– 1994 – January | தன்னம்பிக்கை

Home » 1994 » January

 
 • Categories


 • Archives


  Follow us on

  “உயர்ந்த மனோபாவங்கள்”

  கோவையில் ஒரு தொழிலதிபர், தன்னுடைய தொழிற்சாலையை இருபத்து ஐந்து லட்சம் ரூபாய்க்கு விற்றுவிட்டார். அதன்பின் சில மாதங்கள், பல இடங்களுக்கு சுற்றுப்பயணம் சென்றார். அவர் ஏதோ ஒரு குழப்பமான மனநிலையில் திடீரென ஒரு பெரிய வியாபாரத்தை விட்டுவிட்டார். அந்த முடிவு சரிதானா? இனி எதிர்காலம் எப்படி இருக்கப் போகிறது? என்ற எண்ணங்கள் அடிக்கடி அவரை வாட்டின. மனநிலை பாதிக்கப்பட்டார்.

  அவருடைய கடந்த கால வாழ்க்கையைப் பார்த்தால் அவருடைய மனோபாவங்கள் நன்கு விளங்கும். அவர் பிடிவாத எண்ணம் கொண்டவர். மற்றவர்கள் நியாயமானவை, சரியானவை என்று ஒரு விவரத்தைச் சொன்னால்கூட அவர் ஏற்கமாட்டார். சரியோ, தவறோ தான் சொல்வதுதான் நியாயமானவை என வாதம் செய்வார். மற்றவர்கள் இவருடைய சொல்லுக்கு மதிப்பு தரவில்லையேல், அவர்களை தரக்குறைவாகப் பேசுவார். தன்னிடம் வேலைசெய்யும் தொழிலாளர்கள் அவரிடம் ஏதாவது ஒரு அபிப்ராயத்தைச் சொன்னால், உடனே அதற்கு எதிர்மறையான செயலைச் செய்வார். எல்லாம் தமக்குத் தெரியும்; மற்றவர்கள் அறிவில் குறைந்தவர்கள் என எண்ணுபவர். தம்மைச் சுற்றியுள்ள உறவுகளான மனைவி, குழந்தைகள், நண்பர்கள், உறவினர்கள் அனைவரும் தன்னுடைய சொல் படிதான் செயல்பட வேண்டும் என்பதில் கண்டிப்பானவர். யாராவது அவரிடம் சொல்லாமல் ஒரு காரியத்தைச் செய்தால், உடனே அது தவறு என கொந்தளிப்பார். வீட்டில் அவர் மனைவி கீரையில் பொறியல் செய்தால் உனக்கு மனித ரசனையே இல்லை. ஏன் அந்த காய்களில் நல்ல பொறியல் செய்யக்கூடாதா? என்பார். அந்த அம்மையார் காய் வகை பொறியல் செய்தால் இந்த மண்ணை யார் சாப்பிடுவது? எடுத்து குப்பையில் கொட்டு என்று குமறுவார்.

  Continue Reading »

  முயற்சி – முடிவு – விளைவு

  வாழ்க்கையில் சிலர் மட்டும் வெற்றி பெறுகிறார்கள். பலர் தோல்வி அடைந்துவிடுகிறார்கள். இதை நாம் கண்கூடாகக் கண்டு வருகின்றோம். இதேபோல் ஒரு செயலில் இறங்குகிறோம்; சில சமயங்களில் வெற்றி கிடைக்கின்றது; பல சமயங்களில் தோல்வியே முடிவாகின்றது.

  காரணம் என்ன?

  நாம் அடைந்த வெற்றிக்கும் தோல்விக்கும் காரணம் என்ன என்று சிந்தித்துப் புதிய செயலில் இறங்கும்போது இந்தக்குறைபாடுகளை நீங்கிச் செயல்பட்டால் வெற்றிகிட்டும். இதேபோல் இதைவிட, நம் கண் முன்னால் வெற்றி நடைபோடுகின்றவர்களை – அவர்களுடைய செயல்முறைகளை – அவர்கள் மேற்கொள்ளும் முயற்சிகளை எண்ணிப்பார்த்தால் காரணம் விளங்கும். இதில் ஒரு கூடுதல் நன்மையும் உண்டு. நம்மைப்பற்றி நாமே சிந்தித்து அறிவதைவிட மற்றவர்களின் செயல்முறைகளைக் கண்டு அறிந்து குறை நிறைகளைக் காணுவது எளிது; அடுத்தவர் செயல்களை விருப்பு வெறுப்பற்ற நிலையில் ஆய்வதால் உண்மை தெளிவாகப் புலப்படும்.

