Home » Articles » ஒரு தோழனின் குரல்-2

 
ஒரு தோழனின் குரல்-2


தேவராஜன் தி
Author:

– (தி. தேவராஜன்)

எனக்கு அன்பானவர்களே..!
உலகம் நல்லது
உலக மக்கள் நல்லவர்கள்
எங்கும் இன்பம் இதறிக் கிடக்கிறது.
நம் வாழ்க்கை நிச்சயமாக
இன்பமாகவும் கவை நிறைந்தாகவும் இருக்கும்.

இந்த நம்பிக்கையைத் தளர விடாதிர்கள். தோல்விகளே தொடர்ந்து வந்தாலும், மீண்டும் மீண்டும் நம்மைச் செயல்பட வைப்பது இது ஒன்றுதான்.

முன்னேறத்துடிக்கின்ற நாம் எடிசனின் முயற்சியை எண்ணிப்பார்க்க வேண்டும். பல தோல்விகளுக்குப் பிறகே அவரால் மின்சார பல்பைக் கண்டுபிடிக்க முடிந்தது.

பல்வேறு சோதனைகளையும், வேதனைகளையும் தாங்கிக்கொண்டு செயல்பட்டால்தான் கீட்ஸ் என்ற ஆங்கிலக் கவிஞனால் அற்புதமான கவிதைகளை இயற்ற முடிந்தது.

தொழில் மேதை விஸ்வேஸ்வரய்யாவிற்கு பொறியியற் கல்லூரியில் இடம் கிடைக்கவில்லை. ஆனாலும் துவண்டு போகாமல் தன் தொழில் நூட்ப அறிவைப் பெருக்கிக்கொண்டு செயல்பட்டதால்தான் இன்றும் அவர் பொறி யாளர்கறளின் தந்தை ( father of engineers) எனப்போற்றப்படுகிறார்.

காரணம் இது தான்

இக்கட்டடுரையை எழுத நினைத்துக் கொண்டிருந்த வேளையில், எங்கள் வீட்டிற்கு அருகில் சுமார் இருபத்தி ஐந்து வயது இளைஞர் தற்கொலை செய்து கொண்டார். காரணம் தெரியாவிட்டாலும், இந்நிகழ்ச்சி என்னை மிகவும் சிந்திக்கவைத்தது. வாழ்க்கை யென்பது ஒருமுறை வாய்ப்பது. அதை முழுமையாகவும், சந்தோசமாகவும். இலட்சியத்துடனும் வாழ்ந்து முடிக்க வேண்டும்; என்பதை தெளிவாக
உணர்கிறேன். இப்போதெல்லாம் சுயமுன்னேற்றம் தொடர்பாகவே அதிகமாகச் சிந்திப்பதனால், சில படிப்பினைகள் தோன்றுகின்றன. நான் படிக்கின்ற புத்தகங்களும், பழகுகின்ற மனிதர்களும், பார்க்கின்ற சூழ்நிலையும் என்னை எழுதத்தூண்டுகின்றன. இதற்காக நான் அறிஞனாக இருக்க வேண்டும் என்பதில்லை, எனக்குத் தெரிந்ததை எழுதுகிறேன்.

வெற்றி- ஒரு கண்ணோட்டம்

நம்முடைய நினைவுகள் சரியாக இருக்குமானால் நம்முடைய எண்ணங்கள் சரியாக இருக்குமானால் அந்த எண்ணங்கள் பிறரை பாதிக்காமல் இருக்குமானால் அந்த எண்ணங்களுக்கு ஏற்ற உழைப்பு இருக்குமானால் நம் வெற்றி பெருகிறோம்.

இந்த உண்மையை எல்லோரும் புரிந்துகொண்டால், நாம் நிச்சயமாக உயர முடியும்,என்ற அசைக்க முடியாத நம்பிக்கை எனக்கு ஏற்பட்டுள்ளது.

மனம் பழக்கத்திற்கு உட்பட்டது பழகிய ஒன்றையே திரும்பத்திரும்பச் செய்யும் இயல்புடையது. சிறுசிறு நிகழ்வுகளில் நாம் அடையும் வெற்றிகள் கூட பின் நாளில் பழக்கமாகி வாழ்க்கையே வெற்றிமயமாக மாறக்கூடிய சாத்தியக் கூறை ஏற்படுத்தவல்லது. சமீபத்தில் ஜப்பான் மிகப்பெரிய பூகம்பத்தைச் சந்தித்தது. பல கட்டிடங்கள் தரைமட்டமாகியது. பல மக்கள் உயிரிழந்தனர். பல நாடுகளிடம் ஜப்பானிய அரசாங்கம் எங்களுக்கு பண உதவி வேண்டாம். பூகம்பத்தைத் தாங்கக்கூடிய கட்டிடத்தொழில் நுட்பத்தைக் கொடுங்கள் என்று கேட்டுக் கொண்டது. இதுவே கூட ஜப்பானின் தன்மானத்திற்குக் கிடைத்த வெற்றிதான். நிச்சயமாக இது
பழக்கத்தால் தான் வந்திருக்கும். ஏனெனில் ஜப்பானியர்கள் எதையும் இலவசமாகப் பெற்றுக் கொள்ளும் மனோபாவத்தைத் தொடக்கத்திலிருந்தே வளர்த்துக்கொள்ளவில்லை. பழக்கம் பண்பாக மாறும் விதமும் இப்படித்தான்.

