Home » Articles » தன்னம்பிக்கையுடனான சிந்தனையும் செயலும்!

 
தன்னம்பிக்கையுடனான சிந்தனையும் செயலும்!


admin
Author:

லண்டன், மே., 23 : வல்லவனுக்கு புல்லும் ஆயுதம்,

வெறும் பேனா மூடி, கத்தி, முன் கரண்டி, சட்டையைத் தொங்கவிடப் பயன்படுத்தப்படும் ஹாங்கர் ஆகியவற்றைக் கொண்டு விமானத்தில் சிக்கலான இருதய ஆபரேஷனையே நடத்தி காட்டியுள்ளனர் இரு டாக்டர்கள்.

ஹாங்காங்கைச் சேர்ந்தவர் பாலா டிக்ஸன் (39), லண்டன் செல்வதற்காக அவர் விமான நிலையத்துக்கு மோட்டார் சைக்கிளில் வரும்போது விபத்தில் சிக்கி கீழே விழுந்தார். ஒருவாறு சமாளித்து விமானத்தில் ஏறினார். அப்போது அவரது கையில் வீக்கம் ஏற்பட்டது. நெஞ்சு வலியும் இருந்தது. விமானம் புறப்பட்டு சிறிது நேரத்தில் வலி அதிகமாகி அவர் துடித்தார்.

அந்த விமானத்தில் ஆங்கஸ் வாலஸ், டாம் வாங் ஆகிய இரு டாக்டர்கள் பயணம் செய்து கொண்டிருந்தனர். டிக்ஸனின் வேதனை கண்டனர். அவரைப் பரிசோதனை செய்தனர். உடனே இருதயத்தில் ஆபரேஷன் செய்ய வேண்டும் என்று முடிவுக்கு வந்தனர். உடனே செயலில் இறங்கினர். கத்தி, பேனா மூடி, சட்டை ஹாங்கர் கொண்டு இருதய ஆபரேசனை கச்சிதமாகச் செய்து முடித்தனர். விமானம் தரையிறங்கியதும், டிக்ஸன் மருத்துவ மனையில் சேர்க்கப்பட்டார்.

நன்றி! தினமணி.


Share
 

No comments

Be the first one to leave a comment.

Post a Comment


 

 


December 1995

உங்கள் நெஞ்சம்
புற்றுநோய் – அதை தவிர்ப்பது எப்படி?
ஒரு தனி மனிதனின் தேவைகள்
கங்கையும்… காவிரியுமாய்!
தன்னம்பிக்கையுடனான சிந்தனையும் செயலும்!
ஆளுமைத்திறன் மேம்பாடு – IV
எழுந்து வா
இல. செ. க.வின் சிந்தனைகள்
முயற்சி செய்துபாரு