Home » Articles » உங்கள் நெஞ்சம்

 
உங்கள் நெஞ்சம்


admin
Author:

அறியாமையால் அல்லற்படும் மக்கள் இன்றும் நம்மிடையே வாழ்ந்து கொண்டிருக்கிறார்கள். சோம்பேறியாக திரியும் கூட்டங்களுக்கு ‘தலையங்கம்’ நல்ல ஒரு பாடம். ஏதோ எழுதுகிறோம்? என்று இல்லாமல் நம்முடைய எழுத்தினால் சமுதாயத்தை மாற்ற வேண்டும் என்ற உயர்ந்த கொள்கையைக் கடைபிடித்து எழுத வேண்டும். கரன்சி நோட்டுகளுக்கு நம் பேனா துணை போனால் அது சரியான வழியல்ல என்பதை காலம் உணர்த்தும். இல.செ.க. வின் சிந்தனைகள் எழுத்தாளர்களை விழிப்புறச் செய்திருக்கும். தன்னம்பிக்கை என்பது புத்தகத்தில் மட்டும் இல்லாமல் உள்ளத்திலும் இருந்தது. மென்மேலும் வளர வாழ்த்துக்கள்.

வெ. வானதி, துணையாசிரியர், தேசிய வலிமை.

சமூக சிந்தனையுடன் வந்திருக்கும் பொறுப்பான இதழ் இது. வளர்கிற சமுதாயத்திற்கு வழிகாட்டும் உன்னத கைகாட்டி மென்மேலும் சிறக்க வாழ்த்துக்கள்.

என். ஏகம்பவாணன் , சென்னை – 92

“தன்னம்பிக்கை” டிசம்பர் -95 இதழ் தன்னம்பிக்கை மட்டும் இன்றி, உடல் ஆரோக்கிய இதழாக மலர்ந்து பயன் அளிக்கும் வகையில் அமைந்திருந்தமைக்கு நன்றி பாராட்டி மகிழ்கிறேன்.

த. வியசரங்கன்,பாக்கோடு

இளைஞர்கள் இதனை சிரத்தையாக படித்து அக்கருத்துக்களை வாழ்வில் கடைப்படித்தால் அவர்களுடைய வாழ்க்கை சிறப்பாக மாறி அமைவது நிச்சயம். பல வசதிகள் இருந்தும் ஊக்கமும் உற்சாகமும் இன்மையால் வாழ்வில் உயர முடியாதோர் பலர் தன்னம்பிக்கை அவர்களுக்கு ஊக்கமும் உற்சாகமும் தரும் டானிக். வாழ்க்கையில் பல இன்னல்களுக்கு அறியாமையே மூல காரணமாக இருக்கிறது. உடல் நலம்/ மருத்துவம்/ நோய்கள் பற்றிய கட்டுரகள் அறியாமை அகற்றி, நோய்கள் வராதவண்ணம் தடுக்க நிச்சயமாக உதவுகின்றன.

தன்னம்பிக்கை ஒவ்வொரு மாத இதழும் இளைஞர்களின் மனங்களில் புத்துணர்வை ஏற்படுத்திப் பொலிவுடன் வீறுநடை போடச் செய்யும் என்பது மட்டும் திண்ணம். மனங்களுக்கு புத்துணர்வு ஏற்படுத்தும் புதுவித டானிக் தன்னம்பிக்கை.

பனையூர் ராஜன், கோவை – 26.
தூய்மையான எண்ணங்களே மனித வாழ்வை மேம்படுத்தும் என்பதை அறிவார்ந்த கருத்துக்களுடன் ஆழமாக மனங்களில் பதித்தார் “எண்ணத்தில் ஆற்றல்” தலைப்பில் டாக்டர் கே.கே.கே.

என். செல்வம் , கோவை – 26.


Share
 

No comments

Be the first one to leave a comment.

Post a Comment


 

 


February 1996

உங்கள் நெஞ்சம்
தொழில் வளம் பெருக வேண்டுமானால்…
அறிவும் உணர்ச்சியும்
உற்சாகமுடன் வாழ வேண்டும்
செயல் வீரர்கள்!
எண்ணங்களும் வாழ்க்கையும்
கவிதை
நீங்கள் யாராக விரும்புகிறீர்கள்?
எண்ணம் (உள்ளத்தோடு உள்ளம்)
இல.செ.க. வின் சிந்தனைகள்