Home » Articles » ஆலோசனைப் பகுதி

 
ஆலோசனைப் பகுதி


admin
Author:

கேளுங்கள் கொடுக்கப்படும்

சுவாமி சுந்தரானந்தா பதில்

உங்கள் சிக்கல்களைத் தீர்த்துக்கொள்ள ஓர் வழியாகாட்டியாகப் பயன்பட வேண்டும் என்பதற்காக இப்பகுதி தொடங்கப்பட்டுள்ளது. உங்கள் சிக்கல்களை எழுதுங்கள். நடைமுறைக்கான தீர்வைத்தருவோம். அது பலருக்கும் பயன்படும். நீங்கள் விரும்பினாலன்றி உங்கள் பெயர் வெளியிடப்படமாட்டாது!

எமக்கு வந்த கடிதங்களில் ஒன்று

“அன்பார்ந்த ஐயா, எனக்கு வயது இருப்பதிமூன்று ஆகிறது. நான் தொடர்ந்து எந்த வேலையிலும் தொடரமுடியவில்லை. அதனால் மனக்குழப்பம் மனத் திருப்திதருவதாக அமையவில்ல்லை. அதனால் மனக்குழப்பம் அதிகமாகிறது. மன அமைதி கெடுகிறது. பெற்றோரும் பற்றின்றி வெறுத்தொதுக்குகின்றனர் என்னை ம திப்பதே இல்லை. இந்நிலையில் எதிர் வீட்டிலுள்ள + 2 படிக்கும் மாணவியின் நேசம் கிடைத்த நிலையில் காதல் வயப்பட்டேன். ஆனால் அவளும் தற்போது என்னை ஏறெடுத்தும் பார்ப்பதில்லை. எனது அழகற்ற உருவம் தான் எனது மோசமான நிலைக்குக் காரணம் என எண்ணுகிறேன். வாழ்க்கையே எனக்குச் சுமையாகத் தெரிகிறது. நான் முன்னேற வழியுண்டா?

அன்புடன் ராசமாணிக்கம்

அன்பர் ராசமாணிக்கம் போன்று பலர் வாழ்க்கையில் அல்லல்படுவதை அறிவோம். எல்லோருக்கும் பிரச்சனை ஒரே மாதிரியாக இல்லாவிட்டலும் ஓரளவு பொதுத்தன்மை கொண்டதாக இருக்கும். நண்பர் முதலில் தன்னை இந்த சமுதாயத்தின் ஒரு அங்கம் எனபதை உறுதியாக நம்ப வேண்டும். முழு மனிதனாக வாழ உரிமையுண்டு. இவரது தேவைகளைப் பூர்த்தி செய்கின்ற முறையில் சமுதாயத்தின் பிற்பகுதியினர் உழைத்து உற்பத்தியில் ஈடுபடுகின்றனர். அதற்கு ஈடாக இவரும் தன்னாலியன்ற உழைப்பை சமுதாயத்திற்கு அளிக்க வேண்டும். ஆனால் இது ஒருவகைப் பண்டமாற்றுதான். ஆனால் அதுதான் சமுதாயத்திற்குச் செய்ய வேண்டிய கடமை. இந்த அடிப்படையை ஒப்புக்கொண்டபின் தனது நிலைபற்றி ஒரு தெளிவான கருத்தையும் கொள்ள வேண்டும். எல்லோரையும் போலவே தானும் என்ற நிலையில் “அருஞ்செயல் விரும்பு” வராக மாற வேண்டும். தமது தனித்திறமை மற்றவருக்கு உதவுவதாக அமைய வேண்டும். உதவுவது என்றால் இலவசமாக அளிப்பதல்ல. அவரது தேவையைப் பூர்த்தி செய்வதாக இருக்க வேண்டும். அதற்கு உரிய விலையைப் பெற்றுக்கொள்ள வேண்டும். எந்த வேலையில் ஈடுபடுவதானாலும் தமது சொந்த திருப்தி என்பதை முதன்மைப்படுத்தாமல் அதனைப் பூர்த்தி செய்வதாக இருக்க வேண்டும். இதை பிரதான கருத்தாகக்கொண்டால் எந்த வேலையும் ஏற்க்க்கூடியதாக அமையும். தாழ்வுமனப்பாமை கொண்டு, வேலைகளை இழிவானதென்றும் சிறந்தனவென்றும் வேறுபடுத்திப் பார்க்கும்போது தான் சிக்கல் தோன்றும். சமுதாய நலனுக்குத் தேவையான வலை எதுவாயினும் அதிகமாகவும் சேதாரங்களைக் குறைத்து, அழுகுறச் செய்தால் அதுவே வாழ்க்கையில் வளம்காண வழி வகுக்கும்.

பெற்றோரிடம் மனம் விட்டுப் பேசாமல், தான்தோன்றித்தனமாக எடுத்தெறிந்து பேசி அவர்கள் மனம் நோகும் போது பெற்ற பிள்ளையென்றாலும் மதிக்கத்தான் மாட்டார்கள். எனவே உறவுநிலைகளில் கருத்து வேறுபாடுகள் இன்றி மனம் திறந்து பேசி மனித நேயத்தை வளர்த்துக்கொள்ள வேண்டும். உடனே பலன் வேண்டும் என்று எதிர்பார்க்காமல் நல்லது விதைத்தால் நல்லதே முளைக்கும் என்ற நம்பிக்கையுடன் செயல்படவேண்டியது அவசியம்.

காதலுக்காக ஏங்கிக் காலத்தை விரயமாக்காமல் “அருஞ்செயல் புரிந்து” அனைவரும் பாராட்டும் நிலையை எட்டினால் கெட்டிக்காரன் என்ற பெயரெடுத்த நிலையில் கட்டிக்கொள்ள பல பெண்கள் போட்டிபோடவும் கூடும். (குறிப்பு: அன்பரின் பெயர் மாற்றப்பட்டுள்ளது)

 

1 Comment

  1. BHARATHI GANESH says:

    அய்யா,

    நான் அரசாங்கத்தில் வேலை செய்கிறான். என்னுடன் வேலை செய்யும் உடன் பணியாளர்கள் ஒருவர்கூட மனதில் இருப்பதை பேச மாட்றாங்க. பொய்யா பேசுறாங்க பழகுறாங்க எனக்கு பிடிக்கவில்லை. தனியா கம்ப்யூட்டர் சென்டர் வெச்சி இருக்குறேன் அங்க உண்மையா இருந்தா தான் லாபம் வருது. ஆபீஸ்ல நா பொய்யா நடிக்கவேண்டி இருக்குது . சென்டர்லநா உண்மையா இருக்க வேண்டி இருக்கு . என்ன பண்ண்றது

Leave a Reply to BHARATHI GANESH