– 1996 – May | தன்னம்பிக்கை

Home » 1996 » May

 
  • Categories


  • Archives


    Follow us on

    தொடர்ந்து முயற்சி

    ஒரு செடி வைக்கிறோம். அது வேர் பிடித்துக்கதழைக்கின்றது. வளர்கின்றது. மரமாகின்றது. பூக்கின்றது. பருவத்திலும் அதற்குரிய பாதுகாப்புகளை பராமரிப்புக்களைத் தொடர்ந்து செய்து கொண்டே வரவேண்டும். நடுவதோடு நமது கடமை முடிந்தது

    Continue Reading »

    உங்கள் நெஞ்சம்

    நல்வாழ்விற்கு ஏங்கும் இளைஞர்களுக்கும், யுவதிகளுக்கும், அன்பான, ஆறுதலான அற்புதமான வழிகாட்டியே நம் தன்னம்பிக்கை. உடல், உள்ளம், அறிவு, ஆன்மா, வாழ்வு, ஆகிய ஒப்பற்ற இவ் ஐந்தும் ஒருங்கே வளர மலர்ச்சியும், வளர்ச்சியும்

    Continue Reading »

    வேண்டுகோள்

    நாட்டையும் நாட்டுமக்களையும் அரசியல் கொள்ளையர்களிடமிருந்து மீட்டுப்பாதுகாக்கப்படவும் நாட்டின் முன்னேற்றம் காணவும் …..

    Continue Reading »

    மூன்றாவது…. கை!

    நமது
    கையைப் பிடித்து
    இலட்சிப் பாதையில்
    அழைத்துச் செல்கின்ற
    வெற்றியின்கை!

    Continue Reading »

    திருவள்ளுவர் எச்சரிக்கிறார்

    உங்களுக்குத் திருவள்ளுவரை மிக நன்றாகவே தெரியும். அவர் நம் எல்லோருக்கும் சொந்தக்காரர். அவர் காலத்தைச் சரியாகப் பயன்படுத்தாதவர்களுக்கு எச்சரிக்கை விடுகின்றார்.

    Continue Reading »

    தன்னம்பிக்கை? இறுமாப்பா?

    இது என்னால் முடியும் என்பது தன்னம்பிக்க. எப்படியும் முயன்று இதைச் செய்து முடித்து விடுவேன் என்பது தன்னம்பிக்கை. அவனைப்போல் நானும் இதனைச் செய்து முடித்துவிட முடியும் என்ற தனது அனுபவத்தையும் கலந்து சொல்வது தன்னம்பிக்கை.

    Continue Reading »

    கோபத்தால் ஏற்படும் தீமைகள்

    கோபத்தால் ஏற்படும் தீமைகள்

    1. கோபத்தில் செய்கின்ற எல்லாச் செயல்களும் அறிவிழந்த செயல்களாகவே இருக்கும் என்பதை நீங்கள் ஓர் எச்சரிக்கையாக எடுத்துக்கொள்ள வேண்டும்.

    2. கோபம் வரும்போது உங்கள் இரத்தம் சூடேறும். இரத்த ஓட்டம் வேகமாக ஓடும். அதையறிய வேண்டுமானால் – நீங்கள் கோப்ப்படும் போது சைக்கிள் ஓட்டிப் பாருங்கள். நீங்கள் உங்களையும் அறியாமல் வேகமாகவே போய்க்கொண்டு உங்களையும் அறியாமல் வேகமாகவே போய்க்கொண்டு இருப்பீர்கள். இதனால் உடல் நலம் பெரிதும் பாதிக்கப்படும்.

    3. கோப உணச்சியோடு சாப்பிட்டால் உணவு இயல்பாக சீரணம் ஆகாது என்று மருத்துவர்கள் குறிப்பிட்டுகிறார்கள்.

    4. கோப உணர்ச்சியின்போது நூற்றூக்கணக்கான நரம்புகளும், மகிழ்ச்சியின் போதுபத்துக் கணக்கில் நரம்புகளும் செயல்படுகின்றன என்பதை அறிவியல் தெரிவிக்கின்றது. அதிகப்படியான நரம்புகளின் வேலையால் உடல் விரைவில் போய்விடுகின்றது. நமது இயல்பான செயல்கள் பாதிக்கப்படுகின்றன.

    5. கோபப்படுகின்றவர்கள் நண்பர்கள சுற்றத்தார்களை, ஏன் தன் குடும்பத்தையே இழந்து தன்னந்தனியாக இருக்க நேரிடும்.

    6. கோபப்படுகின்றவர்கள் தங்களைச் சுற்றிலும் எதிர்ப்புக் கோட்டைகளை உருவாக்கிக் கொள்கிறார்கள்.

