Home » Articles » ஆசிரியரின் டைரிக் குறிப்பு

 
ஆசிரியரின் டைரிக் குறிப்பு


admin
Author:

ஆழ்மனம் : நாம் செய்யும் நன்மை தீமைகள் இரண்டும் நம் ஆழ் மனத்தில் பதிவாகின்றன. அதற்கேற்ப பின் விளைவுகள் நேர்கின்றன.

எது அறிவுடைமை : ஒரு கருத்தைச்சொன்னவுடன் அதை உடனே சமுதாயம் ஏற்றுக் கொள்ளவேண்டும் என்று எதிர்பார்ப்பது அறிவுடைமை ஆகாது.

உலகம் நாகரீகம் பெறுவது : எல்லோரும் சகோதரர்கள் என்ற உணர்வு தழைக்கும் காலம்தான் உலகம் நாகரீகம் பெற்ற காலமாகும்.

துன்பம்: துன்பம் எப்போது வருகிறது. நாம்தான் பெரியவர்கள் என்று வேறுபடுத்தி நம்மை எல்லோரும் அங்கீகரிக்க வேண்டும் என்று எண்ணுவதாலேயே துன்பம் வருகிறது. எல்லோரைப் போல நாமும் ஒரு சாதாரணம் என்று நினைத்துக் கொண்டால் துன்பமில்லை!.

துன்பம் தொடர்வது எப்போது : அழகிய பொருள்களைக் கண்டு புகழ்வதில் தவறில்லை. அவற்றைச் சொந்தமாக்கிக்கொள்ள நினைக்கும் போதுதான் துன்பம் தொடர்கிறது. அவற்றைத் தவறான வழியில் அடைய முனையும்போது அழிவும் தொடர்கிறது.

தோல்விக்குக் காரணம் : எடுத்த காரியம் வெற்றிபெறாதபோது அதற்குக் காரணமானவர்களைக் கோபித்துப் பயனில்லை. அதற்குரிய காரணங்களைக் கண்டறிந்து போக்க முயற்சிக்க வேண்டும். மாறாக உணர்ச்சிவசப்பட்டால் மேலும் மேலும் தோல்வியைச் சுமக்கவே நேரிடும்.

தெளிவு : ஒரு கால கட்டத்திற்குப் பிறகு வாழ்க்கையில் ஒரு தெளிவு பிறந்துவிடுகிறது. மனிதன் வாழ்வின் உண்மைப் பொருளை உணர முற்பட்டுவிடுகிறான்.


Share
 

No comments

Be the first one to leave a comment.

Post a Comment


 

 


October 1994

கருத்துக் குவியல்கள்
பேரவைச் செய்தி
உழைக்கும் மனப்பான்மை குறைந்து வருகிறது
ஆசிரியரின் டைரிக் குறிப்பு
உங்கள் நெஞ்சம்
சிந்தனைத் துளி
பிரச்சினையும் தீர்வும்
வாழ்த்துப்பா
முயன்றால் முடியாததும் உண்டோ?
தன்னம்பிக்கை
இல.செ.க.வின் சிந்தனைகள்
எல்லாம் உங்கள் கையில்