Home » Cover Story » முயன்றால் முடியாததும் உண்டோ?

 
முயன்றால் முடியாததும் உண்டோ?


வள்ளியப்பன் எஸ்.எம்
Author:

கபில்தேவ் இன்று இந்தப் பெயர் குழந்தைகளுக்கும் பெரியவர்களுக்கும் கூடத் தெரிந்த பெயராகிவிட்டது. உலக சாதனை நிகழ்த்திய இந்திய வீர்ர் கபில்தேவ். கிட்டத்தட்ட பதினாறு ஆண்டு உழைப்பின் வெற்றி அல்லவா இது!

உலகப் பத்திரிகைகள் அனைத்திலும் செய்தி. பல இடங்களில் பாராட்டு விழா பணம். பரிசளிப்புகள். இன்னும் எத்தனையோ இந்தப் புகழுக்கு என்ன காரணம்? 432 விக்கெட்டுகள் எடுத்து ரிச்சர்டு ஹாட்லி சாதனை படைத்தது தான்.

ஏன் வேறு எவராலும் செய்ய இயலவில்லை? கபிலால் முடிந்திருக்கிறது திறமை. ஆமாம் திறமை இருந்தால் முடியும்தான். ஆனால், திறமைமட்டும் இருந்த பலரால் சாதனை நிகழ்த்த இயலவில்லையே! ஆமாம் அதுவும் உண்மைதான். அப்படியென்றால் வேறு என்ன விஷயம் கபில்தேவை இத்தனை பெரிய சாதனையாளனாக்கியிருக்கிறது.

அவர் தொலைக்காட்சிக்கு அளித்த பேட்டியைக் கேட்டவர்களுக்குத் தெரிந்திருக்கும். தனது ஆரம்பகால கிரிக்கெட் நாட்களை நினைவு கூர்ந்தார். ஹியானா மாநிலத்தில் ஒரு சாதாரண வசதியுடைய குடும்பத்தில் பிறந்தவர்; விளையாடத் துவங்கிய பொழுது கிடைத்த சின்னத் தொல்லேகளும், பெரிய தொல்லைகளும் அவரைப் பாதிக்க விடாமல் பார்த்துக் கொண்டார். அவர் இலட்சியமெல்லாம் சாதனை நிகழ்த்துவதிலேயே இருந்திருக்கிறது. அவருடைய தனித்தன்மே இதிலெல்லாம் இல்லை. அதற்குப் பிறகு சின்னச் சின்ன சச்சரவுகள் காரணமாக தலைவர் பதவியை இழந்தார். ஆயினும் தொடர்ந்து விளையாடினார். ஒரு டெஸ்ட் பந்தயத்தில் விளையாதவே தேர்வு செய்யப்படவில்லை. என்ன அநியாயம்?

இங்கு தான் அவர் வெற்றியின் இரகசியம், தனித்தன்மை இருக்கிறது எனலாம். ஆத்திரப்படவில்லை. அவசரப்படவில்லை. சின்ன தொந்தரவுகள், பெரிய சிரமங்களைப் பொருத்துக்கொண்டார். அன்றும் அதற்கு முன்பும்ரோஷயம், பழிவாங்கல் என்றெல்லாம் தன் கவனத்தை சிதற விட்டிருந்தாரானால் அவரை இன்று Living legend என்று பாரதப் பிரதமர் பாராட்டும் சந்தர்ப்பம் வந்திருக்குமா? கபில் போல் பல சாதனையாளார்களின் வெற்றிக்கு இந்த ‘ஒருமுகப் படுத்தப்பட்ட முயற்சி’ (concetrated efforts) காரணமாக இருந்ததை நாம் தெரிந்து கொள்ளலாம்.

‘single vision’ என்பார்கள் அதுபோல கொண்டதிலேயே கவனம் மற்ற எதுவும் பொருட்டல்ல. ஒரு சில மாணவர்கள் இருக்கிறார்கள் வீட்டில் ஏகப்பட்ட சிரமங்கள், பிரச்சினைகள் இருக்கும். ஆனால், அவர்கள் கவனம் படிப்பில் மட்டுமே.

