Home » Articles » நாம் நினைத்த குறிக்ககோளை

 
நாம் நினைத்த குறிக்ககோளை


admin
Author:

நாம் நினைத்த குறிக்ககோளை அடைவதில்தான் நம்முடைய உண்மையான கௌரவம் அமைகிறது.

கசப்பான சம்பங்கள் அவ்வப்போது வரத்தான் செய்கின்றன. சிலர் வருடகணக்கில் அதை நினைத்து மனம் நொந்து அழுகிறார்கள். சிலர் சம்பந்தப்பட்டவர்களை வஞ்சம் தீர்க்க வாழ் நாள் முழுவதும் குறிபார்த்து, மனம் கொதிப்படைகிறார்கள். மிகச் சிலரே, அதை உடனுக்குடன் மறந்துவிட்டு, மேலும் முன்னோக்கி பயணம் செய்கிறார்கள். இவர்கள் தான் அதிக மனபலம் உள்ளவர்கள்; உயர்ந்த மனோபாவம் கொண்டவர்கள்.

ஒவ்வொரு கசப்பான அனுபவங்களையும் தெளிய ஆராய்ந்தால், அதன் பல நன்மைகள் தெரிய வரும். அந்த அனுபவத்தின் வாயிலாக, புதிய செயலை செய்திருப்போம். பல வேண்டாத செயல்களை விட்டிருப்போம்; புதிய வேகத்துடன் செயல்பட்டிருப்போம். மேலும் சொன்னால் கசப்பான சம்பவங்கள், இனிமையான எதிர்காலத்திற்கு முன்னோடிகளாக இருக்கலாம். ஆப்பிரிக்காவில் நெல்சன் மண்டேலா, இருப்தேழு ஆண்டுகள் சிறைத் தண்டனைப் பெற்றார். அதற்காக சலிப்படையவில்லை. இறுதியில் விடுதலையானார். இன்று உலகம் போற்றும் தலைவரானார்.

இருபது ஆண்டுகளுக்கு முன் தன்னுடைய பத்து சவரன் நகையை வழிப்பறி கொடுத்தார் ஒரு பெண். அந்த இழப்பை தாங்க முடியவில்லை. மனம் சோர்ந்து சோர்ந்து ஒரு நாள் தற்கொலை செய்து கொண்டார். இருபது ஆண்டுகளில் எத்தனையோ பவுன் நகைகளை வாங்கியிருக்கலாம். ஆனால், அந்த இழப்பை அவரால் இறுதிவரை தாங்க இயலவில்லை.அவருடைய மனோபாவத்தின் விளைவு அது.

உயர் அதிகாரியான ஒருவரை ரயில் நிலையத்தில் பிளாட்பாரம் டிக்கட் வாங்கி செல்லாததால், திரும்பி வெளியே வரும்போது ரயில் நிலைய மேற்பார்வையாளர் பிடித்துக்கொண்டார். பலர் முன்னிலையில் டிக்கெட் பரிசோதித்தார். டிக்கட் இல்லாததால் தண்டனைக் கட்டணம் போட்டு வாங்கினார். இந்த சம்பவத்தினால் அவமானம் அடைந்த அதிகாரி, அன்று இரவே அதிக ரத்தக் கொதிப்படைந்து மாரடைப்புக்கு ஆளானார். அந்தச் சம்பவம் அவருக்கு கௌரவ பிரச்சினையாகிவிட்டது.

இன்னும் சிலர், முதுமையான நிலையிலும், சிறுபிள்ளைத்தனமான பிடிவாதமாக இருப்பார்கள். பொதுவான இடத்திற்குச் சென்றால் கூட தனக்குத் தனி உபசரிப்பு வேண்டும் என்று எதிர்பார்ப்பார்கள் வீட்டிலும், மற்றவர்களும் தனக்கு எப்போதும் ஆமோதிப்பு தர வேண்டும் என எதிர்பார்ப்பார்கள். எல்லா நேரங்களிலும் தன்னுடைய தனி விருப்பத்தை மட்டும் எண்ணி, பொது நன்மையை தூக்கி எறிவார்கள்.

