– 1994 – February | தன்னம்பிக்கை

Home » 1994 » February

 
  • Categories


  • Archives


    Follow us on

    உம்மால் முடியும்!

    முடியும் உம்மால் முடியும்!
    முயன்றுப் பார்த்தால் முடியும்
    நொடியும் சிற்சில நொடியும்
    நொடிந்துச் சோர்ந்தி டாமல்
    கடினமா யுழைத்தால், வெற்றி
    கையில் வந்துப் படியும்!
    மடியும் இன்னல் மடியும்
    மார்கழி யோடு மடியும்!

    தைத்தைத்தை வரட்டும் நமக்குத்
    தன்னம் பிக்கைத் தரட்டும்!
    வைத்திருந்த பேத மெல்லாம்
    வாளெடுத்து விரட்டும்!
    வித்தனைய இளைஞர் கூட்டம்
    விடுதலைக்குத் திரட்டும்!
    முத்தமிழர் நாடும் வீரம்
    முன்னேற்றமே பெறட்டும்!

    நோயாளிகளுக்குப் பிடித்த சைக்காலஜி!

    மருத்துவமனைகளில் நோய்வாய்பட்டுப் படுத்திருக்கும் நோயாளிகளைக் கண்டு ஆறுதல் கூறுவது என்பது ஒரு மனிதாபிமானப் பணி. ஆனால் நோயாளிகளை எப்படிச் சென்று பார்க்க வேண்டும்? என்னென்ன செய்ய வேண்டும்? எதையெல்லாம் செய்யக்கூடாது? இப்படிப்பட்ட சில பயனுள்ள குறிப்புகளைத் தந்திருக்கிறது நியூயார்க் ஸ்லேன் கெட்டரிங் கான்ஸர் சென்டர். இதோ அந்த ஆலோசனைகள்!

    நோயாளியின் அறைக்குள் நுழையும் முன்பு கதவை மெல்லத் தட்டி வந்திருப்பதை அறிவியுங்கள். உள்ளே நோயாளி எந்த நிலையில் இருக்கிறார் என்பது உங்களுக்குத் தெரியாதல்லவா?

    நோயாளியின் வாயில், மூக்கில் அல்லது இதர பகுதிகளில் காணப்படும் ட்யூபுகள், பாட்டில்கள், இதர உபகரணங்கள் ஆகியவற்றைக் கண்டு அதிர்ச்சியடையாதீர்கள்Ð அவற்றைத் தக்க காரணத்தோடுதான் பயன்படுத்தியிருப்பார்கள்!

    Continue Reading »

    ஆளுமைத்திறன் மேம்பாட்டிற்கு மேலான வழிகள்

    ஆளுமைத்திறன் (Personality) (Quality that make up a person’s character) என்றால் என்ன? என்பதில் முதலில் நமக்குத் தெளிவு வேண்டும். நல்ல உடற்கட்டு உடையவர்களை “ஆகா என்னா பர்சனாலிட்டி” என்று சிலர் சொல்வதைப் பல இடங்களில் கேட்டிருக்கிறேன். ஆளுமைத்திறன் என்றால் ஒருவருடைய குணத்தை நிர்ணயிக்கும் இயல்புகள் (Quality that make up a person’, சமுதாயத்தில் அனைவராலும் நன்கு அறியப்பட்டவர், சிறப்பு வாய்ந்தவர், சிறப்பு இயல்பு எனப் பொருள்படும்.

    சொல்லால், செயலால், நடத்தையால், தோற்றப்பொலிவால், பழகும்பாங்கால் என இவற்றால் எவரொருவர் தன்னைச் சூழ்ந்திருப்போரை தன்வயப்படுத்தும் ஆற்றல் பெற்றவரோ அவரே ஆளுமைத்திறன் பெற்றவர் எனலாம். எல்லாரிடத்திலும் ஆளுமைத்திறன் உள்ளது. ஆனால் அதை மேம்படுத்திக் கொள்வதற்கு முயற்சிப்பதில்லை.

    முதலில் மனிதன்தான் பழக்கவழக்கங்களை உருவாக்குகிறான். பிறகுதான் பழக்கவழக்கங்கள் மனிதனை உருவாக்குகின்றன (First man forms habits and afterwards habits form a man). எனவே உங்கள் பழக்கவழக்கங்களை வளர்த்துக் கொள்வதில் மிகவும் கவனமாக இருக்க வேண்டும்.

    பழக்கவழக்கங்கள் (Habits) ஒருமுறை நம் வாழ்க்கையில் ஆழ்வேர்விட்டு தன்மையைப் பொருத்து நமது வளர்ச்சியைப் பாழ்படுத்தவோ அல்லது பண்படுத்தவோ செய்யும் (Mar or make it fine) பழக்கவழக்கங்கள் முதலில் சிலந்தி வலைபோல மெல்லியதாகத்தான் நம்மைச் சூழ்ந்திருக்கும். பிறகு அவை வடகயிறாக வடிவெடுக்கும். நல்ல பழக்கவழக்கங்கள் நம்மை நாளும் உயர்த்தும். அல்லாதவை அன்றாடம் நம்மை அழிக்கும் என்பதை நினைவில் நிறுத்துங்கள்.

    Continue Reading »

    மாற்றங்கள் முன்னேற்றங்கள்

    வாழ்க்கையில் உயர்ந்து வருபவர்கள் – உயர்ந்தவர்கள் இவர்களைப் பார்க்கும்போது, நாமும் அப்படி உருவாக முடியாதா? என்ற எண்ணம் உதிக்கிறது.

    சிலர் வாழ்க்கையில் முன்னேற்றங்களை அடுக்கடுக்காக பார்க்கிறோம். சிலர் வாழ்க்கையில் எந்த மாற்றமும் இல்லாமல் மந்த நிலையைப் பார்க்கிறோம். இதற்கு காரணம் என்ன?

    மாற்றத்தை உண்டாக்கும் மனோபாவம்தான். புதுமைகளை உருவாக்காத குறைதான். காலத்திற்கேற்ப தங்களை மாற்றிக் கொள்ள இயலாதவர்கள், முன்னேற்றங்களில் பின் தங்கி விடுகிறார்கள்.

    இருபது ஆண்டுகளுக்கு முன் பள்ளியில் முதல் மதிப்பெண்கள் பெற்று மிகவும் திறமையான மாணவன் என்ற பெருமையை பெற்றார் வேணுநாதன். அஞ்சல் துறையில் உடனடியாக வேலை கிடைத்தது. வேலை கிடைப்பது சிரமமான அந்த காலத்தில், அவருக்கு அது சரியெனப் பட்டது. இன்றும் அதே துறையில் பணிபுரிகிறார். குடும்ப சூழ்நிலையில் அவருடைய மனநிலையில் எந்த மாற்றமும் இல்லை. அவருடன் படித்த அவரை விட குறைவான மதிப்பெண்கள் பெற்ற ஒரு சராசரி மாணவன், இன்று பெரிய தொழிலதிபராக விளங்குகிறார்.

    முப்பத்தைந்து ஆண்டுகளுக்கு முன் காபி கடையை தொடங்கிய ராமச்சந்திரன், இன்றும் அதே கல்லாப்பெட்டியில் நின்று, காபி போட்டுக் கொண்டிருக்கிறார்.

    Continue Reading »