பொறுப்பேற்க வேண்டும்

நாம் வெற்றியடையும் போது மட்டும் நான் தான் காரணம் என்று பறைசாற்றுகிறோம். தோல்வியடைந்தாலோ, அதன் காரணத்தை பிறர்மீதோ, அல்லது சூழ்நிலைகள்மீதோ பழிபோட்டுத் தப்பித்துக்கொள்கிறோம்.

தொண்ணூற்றொம்பது சதவிகிதத் தோல்விகள் நம்மால்தான் ஏற்படுகின்றன. 1994-ல் நடந்த யு.எஸ். ஓப்பன் டென்னீஸ் போட்டியில், ஸ்டெப்பிகிராஃப், அரண்டசா, என்பவரிடம் தோற்றுப்போனார்.

இரண்டாவது செட்டில் எட்டாவது ஆட்டம், ஒரு ஷாட்டைத் தடுத்து நிறுத்த முற்ப்பட்டார். பழைய முதுகுவலி பிய்த்துக் கொண்டு கிளம்பியது. பாயிண்ட்கள் சரிந்தன. இருந்தாலும் பனிரெண்டாவது ஆட்டம் வரைக்கும் போராடினார். டைபிரேக்கர் வரை கொண்டு வந்து நிறுத்தினார். ஆட்டம் முடிந்தது. ஆயிரக்கணக்கான மக்கள் முன்பு மைக்கில் கேட்கிறார்கள். ‘உங்கள் தோல்விக்கு முதுகு வலி காரணமா?

சிரிக்கிறா ஸ்டெப்பி. இன்று அரண்ட்சா அருமையாக ஆடினார் அதனால் ஜெயித்தார் என்றார். அவர் தோல்விக்கு காரணங்களைத்தேட வில்லை.

உடல் குறைமீது பழிபோட்டு அனுதாபம் தேட முயற்சிக்கவில்லை. ஸ்டெப்பிகிராஃப் ஆட்டத்தில் தோற்றார் ஆனால் மனித மனங்களை வென்றார்.

பயிற்சி செய்வோம்

முன்னேற்றம் என்பது முற்றுப்
பெறுவதல்ல
முயன்று கொண்ட இருப்பது
தான்,

கீழ்க்கண்ட பயிற்சி முறைகள் நம்மை வெற்றிப்பாதைக்கு அழைத்துச் செல்லும்

* அதிகாலை எழுவதைத்தள்ளிப்போடாதீர்கள்.

* உங்களையும் உங்கள் ஆடைகளையும் எப்போதும் சுத்தமாக வைத்திருக்கப்பழகுங்கள்.

* நிறையக் கேட்டுக் குறைவாக பேசுங்கள்

* ஒரு நாளில் ஒவ்வொரு மணிக்குமான வேலையைப் பட்டியலிட்டுச் செயல்படுத்துங்கள்.

* புன்முறுவலோடு இருக்க மறக்கவேண்டாம்.

* உங்களுக்கென ஒரு நண்பர்கள் வட்டத்தை ஏற்படுத்திக்கொள்ளுங்கள்.

* உங்களை நல்வழிப்படுத்தக்கூடிய புத்தகங்களை ஒவ்வொரு மாதமும் படிப்பதை வாடிக்கையாக்கிக்கொள்ளுங்கள்

* உங்கள் இலட்சிய உறுதியைச்செயலில் காட்டுங்கள்.

* தோல்விகளால் துவளாமல் அதற்கான காரணங்களை ஆராயுங்கள்.

* வருடமொருமுறை புதிய சூழ்நிலைக்குச் ( சுற்றுலா) சென்று திரும்புங்கள்.

வயிரமாக ஜொலிப்போம்

தோல்விகள் என்னும் உளியால் பட்டை தீட்டப்பட்ட நாம் புதுவயிரமாக ஜொலிப்போம். நம்புங்கள். நல்லது நடக்கும் எனக்கு அன்பானவர்களே

சிந்தித்ததைச் செயல்படுத்தும் தருணம் இதுதான்.

விளக்குள்ளபோதும் இருட்டறையா
விடிந்த பிறகும் நிந்திரையா
இந்து உலகம் நம்மை அழைக்கிறது
இன்னும் வாழ்க்கை இருக்கிறது
முயற்சி செய்வோம்!
பயிற்சிசெய்வோம்!
முன்னேறுவோம்!

 

No comments

Be the first one to leave a comment.

Post a Comment