நதிகளை தேசிய உடமையாக்குவோம்
Let us nationalize the rivers

கங்கை – காவிரி – குமரியை இணைப்போம்
Let us Link Ganga – Kauveri – Kumari


இல.செ.க. சிந்தனைகள்

பொறுப்புணர்ச்சி

பொதுமக்களுக்கு என்று சில சமுதாயப் பொறுப்புணர்ச்சி இருக்கவே செய்கிறது. தீமைகளைத் தட்டிக்கேட்கவும் கொடுமைகளை எதிர்த்து நிற்கவும் இனி அஞ்சக்கூடாது. நியாயத்திற்காகப் போராடுவதால் துன்பம் வரும்போல் தோன்றினாலும் அது நிரந்தரத் துன்பமல்ல. நியாயத்திற்காகப் போராடிய மன நிறைவு உண்டாகும். ஆதலின் அவரவர் கடமைகளைச் செய்தால் மட்டும் போதாது. கடமைகளைப் புறக்கணிக்கின்றவர்களை இனம்கண்டு, அவர்களைத் திருத்தவும் வேண்டும். நல்லவர்கள் ஒதுங்கி ஒதுங்கி வாழ்வதால் அவர்களும் ஒருவகையில் தீமைக்குத் துணை போகின்றவர்களே ஆகிறார்கள். “அவர்களே ஒன்றும் சொல்வதில்லை. நீ என்ன?” என்று மிரட்டியே கெட்டவர்கள் காரியத்தைச் செய்துகொண்டு இருக்கிறார்கள்.

Continue Reading »