Home » Articles » நீங்கள் ஏற்றுக்கொள்ளவேண்டிய குறிக்கோள்

 
நீங்கள் ஏற்றுக்கொள்ளவேண்டிய குறிக்கோள்


குமார் V.N.C
Author:

1. தாய் தந்தையை மதித்து போற்றிடுங்கள். அவர்களின் சிலகருத்து வேறுபாடுகள காரணகாரியத்துடன் தெளிவுபடுத்துங்கள். இது உங்களின் குழந்தைக்கு நல்ல பாடமாக அமையும்.

2. கல்வி அல்லது கற்றுத் தருவோரை மதித்துப்போற்றிடுங்கள். இவர்களால்தான் உமது வாழ்க்கை உயர்வுக்கு வழிகாட்டியாக அமைந்துள்ளது என்பதை நினைவில் வைத்து உங்கள் குழந்தைகளின் மனதிலும் பதியச்செய்யுங்கள்.

3.உற்றார் உறவினர், பெரியோர், சிறியோர் இடத்தில் அன்புடனும் பண்புடனும் நடந்தால் உம்மைப் போற்றி புகழ்ந்து வாழ்த்துவார்கள்.

4. நாம் வளும் காலத்தில் செய்யும் தொழிலே தெய்வமாக்க்கருதி ஓர்துறையில் (தொழில் அல்லது கல்வியில்) மட்டுமே முழுமையான கவனத்தைச் செலுத்துங்கள். நிச்சயமாக அத்துறையில் வெற்றி பெறுவோம் என்பதை நினைவில் கொள்ளுங்கள்.

5. மிக முக்கியமானவை காலந்தவறாமையே

நமது நேரத்தைக் கீழ்க்காணும் முறையில் நாம் 24 மணி நேரத்தை பட்டியலிட்டு பயன்படுத்திக் கொண்டுள்ளோமா என்பதைச் சிந்தியுங்கள்.

A. உமது வயதிற்கு ஏற்ற நல்ல தூக்கம் – 7.00 மணி நேரம் போதுமா?
B. விளையாட்டு 1.00 மணி நேரம் போதுமா?
C. உணவு & உணவிற்கு பின் ஓய்வு 3.00
D. தொழில் அல்லது கல்வி கற்போருக்கு தேவையான நேரம் 12.00
E. நாள்தோறும் நல்ல கருத்துள்ள புத்தகங்கள் படிக்க – 0.30
F. நமது சமுதாய வளர்ச்சியைப் பற்றி சிந்திக்க – 0.30

மொத்தம் 24 மணி நேரம்.

இது ஓர் குறிப்பு இதை அவரவர் வசதிப்படி மாற்றிக்கொள்ளலாம்.

6. உமது வளர்ச்சிக்கு அவசியம் நாணயம், நம்பிக்கை, நேர்மை, உழைப்பு, ஒழுக்கம் இவை ஐந்தம் மிகவும் தேவை.

ஆசைகள் வேண்டும்! பேராசைகள் வேண்டாம்!
போட்டிகள் வேண்டும்!! பொறாமைகள் வேண்டாம்!!
என்பதை நினைவில் கொள்ளுங்கள்.

7. “மனமே நான் இன்று முதல் நல்லதை செய்து, நல்லதை சொல்லி, நல்லதை கேட்டு அதனால் நற்பயன்களை பெறுவேன்'” என்று உறுதிகொள்ளுங்கள். நீங்கள் நல்வழிகாண வேண்டுமென இறைவன் அருளுடன் எனது வாழ்த்துக்களை தெரிவித்துக்கொள்கிறேன்.

– V.N.C. குமார், பவானி

குறிப்பு: 1. மேற்காணும் கருத்துக்களில் குறை (அல்லது) நிறைகள் இருந்தால் தெரிவியுங்கள்.

2. ஏற்றுக்கொள்ள வேண்டிய கருத்தானால் பிறருக்கு பயன்படச் செய்யுங்கள்.

 

No comments

Be the first one to leave a comment.

Post a Comment


 

 


March 1996

உங்கள் நெஞ்சம்
பெண்கள் நிலை உயரவேண்டுமானால்….
நீங்கள் ஏற்றுக்கொள்ளவேண்டிய குறிக்கோள்
நாவடக்கம்
எண்ணங்களும் வாழ்க்கையும்
நாட்டுக்கேற்ற விதி
ஆலோசனைப் பகுதி
சிந்தனைத்துளி
ஆலவிழுதுகள்
சிந்தனைத்துளி
எண்ணம்
இல.செ.க. வின் சிந்தனைகள்
பெண்களே!
நியாயம்
உங்களது ஒரு நாள் எப்படிக் கழிகிறது?