    7. சிடுமூஞ்சி என்றும், திமிர் பிடித்தவர் என்றும் மற்றவர்களால் இகழ்ந்து பேசப்படுவதோடு இத்தகையவர்கள் அழிவை எதிர்பார்பவர்களாகவும் இருப்பார்கள்.

    உங்கள் கோபத்தை அடக்குவது எப்படி?
    1. உங்களுக்கு ஏன் கோபம் வருகிறது என்று எண்ணிப்பாருங்கள். கோபம் தணிந்தவுடன் அதற்குரிய காரணங்களைக் கண்டறிந்து வரிசைப்படுத்திப் பாருங்கள். அல்லது ஒரு தாளில் எழுதிப்பாருங்கள். இந்தக் கோபத்திற்குரிய உங்கள் பங்கைக் கணக்கிட்டுப் பாருங்கள் – கோபம் கொஞ்சம் குறைந்திருக்கும்.

    2. கோபம் வந்தவுடன் ஒரு செயலை நிறைவேற்றிட வேண்டும் அவரைக் கேட்டுவிட வேண்டும் என்று துடிக்காதீர்கள். கோபத்தோடே செய்தால் தோல்வி உங்களுடைய தாகத்தான் இருக்கும். அதனால் கோபம் அடங்கியவுடன் பேசுங்கள். வெற்றி உங்களுடையதாக இருக்கும்.

    3. கோபம் வந்தவுடன் ஒரு டம்ளர் குளிர்ந்த தண்ணீரைக் குடியுங்கள். கோபம் சிறிதளவு அடங்கிவிடும்.

    4. காலையில் எழுந்திருக்கும்போதே இன்று எந்தச் சூழ்நிலையிலும் கோப்ப்படுவது இல்லை என்று முடிவு செய்து கொள்ளுங்கள். அன்றைய வளமான வாழ்வுக்குப் பாதை அமைத்துவிட்டீர்கள் என்பது பொருள்.

    5. கோபம் கண்ணை மறைக்கும் என்பார்கள். அதுமட்டுமல்ல கோபம், வர இருக்கின்ற வளத்தை எல்லாம் குறைத்துவிடும் என்பதையும் நினைவில் கொள்ளுங்கள்.

    6. சிரிக்க பழகுங்கள் – சிரிக்க முடியாவிட்டால் வாயை மூடப் பாருங்கள். உங்கள் வளமான வாழ்வை நோக்கி நடக்கத தொடங்கிவிட்டீர்கள் என்பது பொருள்.

    7. கோப்ப்பட்டதால் வென்றவர்கள் என்பதற்குச் சான்றுகள் இல்லை. ஆனால் கோபத்தை அடக்கிப்பொறுமையாக இருந்தவர்கள்தான் வெற்றி பெற்றார்கள் என்பதற்குச் சான்றுகள் உண்டு.

    8. சூரியனைப் பார்த்துக் குறைக்கும் நாய் ஒரு போதும் வெற்றி பெறுவதில்லை. நீங்கள் சூரியனாக இருங்கள். விளக்கமாகவும் இருப்பீர்கள் வளமாகவும் வாழ்வீர்கள்!

    டாக்டர். இல.செ. கந்தசாமியின் வளமான வாழ்விற்கு என்ற நூலிலிருந்து

    எண்ணங்களும் வாழ்க்கையும்

    5. மனமும் மாண்பும்

    மனம் என்பது ஓர் இருளடைந்த பாழ்பட்ட குகையாக, இருட்டறையாக இருக்கும் வரை அதிலிருந்து மார்க்கம் எதுவும் தெரியாது. “கருவறையென்ற இருட்டறையில் கண்ணில்லாக் குழவி படுந்துன்பத்தை யொத்த துன்பத்தை அத்தகைய

    Continue Reading »

    உறுதியா? பிடிவாதமா?

    மனிதனின் தன்மைகள் இடத்திற்கும் சூழ்நிலைக்கும் ஏற்ப மாறுபடுகின்றன. எல்லாக் காலங்களிலும் எல்லா இடங்களிலும் அவன் ஒரே மாதிரியாக நடந்து கொள்வதில்லை. அப்படி நடந்து கொள்ள வேண்டிய இன்றியமையாமையும் இல்லை. ஆனால்

    Continue Reading »

    எண்ணம்

    இன்றைய இளைய தலைமுறையினர் நமது அனுதாபத்திற்கு உரியவர்கள். பள்ளிகளிலும் கல்லூரிகளிலும் படிக்கும் வரை அவர்கள் சமுதாயத்தின் வெறுப்புக்கு ஆளாகிறார்கள் என்பது உண்மையே. கல்விநிலையங்களில் படிக்கும்வரை அவர்கள்

    Continue Reading »