Home » Articles » ஆலவிழுதுகள்

 
ஆலவிழுதுகள்


admin
Author:

ஓர் இளைஞர். இருப்பத்தொன்பது வயது. “எனக்குப் பத்திரிக்கைத் துறையில் நிறைய ஆர்வம். வழிகாட்டுங்கள். எனக்குப் பிடித்த வேலை கிடைக்கச் செய்யுங்கள்” என்றார்.

“இப்போது என்ன வேலை செய்து கொண்டிருக்கிறீர்கள்? என்று கேட்டேன்.

“சும்மாதான் இருக்கேன்!” என்றார் அவர்!

அவர் பதிலில் இருந்த அலட்சியம் என்னப் பலமாகத் தாக்கியது. இருபத்தொரு வயதில் பட்டப்படிப்பை முடித்தவராம் அவர். இன்று வரை – அதாவது எட்டுவருடங்கள் – சும்மா இருந்திருக்கிறார். ஏதேனும் வேலையில் சேருவாராம்; ஒரு சில நாட்களிலேயே அந்த வேலைப்பிடிக்காமல் போய்விடுமாம். சில மாதங்கள் சும்மா இருந்துவிட்டு, மறுபடியும் வேலை கிடைத்தாலும் இந்த வேலக்கும் அதே ஆயுள் தான்!

இப்படிச் “சும்மா” வெட்டிப்பொழுது போக்குபவருக்கு வேலையும் கிடைத்து வந்திருக்கிறது. ஆனால் தனக்குப் பிடிக்கவில்லை என்பதாலேயே அந்த வேலைகளை அவர் புறக்கணித்திருக்கிறார். என்ன கொடுமை இது!.

நாற்பது வயதுவரை ஒரு இளைஞன் பொருளையும புகழையும் தேட மிகுந்த பாடுபடவேண்டும். அதற்குப் பிறகு மேன் மேலும் புகழும் பொருளும் அவனைத் தேடி வரும். நாற்பது வரை உழைப்பின் அருமையை உணர்ந்து அதை மதிப்பவன் விரல் நுனியால் தொலைபேசி மூலமாகப் புகழையும், பொருளையும் தன் வீட்டை நோக்கிவரச் செய்ய முடியும்.

“தண்டச் சோறு” என்பது இளைஞனுக்குக் கிடைக்கக் கூடிய அவமானப்பட்டம். ஒரு வேலை வாய்ப்பு கிடைத்த போது அதை ஒரு இளைஞன் பயன்படுத்திக்கொள்ளவில்லை என்றால் அவனுகுப் பின்னால் நூறு இளைஞர்கள் அந்த வாய்பைப் பாய்ந்து கைப்பபற்றிக் கொள்ளக் காத்திருக்கிறார்கள் என்ற உண்மை தெரியாதவனாகத்தான் இருப்பான்.

தான் விரும்பிய படிப்பைப்படிக்க முடியாமல் வேறு பாடத்தைப் படிக்கும் மாணவன், தான் எதிர்பார்த்தபடி அமையாத கணவனுடன் பந்தம் ஏற்படுத்திக் கொண்ட மனைவி, அல்லது அதே போல கணவன் இவர்கள் தங்களுக்குப் பிடிக்கவில்லை என்பதற்காகப் படிப்பையும் திருமண பந்தத்தையும் உதறிவிட முடியுமா?

பத்திரிக்கைகளுக்கு தவிர, வயிறு நிரம்பிடாது. பல பிரபல எழுத்தாளர்கள். பத்திரிக்கையாளர்கள் எல்லோரும் எழுத்தை இரண்டாவது வருமான வழியாகத்தான் வைத்துக் கொண்டிருக்கிறார்களே தவிர, பிரதான வேலை அல்லது தொழில் என்று வைத்துக் கொள்ளாமலில்லை.

“கை கால்கள் ஓய்ந்த பின்னே துடிப்பதில் லாபமில்லே” என்ற கவிஞர் கண்ணதாசனின் வரிகளை ஆழமாகச் சிந்தித்துப் பாருங்கள். உற்சாகம், ஆர்வம்,, வீறு கொண்டெழும் மனோபாவம். உறுதி, ஏற்றம், துடிப்பு, வேகம் எல்லாம் இளமையின் ஆக்கப்பூர்வமான குணங்கள். அவற்றை நெறிப்படுத்தினாலே வாழ்க்கையின் தரம் உயரும். ஓய்வு எடுக்க வேண்டியது வாழ்க்கையின் இறுதிப் பகுதியில் தான் “சும்மா” இருக்க வேண்டியதும் அப்போதுதான்.

என்னுடைய சக மாணவர் ஒருவர் இப்போது தன்னுடைய நாற்பதாவது வயதில் எழுவது வயது முதியவரின் பலவீனமும், முதிர்ந்த தோற்றமும் கொண்டவராகி விட்டார். இதற்குக் காரணம், இளமையை அவர் அற்பசுகத்திற்காக வீணாக்கிவிட்டதுதான்.

இளைஞர்களின் பொறுப்பு மிகவும் முக்கியமானது. அப்படி குடும்ப, சமுதாயப் பொறுப்புகளை உணரும் இளைஞர்கள் ஆல விழுதுகள் மாதிரி, தாய்மரம், வயதான காரணத்தால் நோயுற்றால், விழுதுகள் அதனைத் தாங்கிக்காக்கும்.

நேரத்தையும் காலண்டரையும் புறக்கணிப்பவர்கள் பிரகாசிக்கவே முடியாது. எந்த இழப்பையும் ஓரளவாவது மீட்கலாம். ஆனால் நாள் இழப்பை மீட்கவே முடியாது.

இளைஞர்களே, 1996 உங்களுக்கு இளமையின் அருமையைப் புரிய வைக்கட்டும். நீங்களும் அதன் ஆக்கப்பூர்வ சக்தியை உணர்ந்து கொள்ளுங்கள். அடுத்து வரும் வருடங்கள் எல்லாம் உங்கள் அடிமை.

லேணா தமிழ்வாணன்
நன்றி: தினமணி கதிர், டிசம்பர் 31, 1995

 

No comments

Be the first one to leave a comment.

Post a Comment


 

 


March 1996

உங்கள் நெஞ்சம்
பெண்கள் நிலை உயரவேண்டுமானால்….
நீங்கள் ஏற்றுக்கொள்ளவேண்டிய குறிக்கோள்
நாவடக்கம்
எண்ணங்களும் வாழ்க்கையும்
நாட்டுக்கேற்ற விதி
ஆலோசனைப் பகுதி
சிந்தனைத்துளி
ஆலவிழுதுகள்
சிந்தனைத்துளி
எண்ணம்
இல.செ.க. வின் சிந்தனைகள்
பெண்களே!
நியாயம்
உங்களது ஒரு நாள் எப்படிக் கழிகிறது?