நடேசன் என்று ஒரு பெரியவர். அவருக்கு இரண்டு மகன்கள். சாதாரணக் குடும்பதான். அவரிடம் பேசிக் கொண்டிருந்த பொழுது மிகப் பெரிய ஆச்சரியம் ஏற்பட்டது. முதல் மகனுக்கு வேலை கிடைத்து விட்டதாம். பம்பாயில் சைட் இன்ஜினியர். என்ன சம்பளம்? ஆறாயிரத்து எண்ணூறாம். அடுத்தவன் மருத்துவம் படிக்கிறான். கடைசி ஆண்டு என்றார். என்னால் நம்ப முடியல்லை. பெரிய வசதியான குடும்பம் இல்லை. வீட்டில் அதிகம். படித்தவர்கள் இல்லை. இருந்தாலும் அவர்கள் படித்த பள்ளியும் பெரிய கான்வென்ட் இல்லை. சிறு பிராயத்தில் வீடு வசந்ததும் படிக்க ஆரம்பித்தி விடுவார்களாம். அனாவசிய வம்பளப்பு, பேச்சு, சுற்றுதல், சினிமா கிடையாதாம். பள்ளியில் முழுக்கவனமாம். அண்ணன் தம்பிக்கு சொல்லிக் கொடுப்பானாம். ஆசிரியர்கள் வீடு தேடிப் போவார்களாம்.

ஒரே நோக்கமாய் இருந்தால் தானே இன்று இத்துணை உயர் பதவிகள், மதிப்புகள். சின்னச்சின்ன விஷயங்களால் ஈர்க்கப்பட்டு திசை திருப்பப்பட்டு இலக்கைத் தவற விடுபவர்கள் சாதிக்க இயாலாதுதானே!

அனாவசியமான EGO, நான் என்ற எண்ணம், வந்த சண்டையை விடுவதில்லை என்ற போர்க்குணம், விவேகமற்ற செயல்கள், பலவற்றிற்கும் ஆசை. போலி மரியாதைகளுக்கு ஆவல். இன்னும் எண்ணற்ற காரணங்களினால் கவனம் தவறி விடுகிறதல்லவா?

எத்தனையோ நபர்களின் மேலதிகாரிகள் கத்துகிறார்கள். கோபிக்கிறார்கள். தொந்தரவு கொடுக்கிறார்கள். மாமியார் மருமகளைக் கொடுமை செய்கிறார். பொருத்துப் போகிறார்கள் ஏன்? அவர்கள் கவனம் வேறெதன் மேலோ அல்லவா?

பேசாத வார்த்தைகளுக்கு நாம் எஜமான்; பேசித வார்த்தைகள் நமக்கு எஜமான்; என்பது போல அவர்கள் தான் தங்களுடைய குறிக்கோளை அடைவதற்காக எத்தனை கவனமா இருக்க வேண்டியள்ளது.

நிறுவனங்களிலே பணிபுரிகிறவர்களில் இளைஞர்களை கவனித்தால் தெரியும். பணி செய்து கொண்டே மேலும் படித்தார்கள். வேலைக்கு வந்தாகிவிட்டது. சம்பளம் வருகிறது. சாப்பிடலாம், துங்கலாம், ஊர்சுற்றலாம். ஆனால், பெற்றோர் தூண்டுதல் கூட இன்றி தானே சிலர் விடாது படிப்பது வேலையில் முன்னேற்றம் என்ற தங்களது வாழ்வில் முன்னேற்றம் என்ற இலக்கினை நோக்கித்தானேழ

இசை, நாட்டியம், ஓவியம், சமையல், தையல், படிப்பு, எழுதுதல், வியாபாரம், சரித்திரம், மதம், ஜோதிடம், வாகனங்கள் ரிப்பேர், ஹாபி எதுவாக வேண்டுமானாலும் இருக்கலாம். நமக்குப் பிடித்த ஏதாவது ஒன்றிலாவது. நாம் Expert ஆக மிகத் திறமையானவராக வரவேண்டாமா?

நமது தமிழ் அறிஞர்கள் கூட அகல உழுவதை விட ஆழ உழு என்பது இதைத்தானே.

ஏதாவது ஒரு துறையிலாவது முழுக்கவனம் செலுத்தி அதில் முதல் நிலையை அடைவோமே!

நமது நோக்கம் எது என்பதில் தெளிவாக இருப்போம்.

அந்த நோக்கம் அடையப்பட வேண்டியது என்பதை மீண்டும் மீண்டும் மனதில் நிறுத்தி அதை உள்வாங்கிக் கொள்வோம்.

அதை அடைவதற்காக இன்றைய தொந்தரவுகளைப் பொறுத்துக் கொள்வோம்; கவனம் சிதற விடாதிப்போம்.

இலட்சியம் எதுவானாலுதம் தொழிலோ, கல்வியோ, விளையாட்டோ, கலைத்துறையோ, எழுத்தோ, பிற கலைகளே அது எதுவானாலும் அதை நிச்சயம் அடைவோம். வெற்றிடாமுயற்சி, தன்னம்பிக்கை, உழைக்கும் ஆர்வம் ஆகியவைகள் மனித வாழ்வின் வெற்றிக்கு வேண்டிய அடிப்படைக் கூறுகள். அடக்கமான பேச்சு, ஆரவாராமற்ற தன்மை ஆகியன ஆனந்த வாழ்விற்கு வழி வகுக்கும் பண்புகளாகும்.

