– 1994 – April | தன்னம்பிக்கை

Home » 1994 » April

 
 • Categories


 • Archives


  Follow us on

  நெஞ்சில் உரமேற்று

  இந்திய இளைஞனே உன்னை நம்பி
  நாடே இருக்கிறது
  உன்னைப் பார்த்தால் என்ன் தயம்
  கண்ணீர் வடிக்கிறது

  Continue Reading »

  எது சாதனை?

  அதிகாரத்தால் சாதிப்பதை விட அன்பால் காரியங்களைச் சாதிப்பது மிகவும் எளிதானதாகும். பட்டமும் பதவியும் பெறுவதுதான் மனித சாதனை என்று கூறுவதற்கில்லை. கல்வி அறிவாலும் பிற பதவிகளாலும் தன்னை அலங்கரித்துக் கொள்ள முடியாத மனிதன்

  Continue Reading »

  புதிய வாய்ப்புக்களை உருவாக்குங்கள்

  – டாக்டர் ஜி. இராமநாதன்

  ஒவ்வொருவர் வாழ்விலும் பல்வேறு சம்பவங்கள் திருப்பங்கள் உண்டாகின்றன. சில நிகழ்ச்சிகளை நம்மால் ஏற்க முடிவதில்லை உதாரணத்திற்கு உடல் நலக்குறைவு வேலை இழத்தல், பொருள் இழப்பு, வேண்டியவரின் திடீர் மரணம் போன்று பல சம்பவங்கள்.

  Continue Reading »

  பேரன்புடையீர்

  பேரன்புடையீர்

  வணக்கம், சமுதாயத்தின் மேம்பாடு, வளரும் இளைய தலைமுறையின் நிலையினைச் சார்ந்துள்ளதென்ற உண்மையினை உணர்ந்து சீரிய சிந்தனையுடன் இளைஞர் படையைத் திரட்டிட சிந்தனையாளர் டாகடர் இலசெ.கந்தசாமி ஐந்தாண்டுகளுக்குமுன்

  Continue Reading »

  தன்னம்பிக்கை

  எங்கள் மனமென்னும் குரோமோசோமின்
  மரபையே மாற்றியமைக்கும் ஜீன்கள்

  Continue Reading »

  நம்பிக்கை

  “தந்தையின் விரல்களைப் பற்றி நடைபயிலும் குழந்தைக்குத்தான் எத்துணை நம்பிக்கை!

  மண்ணுக்குள் விதையிட்டு, தண்ணீரை ஊற்றும் கிழவனுக்குத்தான் எத்துணை நம்பிக்கை!

  Continue Reading »

  உங்கள் கடிதங்கள்

  தன்னம்பிக்கை தொடர்ந்து இளைய சமுதாயத்தின் முன்னேற்றத்திற்கான ஆரோக்கியமான கருத்துக்களுடன் வருவது சந்தோசம் தருகிறது. இல.செ.க. அவர்களின் எண்ணங்களை நிறைவேற்றும் ஆசிரியர் குழுவினர்க்கு என் பாராட்டுக்கள்.

  Continue Reading »

  மூன்று வகையான சோதனைக் கற்களின்

  மூன்று வகையான சோதனைக் கற்களின் அடிப்படையில் கிடைத்த விவரங்களைப் பரிசீலிக்க வேண்டும்.

  ஒன்று, நிதி அடிப்படையில் அது சரியாக இருக்கும் என்பதைப் பார்க்க வேண்டும். போதுமான அளவு வருமானமும் ஆதாயமும்

  Continue Reading »

  வெற்றி என்ற சாலையில் பயணம் செய்ய

  சிந்தனை – தீர்மானம் – செயல்திட்டம்!

  வெற்றி பெற்றவர்கள் நிதானமாக, மலை ஏறுகின்றவர்களைப் போல, ஒவ்வொரு அடியாக எடுத்து வைத்திருப்பார்கள். அவர்களது ஒவ்வொரு செயலுக்குப் பின்னாலும் உறுதியான தீர்மானமும்,

  Continue Reading »

  ஆசிரியரின் டைரி குறிப்பு

  உறுதி

  எதிலும் ஒரு உறுதியோடு இருப்பவர்களை உலகம் மதிக்கிறது. இலக்கியத்தில் தெளிவும், தெளிந்த பின் அதில் உறுதியும் உள்ளவர்கள் சாதனைகளைப் படைக்கிறார்கள்.

  அன்பு

  அன்பு என்பது பூ போன்ற மென்மையான உணர்ச்சி, அன்பு கடினமான உள்ளவர்களைக்கூட மென்மையாக்கும். அன்பு கொடுமையான மனிதர்களைக்கூட நல்லவர்களாக மாற்றும். அன்பினால்தான் இந்த உலகை ஆள முடியும்.

  துன்பத்திற்குக் காரணம்

  ஆசை மட்டும்தான் துன்பத்திற்கு காரணம் என்றில்லை. பேச்சும் துன்பத்திற்குக் காரணமாகும். பேச்சைக் குறைத்தால்துன்பம் தானாக்க் குறையும். அதிலும் பிறரைப் பற்றிப் பேசுவதைக் குறைத்தால் பேசாமல் விட்டால் துன்பம் அறவே நீங்கும்.

  துணிச்சல்

  துணிச்சல் ஒரு மனிதனுக்கு இருக்கவேண்டிய இன்றிமையாத பண்புகளில் ஒன்று துணிச்சல் என்பது வெறும் வாய்ச்சொல்லில் மட்டும் காண்பிப்பது அல்ல.

  திட்டமிடல்

  திட்டமில்லாவிட்டால் அதிகால நேரம்கூட வெறுமனே கழிந்துவிடும்.

  அதனால் ஒவ்வொரு நிமிடத்திற்கும் வேலை இருக்க வேண்டும். திட்டமிருக்க வேண்டும். இதுவரை செய்து முடித்தது என்ன என்பதற்குரிய விடை கிடைக்க வேண்டும்.

  திறமையானவர்கள்

  திறமையானவர்கள் சந்தர்ப்பத்திற்காக காத்திருப்பதில்லை. அந்த சந்தர்பத்தை அவர்களே உருவாக்குகிறார்கள்.

  உழைப்பு

  உண்மையான உழைப்பிற்கு என்றும் மரியாதை உண்டு. உடனடியாக பலன் தராவிட்டாலும் உரிய பலன் கிடைத்தே தீரும்.

  அதிக வேகம்

  பிறரைத் திருத்துவது என்பது கூட மென்மையாக அணுக வேண்டி ஒன்று. அதிக வேகம் அதிக இழப்பை உண்டு பண்ணும். வாழ்க்கை அவ்வப்போது உணர்த்தும் உண்மை இதுதான்.