  வெற்றிக்குரியவர்கள்

  வெற்றிக்குரியவர்களை எண்ணிப்பாருங்கள். அவர்களுடைய முயற்சியே அவர்களுக்கு மூலதனமாக இருக்கும். எந்தச் செயலை எடுத்தாலும் முயன்று பார்ப்போம் என்று எழுந்து நிற்பார்கள். முடியும் என்ற நம்பிக்கை கொள்வார்கள். அவர்கள் மேற்கொள்ளும் செயலைப்பற்றிய முழு விவரங்களையும் சிந்திப்பார்கள். தன்னுடைய திறமை எவ்வளவு? அதற்குத் தடையாக இருக்கின்றவை எவை எவை என்று கணக்கிட்டுப் பார்ப்பார்கள். செயலைத் தொடங்குவார்கள்.

  ஒன்றிலேயே குறி

  எந்த ஒரு செயலைச் செய்தாலும் அதை முழுமையாகச் செய்ய வேண்டும். அதிலேயே கண்ணும் கருத்துமாக இருக்க வேண்டும். நோக்கம் எல்லாம் அதிலேயே இருக்க வேண்டும். 24 மணி நேரமும் அந்தச் செயலைப் பற்றிய எண்ணம் மனதில் இருந்து கொண்டே இருக்க வேண்டும். இதுபோன்ற காரியங்களில் முன்னரே வெற்றி கொண்டவர்களின் முயற்சியைக் கணக்கிட்டுப்பார்த்தால் வெற்றி பெற்றவர்கள் எல்லாம் எத்தகைய கடுமையான முயற்சியில் ஈடுபட்டார்கள் என்பது தெரியும். நாம் செய்யும் முயற்சியின் அளவு எத்தகையது என்பதையும் கணக்கிட்டு நமது முயற்சியை அவ்வப்போது அதிகப்படுத்திக் கொள்ளலாம்.

  Continue Reading »

  மறதி ஏன் ஏற்படுகிறது?

  திரும்பத்திரும்ப எண்ணிப்பார்க்காத எதுவும் மறந்துபோகும். அண்மையில் ஏற்படும் பதிவுகள் முன்பே ஏற்பட்டிருந்த பதிவுகளை பாதிக்கலாம். இதையே நாம் மறதி என்கிறோம். நினைவில் வைக்க வேண்டும் என்ற முயற்சியின்மை, உடல்சோர்வு, நோய், பயம், வாழ்க்கையில் ஏற்படும் எதிர்பாராத அதிர்ச்சி, விபத்து ஆகிய காரணங்களாலும் மறதி ஏற்படலாம். பொதுவாக உடல் உள்ளம் ஆகிய இரண்டில் ஒன்றோ அல்லது இரண்டுமோ பாதிக்கப்படும்போது நினைவாற்றல் பாதிக்கப்படுகிறது.

  திரும்பத்திரும்ப துடைத்து வைக்காவிடில் மோட்டார் சைக்கிள் அல்லது மிதிவண்டி துருபிடித்துப் போகிறது. அப்படித்தான் திரும்பத்திரும்ப துலக்கி வைக்காவிடில் நினைவும் மறந்துபோகும். அடிக்கடி நினைவில் கொண்டுவருகிற எதுவும் மறப்பதில்லை. “அ, ஆ, இ, ஈ” என்றோ படித்தது. “ஒன்றும் ஒன்றும் இரண்டு” என்னும் வாய்ப்பாடு என்றும் மறப்பதில்லை. காரணம் நாம் அடிக்கடி அதை நினைவில் கொண்டுவந்து பயன்படுத்துகிறோம்.

  நினைவு என்பது மனத்தில் நிலைத்த பதிவு என்றால் மறதி என்பது அந்தப்பதிவு அடியோடு மறைந்து விடுவதாகாது. ஒன்றைத் தற்காலமாக நினைவில் கொள்ள முடியாத நிலையே ஆகும். கற்றறிந்த அனைத்தும் பதிவுகளாக உள்ளன. திடீர் அதிர்ச்சியில், விபத்தில், நோயில் நினைவுகளை முற்றிலும் மறந்துபோன ஒருவர் உரிய சிகிச்சையினாலோ மீண்டும் ஏற்படும் அதிர்ச்சிகளாலோ மறந்துபோனதை திரும்பவும் பெறுவதைக் காண்கிறோம்.

  Continue Reading »