Home » Articles » உங்கள் நெஞ்சம்

 
உங்கள் நெஞ்சம்


admin
Author:

டாக்டர் பெருமதியழகன் அவர்களின் கட்டுரையைத் தொடர்ந்து படித்து சிந்தனைத்தெளிவு பெற்றுவருகிறேன். திடீரென்று மூன்று மாதங்களாக தன்னம்பிக்கை கிடைக்கவில்லை காரணம் தெரியவில்லை. டாக்டரின் கருத்துக்களை எதிர்பார்த்திருக்கிறேன். தபாலில் தவறியிருக்குமென்றால் வேறு பிரதிகள் அனுப்ப வேண்டுகிறேன்.

– ராசேந்திரன், சென்னை 24

சிறு தொழில் முனைவோர்களுக்கு வழிகாட்டும் கட்டுரைகளை வெளிவிட்டு இளைஞர்களை ஊக்குவிக்கலாவே? கேள்வி பதில் பகுதி தொடங்குவீர்களா?

– எஃப் வர்க்கீஸ், திருச்செங்கோடு.

அம்ஸ லக்ஷ்மி அவர்களின் கவிதை கல்வித் துறையில் காணும் குறைகளைச் சுட்டுகிறது. என்ன செய்ய வேண்டும் என்ற கருத்துக்களை அறிஞர்களைக் கொண்டு எழுதச் செய்து வெளியிடுங்கள்!

– R. பாமா, டோக்நகர், மதுரை.

விவசாயம் குறித்த கட்டுரைகளுக்கும் செய்திகளுக்கும் இடம் ஒதுக்குங்கள். கவிதைகளுக்கு இடம் ஒதுக்குவதைக் குறைக்கலாம் அல்லது நான்கு பக்கங்கள் அதிகப்படுத்தலாம்.

– S. வீரப்பன், வெள்ளமடை.

தன்னம்பிக்கை ஜூன்-ஆகஸ்ட் இதழ், வாழ்க்கையில் முன்னேற விரும்புகிறவர்களுக்கு ஊக்கமும் உந்துதலும் அளிக்கக்கூடிய நல்ல வைட்டமின் மாத்திரை போல் அமைந்துள்ளது. ஒரு தோழனின் குரல் அருமையான ஆலோசனைகளை வழங்குகிறது. ஆளுமைத் திறன் மேம்பாடு ஒவ்வொருவரும் தங்கள் ஆற்றலை வளர்த்துக்கொள்வதற்குத் தேவையான எண்ணங்களை எடுத்துச் சொல்கிறது. இக்கட்டுரைகளை நன்கு படித்து உரியமுறையில் முயன்றால் முன்னேற்றம் நிச்சயம் என்பதை இளைஞர்கள் உணர்ந்து செயல்பட வேண்டும். தன்னம்பிக்கை பக்கம் தோறும் நம்பிக்கை ஒளியைப் பரப்பி கொண்டிருக்கிறது. இது உயர்வு நவிற்சி இல்லை.

– வல்லிக்கண்ணன், சென்னை.

நியாயங்கள் மீறி நடப்பவர்களுக்கு சரியான தண்டனை கொடுக்கப்பட வேண்டும். படித்த பட்டம் பெற்ற இளைஞர்கள் அநீதியை எதிர்த்துப் போராட வேண்டும். ஓர் துணிவுடன் நியாயங்களுக்காக போராட வேண்டும் என்ற சிந்தனையுடன் கட்டுரை இருந்தது. நல்ல நண்பர்கள் தூய சிய்தனைகள், அவனுடைய செயல்கள் இவையாவும் நல்லதாக இருதால் ஒரு மனிதனின் வாழ்வு திறம்பட அமையும். அதனை மீறி இயங்கும் போது துன்பங்களும் வேதனைகளும் தோன்றுகின்றன என்பதை ‘தீதும் நன்றும் பிறர் தர வாரா’ என்ற கட்டுரை எடுத்துக் கூறியது. உண்மை வாழ்க்கை முறையை மறந்து தேவையற்ற கற்பனைகளுக்குள் தனது சிந்தனை சக்தியை செலவழித்து தீய வழியில் பயணத்தை தொடரும் இளைஞர்களுக்கு ‘இளைஞனே இது ஏடன் தோட்டமல்ல’ என்ற கட்டுரை சிந்திக்க வேத்திருக்கும்.

– வெ. வானதி, ‘தேசிய வலிமை’ துணையாசிரியர், மதுரை.

தன்னம்பிக்கை எனக்கு தொடர்ந்து வருகிறது. உள்ளுணர்வை உசுப்பிடும் இதழாக உள்ளது. ‘எழு…. பார்…. முன்னேறு… இன்பம் சேர்!’ என்று தூண்டுகிறது. ஜூன்-ஆகஸ்ட் இதழில் ‘வாயுப் பிரச்சனைகள்’ கட்டுரை. அதை முழுமையாக பின்பற்றி வாழ்ந்தால் நல்ல ஆராக்கியத்துடன் இனிமையாக வாழலாம். அன்பிற்கு இனிய தவத்திரு. குன்றக்குடி அடிகளாரின் ‘தீதும் நன்றும் பிறர்தர வாரா..!’ கட்டுரை திரும்பத் திரும்ப படித்து தளராது வாழலாம்.

– தனஷ்கோடி ராமசாமி, சாத்தூர்.


Share
 

No comments

Be the first one to leave a comment.

Post a Comment


 

 


December 1995

உங்கள் நெஞ்சம்
புற்றுநோய் – அதை தவிர்ப்பது எப்படி?
ஒரு தனி மனிதனின் தேவைகள்
கங்கையும்… காவிரியுமாய்!
தன்னம்பிக்கையுடனான சிந்தனையும் செயலும்!
ஆளுமைத்திறன் மேம்பாடு – IV
எழுந்து வா
இல. செ. க.வின் சிந்தனைகள்
முயற்சி செய்துபாரு