போல மருண்டு பார்க்கிறார்கள்.

வேலைதேடி அலைகிறார்கள். அலைந்தலைந்து எந்த வேலையும் கிடைக்காமல் சோர்ந்து சோர்ந்து போகிறார்கள். படிக்கும் போதிருந்து நிலை தலைகீழாக மாறிப்போய்விட்டது. அவர்கள் இப்போது கேட்பதெல்லாம் பதவி அல்ல; ஏதேனும் ஒரு வேலைதான். ஆனால் அது மட்டும் கிடைக்க மாட்டேன் என்கிறது. கல்விச்சாலைகள் அவர்கள் கைகளில் வெறும் பட்டங்களைக் கொடுத்துத் தெருத் தெருவாக அலையவைத்திருக்கிறது. நமது பட்டங்கள் பயன்றற வெற்றுத்தாள்களாக மாறி வருகின்றன.

அவர்கள் இம்மண்ணின் சுகதுக்கங்களில் பங்கு கொள்ளத் துடிக்கிறார்கள். ஆனால் அவர்களின் சுகதுக்கங்களில் பங்கு கொள்ள இந்நாடு மறுக்கிறது. அவர்கள் அப்போது வாக்காளர் பட்டியலில் மட்டுமே சுகமாக இருக்கிறார்கள். அவர்களிலும் சிலபேர் பல்வேறு காரணங்களால் விடுபட்டுப்போகிறார்கள்! இந்த நிலையில் அவர்கள் அந்நியப்பட்டு பின்னப்படுகிறார்கள்.

பட்டங்கள் நம்பிக்கை நூலறுந்து கிடக்கின்றன. நமது தலைவர்களின் தேர்தல் வாக்குறுதி பலூன்கள் அவர்களின் சுய நலப்புல் முனைப்பட்டு பெரு மூச்சுவிட்டு சீந்துவாரற்று சாக்கடையில் கிடக்கின்றன. அவர்கள் பெற்ற மக்களுக்கு நூறாண்டுகளுக்கு ஆயிரங்கோடிகள் திரட்டுவதிலேயே பதவி நாற்காலிகளில் அமர்ந்து கொண்டு ஆலாய் பறக்கிறார்கள். அவர்களை எதிர்த்துக் கேட்கும் திறமை மிக இளைஞர்கள் ஒரு சிலர் தான் தட்டி கேட்க தன்னம்பிக்கை கொண்டு எழுச்சி கொள்கிறார்கள். விவேகானந்தராய் வீறு கொண்டெழுகிறார்கள். ஆம் இளைஞர்களே… எழுமின்! விழுமின்! வெற்றி காணும் வரை உழைமின்!!! ஆமாம்… இளைஞர்களை நெம்பி எழுப்பிவிடும் ஒரே நெம்புகோல் அவரவர் தன்னம்பிக்கை தான்.. ஆமாம் இளைஞர்களே நமது தன்னம்பிக்கையே நமது தன்மானம் காக்கும். மறந்து விடாதீர்கள்…!


Share
 

No comments

Be the first one to leave a comment.

Post a Comment


 

 


May 1996

தொடர்ந்து முயற்சி
உங்கள் நெஞ்சம்
வேண்டுகோள்
மூன்றாவது…. கை!
திருவள்ளுவர் எச்சரிக்கிறார்
தன்னம்பிக்கை? இறுமாப்பா?
கோபத்தால் ஏற்படும் தீமைகள்
எண்ணங்களும் வாழ்க்கையும்
உறுதியா? பிடிவாதமா?
எண்ணம்
குழந்தைகள் நடை பயில்வதைப் பாருங்கள்