இதுபோன்ற கௌரவம், பிடிவாதம் பார்ப்பவர்கள், வாழ்க்கையில் அதிக கசப்பான சம்பவங்களை சந்திக்கிறார்கள். இவர்களுடைய குறைந்த மனபலத்தால் தன் துறையில் பின்வாங்குகிறார்கள். பலர் தனிமைக்கு ஆளாகிறார்கள்; மற்றவர்களால் ஒதுக்கப்படுகிறார்கள்; வாழ்க்கையின் வய்ப்புகளை இழக்கிறார்கள். இறுதியில் தம்மையே நொந்து கொள்ளும் பரிதாபத்துக்குள்ளாகிறார்கள். இவர்கள் நடைமுறைகளை ஏற்கமுடியாதவர்கள் தன் விருப்பத்திற்கு மாறான நிகழ்ச்சிகளை ஜீரணிக்க முடியாதவர்கள்.

ஒரு நாணயத்திற்கு இருபக்கம் இருப்பது போல ஒவ்வொரு தடைகளின் மறுப்பக்கமும் சிறந்த அம்சம் இருக்கத்தான் செய்கிறது. அதை உணரவேண்டுமானால் உணர்ச்சி வயப்படாத மனநிலை தேவை; மேலும் அதிக மனபலம் வேண்டும் உயர்ந்த மனோபாவத்தின் அறிகுறியும் அதுவே.

சில நடைமுறைகளை முழுமனதோடு ஏற்றுக்கொண்டவர்கள் உயர்ந்த மனோபாவங்களைப் பெறுகிறார்கள்.

1. மனிதர்கள் அனைவரும் தவறு செய்யும் இயல்புள்ளவர்கள். அதில் எந்த அளவு எத்தகைய தன்மை மேற்கொண்டு செயல்படும் விதம் இவைகளில்தான் வித்தியாசப்படுகிறார்கள். எந்தத் தவறுமே செய்யாதவர் என்று ஒருவரை சொல்ல வேண்டுமானால், அவர் எதையும் செய்யாதவராகத் தான் இருக்க வேண்டும்.

2. வாழ்க்கையில் நடந்த தவறுகள் கசப்பான நிகழ்ச்சிகள் இவைகளை மறந்து விடுபவர்கள் வாழ்க்கையில் உயர்கிறார்கள்.

3. பிடிவாத குணம் – கௌரவம் பார்க்கும் மனம் அதிகம் உள்ளவர்கள், பல சிக்கல்களில் தவிக்கிறார்கள். வாழ்க்கையில் பின் வாங்குகிறார்கள்.

4. எண்ணிய குறிக்கோளை அடைவதே முக்கியம் என செயல்படுபவர்கள் உண்மையான கௌரவம் பெறுகிறார்கள்.

5. வாழ்க்கையில் என்னென்ன நடந்தது என்பதை விட அதை எப்படி கையாண்டு செயல்படுகிறோம் என்பதில் தான் ஒவ்வொருவரின் முன்னேற்றமும் உருவாகிறது.

6. நமக்கு பிடிக்காத சம்பவங்களே, பெரும் வாய்ப்புகளின் மறுபக்காக இருக்கலாம் தெளிந்த மனதுடன் ஆராய்ந்து பார்த்து, அதை நடைமுறையாக ஏற்றுக்கொள்வதே புத்திசாலிகளின் செயலாக அமையும்.

 

No comments

Be the first one to leave a comment.

Post a Comment


 

 


April 1994

நெஞ்சில் உரமேற்று
எது சாதனை?
புதிய வாய்ப்புக்களை உருவாக்குங்கள்
பேரன்புடையீர்
தன்னம்பிக்கை
நம்பிக்கை
உங்கள் கடிதங்கள்
மூன்று வகையான சோதனைக் கற்களின்
வெற்றி என்ற சாலையில் பயணம் செய்ய
ஆசிரியரின் டைரி குறிப்பு
நற்பண்புகள் என்னும் நீரோடையில்
முன்னேற்றத்திற்கு மூன்றே படிகள்
நாம் நினைத்த குறிக்ககோளை