Home » Editorial » பேரன்புடையீர்

 
பேரன்புடையீர்


admin
Author:

பேரன்புடையீர்

வணக்கம், சமுதாயத்தின் மேம்பாடு, வளரும் இளைய தலைமுறையின் நிலையினைச் சார்ந்துள்ளதென்ற உண்மையினை உணர்ந்து சீரிய சிந்தனையுடன் இளைஞர் படையைத் திரட்டிட சிந்தனையாளர் டாகடர் இலசெ.கந்தசாமி ஐந்தாண்டுகளுக்குமுன் தனிச்சுற்று மடலாகத் தன்னம்பிக்கைத் தொடங்கினார். அன்னாரின் மறைவுக்குப் பின்னும் அவரது சிந்தனைகள் இளைய தலைமுறைக்கு இடையறாது அளிக்கப்பட வேண்டுமென்பதற்காக “தன்னம்பிக்கை” தொடர்ந்து கொண்டு வரப்படுகிறது. இதுவரை சந்தா அளித்து தன்னம்பிக்கை தளராமல் வெளிவர உதவியவர்கள் அனைவருக்கும் நன்றி. மேலும் தன்னம்பிக்கையை பரவலாக மக்களிடம் எடுத்து செல்ல வேண்டியது மிக மிக அவசியமாதலின் தங்கள் நண்பர்களையும் சந்தாதாரர்கள் ஆக்கிட அனைவரும் முன் வரவேண்டுமென கோருகிறோம். விஞ்ஞானத்தின் துரித வளரச்சி மனித குலத்திற்கு அவசயமெனினும் சமுதாய நலனுக்கேற்ற வளர்ச்சிதான் வேண்டப்படுவது சுற்றுச் சூழலைப் பாழ்படுத்தும் போக்கு வருங்கால வாழ்வைப் பாதிக்குமாதலால் சுற்றுச்சூழல் பாதுகாப்பு நடவடிக்கைகள் குறித்து சிந்திக்கவும் ஆவன செய்யவும் வேண்டும். சமுதாய நலன் விழைவோர் அனைவரும் சீறிய முறையில் சிந்தித்து தன்னம்பிக்கையுடன் உழைத்து முன்னேறவும் வளரும் இளைய தலைமுறைக்கு வழி காட்டவும் வேண்டுகிறோம். உங்கள் ஆலோசனைகளையும் படைப்புக்களையும் உடன் அனுப்புங்கள். எதிர்பார்க்கிறோம்.

ஆசிரியர்


Share
 

No comments

Be the first one to leave a comment.

Post a Comment


 

 


April 1994

நெஞ்சில் உரமேற்று
எது சாதனை?
புதிய வாய்ப்புக்களை உருவாக்குங்கள்
பேரன்புடையீர்
தன்னம்பிக்கை
நம்பிக்கை
உங்கள் கடிதங்கள்
மூன்று வகையான சோதனைக் கற்களின்
வெற்றி என்ற சாலையில் பயணம் செய்ய
ஆசிரியரின் டைரி குறிப்பு
நற்பண்புகள் என்னும் நீரோடையில்
முன்னேற்றத்திற்கு மூன்றே படிகள்
நாம் நினைத்த குறிக்ககோளை