Home » Articles » உங்கள் நெஞ்சம்

 
உங்கள் நெஞ்சம்


admin
Author:

ஐயா, வணக்கம் தன்னம்பிக்கை மாத இதழ் வாழ்க்கையில் விரக்தி அடைந்தவர்களை தட்டி எழுப்பி நம்பிக்கையை ஊட்டி கொண்டுக்கிறது என்பதில் ஐயமில்லை.

ஏப்ரல் மே இதழில் அருணாரஜகோபால்,அம்ஸலட்சுமி, மா.கணபதி சங்கர் , சிவசூரியன் இவர்களின் படைப்புகள் மிகவும் அருமையாக இருந்தது.

இவர்களுக்கும் தன்னம்பிக்கை இதழுக்கும் எனது மனமார்ந்த வாழ்த்துக்களை தெரிவித்து கொள்கிறேன். தன்னம்பிக்கை இதழ் மாதம் தோரும் தவறாமல் குறிப்பிட்ட தேதியில் எங்களுக்கு கிடைத்தால் மிகவும் நன்றாக இருக்கும்.

ஏ.ஆர் ராஜா மேட்டுப்பட்டி, சேலம்.

நான் கோவை வந்திருந்த போது, தற்செயலாக பார்த்து தன்னம்பிக்கை இதழை வாங்கினேன் மலிவான விலையில் குறைந்த பக்கங்களைக் கொண்டியிருந்தாலும் இதில் வந்த கட்டுரைகளும், கருத்துக்களும் என்னை மிகக்கவர்ந்துவிட்டன. எனக்கு மட்டுமல்லாமல் மற்றவர்களுக்கு எடுத்துக்கூறக்கூடிய கருத்துக்களும் இதில் பல உள்ளன.

இந்த இதழை மக்கள் முன்னேற்றத்திற்கும் உற்சாகம் ஊட்டவும் தன்னம்பிக்கை வளர்க்கவும் திறமுடன் நடத்திவரும் ஆசிரியர் குழுவிற்கு எனது வாழ்த்துக்கள்.

வி.முனியாண்டி, செலங்கோர், மலேசியா.

ஐயா, தன்னம்பிக்கை இதழ் சிறிய ஏடாக இருந்தாலும் பெரிய விஷயங்களைத் தாங்கி வருகிறது.பாதுகாத்து வைத்து எப்போதும் பயன்படுத்திக்கொள்ள முடியும்.சிறுசிறு சந்தேகங்களைத்தீர்க்க- கேள்விபதில் பகுதி தொடங்குவீர்களால் என்போன்ற சந்தேகப்பிராணிகள் தெளிவடைந்து தன்னம்பிக்கை வலிவுபெற உதவியாக இருக்கும்.

சின்னராமன், நாகர்கோவில்.


Share
 

No comments

Be the first one to leave a comment.

Post a Comment


 

 


August 1995

தீதும், நன்றும் பிறர் தர வாரா
வாயுப் பிரச்சனைகள் (கேஸ் டிரபுள்)
* வாழ்வில் முன்னேறத் தேவை நெஞ்சில் நம்பிக்கை
உங்கள் நெஞ்சம்
முயற்சி
ஒரு தோழனின் குரல்-2
ஆளுமைத்திறன் மேம்பாடு
இல. செ. க. வின் சிந்தனைகள்
பற்றிடு!
நிறுவனர் நினைவுகள்
காய்கறி உணவிற்கு மாறுவோம்
சிந்தனைத்துளி
சிந்தனை சிறகடிக்கையில்
புயல்களும் விலகி நிற்கும்
சிந்தனைத்துளி
இளைஞனே, இது ஏடன் தோட்டமல்ல!
இந்த உலகம் பூராவும், மக்கள் வெள்ளம்