நம்முடைய செயல்களே நாம் எப்படிப்பட்டவர் என்பதை பிறருக்கு தெளிவாக உணர்ந்தும். நம் உள்ளத்தில் எவ்வளவுக்கெவ்வளவு அமைதி நிலவுகின்றதோ அவ்வளவுக்கவ்வளவு நம் வாழ்க்கையில் இன்பம் நிலைத்து நிற்கும். வாழ்வில் அமைதி குறையக் குறைய துன்பம் தலைநீட்டும். அமைதி இல்லாத இடத்தில் இன்பம் இருக்க முடியாது என் பார் ஜான்ட்ரைடர்.

அறிஞர் அண்ணா அமைதியை இரண்டு வகையாகப் பிரிப்பார். ஒன்று விவரமே தெரியாமல் இருக்கிற அமைதி. இன்னொன்று எல்லா விவரங்களையும் தெரிந்திருக்கும் அமைதி.

கட்டுப்பாடற்ற பேச்சு தான் பல்வேறு தொல்லைகளுக்கு அடிப்படைக் காரணமாக அமைகின்றது. வாயை அடக்கிக் கொள்வதே வாழ்வில் வளம் பெற சரியான வழியாகும். அதனால் தான் வள்ளுவரும் நாகாக்க என நாசுக்காக சுட்டிக் காட்டினார். ஆங்கிலத்திலும் இதையே ”Speek Less Do more” குறைவாக பேசு, அதிகமாக செய் என்பார்கள். ஒவ்வொரு வரும் தனக்கு தெரிந்ததை மட்டும் பேசினால் உலகில் அமைதி நிலவும். ஆடம்பரமில்லாத எளிய வாழ்வும் செருக்கு இல்லாத நடத்தையும் தான் ஒவ்வொருக்கும் அவசியமானவை. அவை உடலுக்கும் உள்ளத்திற்கும் தேவையான நல்லவை. நன்றாகப் பேசுவாக நல்லது தான் ஆனால், நன்றாக செய்வது அதனினும் நல்லது என்றார் கிளார்க்.

செருக்கு தேவர்களை அசுரர்களாக மாற்றும் அடக்கம் மனிதர்களை தேவர்களாக ஆக்கும். துன்பங்களையும் இழப்புக்களையும் அடைந்த பின்னரே மக்கள் அதிகமாக அடக்கத்தையும் அறிவையும் பெறுகின்றனர். செருக்குள்ள மனிதன் சீரழிந்து விடுவான். செருக்கு மனித வாழ்வின் செழிப்பை உயர்வை சிதைத்து விடும்.

செருக்குள்ளவனை எல்லொரும் தூற்றவார்கள். செருக்கு அவனையே அழித்துவிடும் கொடிய விஷம் உடையது. செருக்கு மனிதனை ஊத வைக்கும். மேலே உயர்த்தாது. கோபம் எப்படி அன்பை அழிக்கின்றதோ அதைப்போல செருக்கு அடக்கத்தை அழ்த்து விடுகின்றது.

அமைதியான வாழ்வே ஆனந்தமான வாழ்வு. அமைதியான உள்ளமே மகிழ்ச்சிக் கடலில் எல்லை என்பார் அறிஞர் பெர்னாட்ஷா. அமைதியாலும் சாதனைகள் செய்ய முடியும். ஆதவாரமற்ற மனிதன் அனைவராலும் போற்றப்படுவான்.

அமைதிக்கும் வெற்றிகள் உண்டு. அவை போரின் வெற்றியைவிட புகழில் குறைந்தது அல்ல என்பான் கவிஞன் மில்டன். அமைதிப் போராட்டத்தால் அற்புதமான சாதனை சாதிக்க முடியும்.

அமைதியிலும் அசையா உறுதியிலும் தான் நம் வாழ்வின் வளமு உள்ளது என்பதை மறந்துவிடக்கூடாது. மன உறுதி இருக்கும்போது வேறு உறுதியும் .———————–யற்றதும்கூட தற்பெருமை கொள்ளும் மனிதனை மற்றவர்கள் புறக்கணிப்பார்கள். உற்ற நண்பர்கள் அவனுக்கு மிகவும் குறைவு. அவனிடம் கண்ணீயம் இருக்காது. கடமை உணர்வு இருக்காது. கட்டுப்பாடு இருக்காது. எல்லாமே தான் தான் என்பதால் இவைகளுக்கு முக்கிந்த்துவம் கொடுக்க மாட்டன். தற்பெருமை அழியும் நாளே அவனுக்கு உண்மையான வாழ்வு ஆரம்பமாகும் நாள். தற்பெருமை எங்கு முடிகின்றதோ அங்கு கண்ணியம் ஆரம்பமாகின்றது என்பார் டாக்டர் ச.மெய்யப்பன்.

