Home » Articles » தன்னம்பிக்கை

 
தன்னம்பிக்கை


admin
Author:

பரந்து வரிந்து கிடக்கும் உலகில் தனிமனிதன் வாழ்வில் இன்பங்களும் துன்பங்களூம் தொடர்ந்து கொண்டேயிருக்கின்றன. துன்பங்களைக் குறைத்து இன்பங்களைப் பெருக்கிக் கொண்டு வாழ்வதே சிறந்த வாழ்வு, தனிமனிதன் முயற்சிகளும் முன்னேற்றமும் வாழும் சமுதாயத்தின் தன்மையைச் சார்ந்து இருக்கிறது. மனிதன் தனக்கு வேண்டுயவைகளைப் பயன்படுத்தி, தனது உழைப்பைத் தந்திடுகிறான். இந்தப் பண்டமாற்று முறையை ஒழுங்குபடுத்திடும் ஊடகமாகப் பணம் பயன்படுத்தப்படுகிறது.

சமுதாய உறுப்பினர்களின் ஆக்கங்கள் அனைத்தும் பன மதிப்பீட்டிற்கு மாற்றப்பட்டு அனைவருக்கும் பங்கிட்டுத் தரப்படுத் தரப்படுகிறது. இப்பனி செவ்வனே நடைபெற அரசியல் துணை செய்கிறதுழ

எனவே ஒரு மனிதனின் விருப்பு வெறுப்புக்களும் தேவைகளும் ஆக்க சக்திகளும் சமன் படுத்துகின்ற செயல்களில் வேறுபாடுகள் தோன்றும்போது பிரச்சினைகள் தோன்றுகின்றன. அத்தகைய பிரச்சினைகளைச் சமாளித்துக் கொண்டுதான் மனிதன் தனது சமுதாயக் கடமைகளை நிறைவேற்ற வேண்டும். இந்த சமுதாயக் கடமைகளை நிறைவேற்றும் போது சமுதாயம் பற்றிய அறிவும் அதில் தனது பங்களிப்பு எவ்வளவு தேவை எந்த அளவு ஏற்றுக் கொள்ளப்படும் என்பதைத் தீர்மானித்துக் கொண்டு சமுதாயத்தில் ஒரு அங்கத்தினன் என்ற முறையில் வாழ்வை அமைத்துக் கொள்ள வேண்டும்.

தனது இடத்தை நிர்ணயித்துக் கொண்டு அதில் நிலைத்து நின்று முன்னேற முயலும்போது எதிர் கொள்ளும் பிரச்சினைகளைச் சமுதாயத்தின் விரிவடையும் தன்மையிலிருந்து பரிசீலித்திட வேண்டும். எந்த அளவு சமுதாயம் விரிவடைகிறதோ அதே திசை வழியில் சென்று வாழ்வை வளப்படுத்தத் தன்னம்பிக்கையையும் விரிவாக்கிக் கொண்டே செல்லவேண்டும்.

தன்னம்பிக்கை வாசகர் தமது அனுபவங்களையும் கருத்துக்களையும் மற்றவர்களுடன் பரிமாறிக்கொள்ள வேண்டுகிறோம்.


Share
 

No comments

Be the first one to leave a comment.

Post a Comment


 

 


October 1994

கருத்துக் குவியல்கள்
பேரவைச் செய்தி
உழைக்கும் மனப்பான்மை குறைந்து வருகிறது
ஆசிரியரின் டைரிக் குறிப்பு
உங்கள் நெஞ்சம்
சிந்தனைத் துளி
பிரச்சினையும் தீர்வும்
வாழ்த்துப்பா
முயன்றால் முடியாததும் உண்டோ?
தன்னம்பிக்கை
இல.செ.க.வின் சிந்தனைகள்
எல்லாம் உங்கள் கையில்