Home » Articles » பிரச்சினையும் தீர்வும்

 
பிரச்சினையும் தீர்வும்


சுவாமி சுந்தரானந்தா
Author:

நான் பன்னிரண்டாம் வகுப்பு படித்து வருகிறேன். என் பெற்றோருக்கு நான் ஒரே மகன். படிப்பில் முழு கவன்ம் செலுத்த முடிவில்லை. சோம்பல் அதிகமாக உள்ளது. விடுமுறையில் என்ன செய்யவேண்டுமென்று முதல்நாளே திட்டமிட்டாலும் சோம்பல் காரணமாகத் திட்டமிட்டபடி செயல்பட முடிவதில்லை. பிரச்சினைக்கு நல்ல தீர்வு தர வேண்டுகிறேன். இவ்வாறு மாணவர் பிரசாத் எழுதிள்ளார். அவருக்கு நேரடியாக எழுதப்பட்டுள்ள ஆலோசனையின் ஒரு பகுதி.

சோல்பலை அகற்ற வேண்டும் என்ற எண்ணம் மட்டும் பொதாது. எண்ணத்தை நிறைவேற்ற சூழ்நிலை ஒத்துவரவேண்டும்; படிப்பில் முழு கவனம் செலுத்தவும் வேண்டும் என்ற எண்ணம் வரவேற்க வேண்டியதே. சோம்பலை நீடிக்கச் செய்யும் சூழ்நிலை என்ன? ஒழிக்க வேண்டும் என்று எண்ணினாலும் சோம்பியே இருக்கலாம் என்றி க்ஷன் மனம் எண்ணுகிறது. மாணவர் பிரசாத் உழைப்பதில் உடல் உழைப்பு மூலம் ஏதேனும் காரியமாற்றுவதில் விருப்பமின்றியே வளர்ந்திருக்கக் கூடும். வேலையா? யாரோ செய்யட்டும்; நமக்குப் படிப்பு மட்டுமே முக்கியம் என்ற எண்ற எண்ணம் மேலோங்கி இருக்கின்ற காரணத்தான் சோம்பலைத் தவிர்க்க முடியவதில்லை. உழைப்பு பற்றிய எண்ணத்தை மாற்றிக் கொண்டு உடல் உழைப்பை அளித்து அவர்களுடன் இணைந்து கோள்ள வேண்டும். அவர்களை ஒதுக்கிவைத்து விட்டு, படிக்கும் மாணவன் என்ற ஒரு சலுகையை அனுபவித்து வருவது சோம்பலை வளர்க்கும். படிப்பவர்கள் பெற்றோர்களுக்கு உதவ வேண்டியதில்லை; வேலைகள் எதுவும் செய்ய வேண்டியதில்லை என்று நினைவூட்டு நண்பர்களுடன் சேர்ந்து காலத்தை வீண்டிப்பதால் சோல்பலை நீட்டிக்க மனம் விரும்புகிறது. எனவே சோம்பிக்கிடக்கும் அல்லது சோம்பித்திரியும். நேரத்தை உடல் உழைப்பில் செலவிடுங்கள.
சுவாமி சுந்தரானந்தா.

 

No comments

Be the first one to leave a comment.

Post a Comment


 

 


October 1994

கருத்துக் குவியல்கள்
பேரவைச் செய்தி
உழைக்கும் மனப்பான்மை குறைந்து வருகிறது
ஆசிரியரின் டைரிக் குறிப்பு
உங்கள் நெஞ்சம்
சிந்தனைத் துளி
பிரச்சினையும் தீர்வும்
வாழ்த்துப்பா
முயன்றால் முடியாததும் உண்டோ?
தன்னம்பிக்கை
இல.செ.க.வின் சிந்தனைகள்
எல்லாம் உங்கள் கையில்