ஆரோக்கியமான உடலில்தான் ஆரோக்கியமான சிந்தனை உருவாகிறது. முறையாகப் பராமரிக்கப்படாத நிலையில் உள்ளவரின் சிந்தனைகள் ஊனமுற்ற சிந்தனையின் தாக்கம் சமுதாயத்தையே பாதிக்கக்கூடியது. தன்னம்பிக்கை இல்லாத நிலையும் ஒருவகை குறைபாடு அல்லது ஊனம் எனலாம். தன்னம்பிக்கை இல்லாதவர்கள் தாங்கள் துன்பப்படுவதுடன் நில்லாது மற்றவர்களுக்கும் ஏதேனும் ஒருவகையில் சுமையாக அமைந்திடுவர். ஒருவரின் நிலை மற்றவர்களையும் பாதிக்கிறது என்பதால் பாதிப்பு ஏற்படாத நிலையைக் குறித்து விளக்கம் தந்து தன்னம்பிக்கை ஊட்ட வேண்டியது அனைவருக்கும் கடமையாக உள்ளது. என்றாலும், நமக்கு எதற்கு வம்பு என்று ஒதுங்கி வாழும் குணம் பெரும் போராட்டம் உள்ளதைக் காணலாம். தனித்து வாழ வேண்டுமென்ற எண்ணமே ஒரு தாழ்வு மனப்பான்மையின் விளைவே சமுதாயத்தில் பிறந்துவிட்ட ஒவ்வொருவருக்கும் வாழ உரிமையுள்ளபோது, ஒருவர் தன்னைத் தாழ்வாகக் கருதி தனித்திருக்க முயல்வது வாழ்வில் மேலும் மேலும் அதிர்ச்சியை சந்திக்க வேண்டிய நிலைதான் ஏற்படுத்தும். ஒருவருக்காக எல்லோரும், எல்லோருக்காகவும் ஒருவர் என்ற உளப்பாங்கை உருவாக்கிக் கொள்ள வேண்டும்.

March 1996















No comments
Be the first one to leave a comment.