Home » Articles » கருத்துக் குவியல்கள்

 
கருத்துக் குவியல்கள்


admin
Author:

கல்கியில்

ஒரு இயக்குநர் மிகச் சிறந்த இயக்குநராக உயர்வதற்கு அடிப்படையான ஒரு குணம் அவரது தன்னம்பிக்கை.
தன்னம்பிக்கை என்பது ஆன்மா மாதிரி ஒரு முறை வெளியேறிவிட்டால் அது மீண்டும் திரும்பி வருவதில்லை.
ஈகோ என்பது ஒரு ‘நெகடிவ்’ குணம் தன்னம்பிக்கை ஒரு பாஸிடிவு குணம் ஒரு வேலை தன்னம்பிக்கையோடு எடுக்கப்படுகின்ற சில முடிவுகள் சில நேரங்களில் தோல்வியைத் தழுவலாம்ந என்றாலும் தன்னம்பிக்கை தான் மனித மேம்பாட்டிற்கு அடிப்படையான ஒரு குணநலன்.
வாய்ப்பு மட்டுமே வெற்றிக்கு ஆதாரமாகிவிடாது. ஆனால் தன்னம்பிக்கை வெற்றிக்கு அடிகோலுகிறது. அது ஒரு சவால். எனது தன்னம்பிக்கை என்னைக் கைவிடவில்லை.

டைரக்டர் K. பாலச்சந்தர்
——————————————————————————

கற்பனை வளமும் துணிந்த முயற்சி ஆர்வமும், இல்லையேல் சமூகம் தேக்கநிலைகண்டு உளுத்துப்போகத் தொடங்கும்.
எதைச் சாதிக்கவும் பலாத்காரத்தைப் பயன்படுத்தலாம்ந என்றாலும் அதனை ஆக்கபூர்வமான ஆற்றலாகப் பயன்படுத்த வேண்டுமே தவிர அழிவை நோக்கிய வன்முறையாக அல்ல.
செயல்படாமை சாவுக்குச் சமம். செயற்படுவதே வாழ்க்கை செயற்படாமலேயே இருந்து விடுவதைக் காட்டிலும் போரிடுவது போன்ற வன்முறைச் செயலில் இறங்குவது மேலானதே. ஏனெனில், செயலை மேற்கொண்டால்தான் மேலும் செவ்வனே செய்ய வாய்ப்புண்டு.
ஒவ்வொரு மனிதனுக்கும் தன் வினைத் திறமையை வெளிப்படுத்துகிறோம் என்ற உணர்வு ஏதாவதொருவகைப் போட்டி எதிர்ப்பைச் சமாளித்துவிட்ட நிறைவு தேவைப்படுகிறது.
பொருளாசை மனித சுபாவத்தைச் சிதைத்துவிடுகிறது. எவ்வாறெனில் மனநிறைவுக்கு ஒரு தவறான தத்துவத்தை அது திணிக்கிறது. மானிட நல்வாழ்வுக்குச் சிறிதும் உதவாத முயற்சிகளுக்கு உயர்வளிக்கிறது.

– பெர்ட்ரண்ட் ரஸ்ஸல்

 

No comments

Be the first one to leave a comment.

Post a Comment


 

 


October 1994

கருத்துக் குவியல்கள்
பேரவைச் செய்தி
உழைக்கும் மனப்பான்மை குறைந்து வருகிறது
ஆசிரியரின் டைரிக் குறிப்பு
உங்கள் நெஞ்சம்
சிந்தனைத் துளி
பிரச்சினையும் தீர்வும்
வாழ்த்துப்பா
முயன்றால் முடியாததும் உண்டோ?
தன்னம்பிக்கை
இல.செ.க.வின் சிந்தனைகள்
எல்லாம் உங்கள் கையில்