அமைதியாகவும் அடக்கமாகவம் வாழ்வும் வாழ்பவன் இம்மையிலும் மறுமையிலும் இன்பம் அனுபவிக்கின்றான். பதறாத வாழ்வு சிதறாது என்பது முதுமொழி. பதட்டப்படுவதால், ஆவது ஏதுமில்லை. செப்பனிடப்பட்ட வாழ்வில் தப்புக்கள் நிகழ்வதில்லைழ இது கம்பன் உணர்த்தும் உண்மை. நிதானமான வாழ்வே நிம்மதி நிறைந்தது. நான் எப்பொழுது அவசரப்பட்டாலும் ஒரு பொழுதும் பரபரப்படைந்ததில்லை என்கிறார் ஜான் வெஸ்லி. பரபரப்பானவன் எந்தக் காரியத்தையும் முழுமையாக செய்ய முடியாது. பேரும் புகழும் அவனை அண்டாது.

நிதானமாக செயல்படும் எவரும் தோல்வியைத் தழுவியத்தில்லை. ஆத்திரப்படும் எவரும் வெற்றியை கண்டதில்லை. அளவான பேச்சு எளிமையான வாழ்வு மனிதனை உயர்த்தும் மகத்தான செயல்களாகும்.

அமைதி தான் மனிதனடையும் பெரும்பேறு. அமைதிமட்டுமல்ல. புயலும் நிறைந்தது தான் வாழ்க்கை. அமைதி பலாத்காரத்தால் அமைவதாகாது. நன்கு புரிந்து செயலாற்றுவதிலேயே இருக்கிறது. அமைதி நிறைந்த வாழ்க்கையே வாழ்க்கை என்றார் அறிஞர் பெர்ட்ரன்ட் ரசல்.

மெதுவாக பேசு. அது உன் இரகசியங்களைப் பாதுகாக்கும். நல்ல எண்ணத்தோடு இரு. அது தன் நடத்தையைப் பாதுகாக்கும். வள்ளலார். உன்னைத் தவிர வேறு யாரும் உனக்கு அமைதியைத் தரமுடியாது என்று கூறும் ரால்ப் வால்டோ எமர்ஸனின் கருத்தை மனதில் கொள்ள வேண்டும்.

அவசரப்படுவதாலோ, ஆத்திரப்படுவதாலோ, மனம் பதற்றப்படுவதாலோ எதுவும் உடனடியாக நடந்துவிடாது. மெல்ல மெல்லத் தான் எல்லாம் நடக்கும். உழவன் மூன்று மாதம் காத்திருந்தால் தான் அறுவடை செய்ய முடியும். நீண்ட தூரம் தாண்ட முடியும். எனவே பொறுமையும் விடாமுயற்சியும் வெற்றிக்கு வேண்டிய அடிப்படை கூறுகளாகும். வாழ்நாள் முழுதும் ஒருவன் உழைத்தால் தான் ஒரு துறையில் தனிச்சிறப்பு நிலையை அடைய வாய்ப்பு அவருக்கு கிட்டும்.

அடக்கமே அறிவுடைமையின் சிறந்த அடையாளம். அதனால் தான் நிறைகுடம் தளும்பாது என்கிறோம். அடக்கம் அமரருள் வைக்கப்படும் என்பார் வள்ளுவன்.

இளமையில் துன்பம் என்னும் பள்ளியில் கற்றவன் தான் முதுமையில் மகிழ்ச்சியாக வாழ்கின்றான். வேதனையை பொறுத்துக் கொள்ளும் சக்தி உடையவன் வெற்றி பெறுவது உறுதி. ஆரம்ப காலத்தில் சாதனை படைக்க முடியும். அந்த ஆரம்ப கால சோதனைகளும் வேதனைகளும் பிற்கால வெற்றி என்னும் மாளிகைக்கு படிக்கட்டுக்களாக அமைந்து விடுகின்றன.

 

No comments

Be the first one to leave a comment.

Post a Comment


 

 


October 1994

கருத்துக் குவியல்கள்
பேரவைச் செய்தி
உழைக்கும் மனப்பான்மை குறைந்து வருகிறது
ஆசிரியரின் டைரிக் குறிப்பு
உங்கள் நெஞ்சம்
சிந்தனைத் துளி
பிரச்சினையும் தீர்வும்
வாழ்த்துப்பா
முயன்றால் முடியாததும் உண்டோ?
தன்னம்பிக்கை
இல.செ.க.வின் சிந்தனைகள்
எல்லாம் உங்கள் கையில்