Home » Cover Story » காய்கறி உணவிற்கு மாறுவோம்

 
காய்கறி உணவிற்கு மாறுவோம்


அனந்தராமன்
Author:

* மனிதர்களை காய்கறி உண்பவர்களாகவே இயற்கை படைத்திருக்கிறது. இல்லையென்றால் ஊன், உண்ணும் விலங்குகளுக்கு இருப்பதுபோல் மனிதர்களுக்கும் அவர்களது வெட்டுப் பற்கள் நீண்டிருக்கும் என்று குறிப்பிடுகிறார் ஜே.பி.எஸ். ஹால்டேன் என்னும் புகழ் பெற்ற உயிரியல் அறிஞர்.

* தாவர உண்ணிகளின் நாக்கின் அமைப்பு ஊனுண்ணிகளின் நாக்கின் அமைப்பிலிருந்து வேறுபடுகிறது. உடலைமைப்பின்படி மனிதர்கள் தாவர உண்ணிகளையே ஒத்திருக்கின்றனர். பல ஆயிரம் ஆண்டுகளாகவே தாவரம் உண்ணும் விலங்குகள் தாவர உண்ணிகளாகவே இருந்து வந்திருக்கின்றபோது மனிதன் மட்டும் ஊன் உண்ணியாக மாற முயன்றது ஏன்?

* இறைச்சியுணவு உண்கின்றவர்கள் வலியத்தாக்கும் தன்மை கொண்டோராய் உள்ளனர். காய்கறி உண்பவர்கள் அமைதியும் அடக்கமும் கொண்டவர்களாக உள்ளனர்.

* இறைச்சியுணவில் புரதச்சத்து மிகுந்துள்ளது என்பதும் மெய்யில்லை தானியங்களும், பருப்புகளும், பழவகைகளும், காய்கறிகளும் இறைச்சியைக் காட்டிலும் அதிகளவு புரதத்தையும், விட்டமின்களையும், கனிமத்தையும் தருகின்றன.

* உடலுழைப்பு சுருங்கிவரும் இந்நாட்களில் கொழுப்பு மிகுந்த உணவினால் ஏற்படும் தீங்குகள் அதிகம் . இதனால் பலகுறைபாடுகள் ஏற்படுகின்றன. எனவே காய்கறி உணவெனும் சைவ உணவே நமக்கு ஏற்ற உணவு.

*இப்போது எல்லோரும் சுற்றுப்புறச் சூழல் பற்றி வாய்கிழியப்பேசுகிறோமே. அந்தச் சுகாதாரத்தை முதலில் வீட்டிலிருந்துதானே ஆரம்பிக்கவேண்டும்!

அலுவலகங்களில் வேலைத்திறன் குறைந்துபோய் விட்டதாகச் சொல்லுகிறோம். காரணம் என்ன? சிறுவயதிலிருந்தே ஒரு குறிப்பிட்ட வேலையைக் குறிப்பிட்ட நேரத்தில் சரியாகச் செய்யக் கற்றுக்கொள்ளாமல் போனதுதான். அதைக் குழந்தைகளுக்குப் பெற்றோர் கற்றுத்தருவது அவசியம். அதைத்தான் நான் கற்றுத்த்தருகின்றேன்

திரு.அனந்தராமன்.

 

1 Comment

Post a Comment