Home » Articles » உங்கள் மதிப்பை அதிகப்படுத்தும் வழி

 
உங்கள் மதிப்பை அதிகப்படுத்தும் வழி


மகாதேவன் ஆர்
Author:

– ஆர் மகாதேவன்

அலுவலத்தில் எவ்வளவு தான் மாடாய் உழைத்தாலும் மேலதிகாரிகளும், சக ஊழியர்களும் உங்களை மதிக்கவிலையா?

கவலைப்படாமல் கீழ்க்காணும் வழிமுறைகளைக் கடைபிடித்துத்தான் பாருங்களேன்.

1) உங்களுடைய அலுவலகத்துக்கு சற்று முன்கூட்டியே போவது நல்லது. அன்றைய தினம் செய்ய வேண்டிய வேலைகளை ஒரு சிறிய காகிதத்தில் குறித்து வைத்துக் கொள்ளுங்கள். பிறகு முக்கியமானதை முதலில் தொடங்குங்கள்.

2) ஒவ்வொரு வேலையையும் அதை எப்போது முடிக்க வேண்டும் என்பதை தீர்மானம் செய்து கொள்ளுங்கள். எப்பாடுபட்டாலும் அதன்படி முடிக்க உறுதிக் கொள்ளுங்கள்.

3) மேஜையை ஒழுங்குபடுத்துவது, பென்சில் சீவுவது, தினசரித் தாளைப் புரட்டுவது, ஒரு கப் காபி அருந்துவது இதுபோன்றவைகளில் ஈடுபட்டுவிட்டு, எப்படி இவ்வவளவு நேரம் ஓடிவிட்டது என்று வியப்படையாதீர்கள்.

4) உங்கள் அலுவலகத்தில் உள்ள கால்குலேட்டர், நகல் எடுக்கும் இயந்திரம், ஆடோமாடிக் டைப்ரைட்டர், டெலிபோன் முதலியவைகளை தேவையான அளவுக்கே பயன்படுத்துங்கள்.

5) உங்களுடைய டெலிபோன் பேச்சு சிறியதாகவும் பயனுள்ளதாகவும் இருக்கட்டும். முக்கியமான விஷயமாயிருந்தாலும், முதலில் அதை காகிதத்தில் குறித்துக் கொண்டு பேசுவது நல்லது. டெலிபோனில் அவர் சொல்லும் பதிலை அந்தக் காகிதத்திலேயே குறித்துக் கொள்வது நல்லது.

6) வேலையை செய்து முடிக்க பழைய முறை ஒன்றிருந்தாலும் நீங்களோ யோசித்து நன்மை பயக்கும் புதிய முறைக் கண்டு பிடியுங்களேன். ஆழ்ந்து சிந்தித்தால் நிச்சயம் கிடைத்துவிடும்.

7) நீங்கள் கடித்தைப் படிக்கும் போதே ஒரு குறிப்பேட்டில் எழுத வேண்டிய பதிலை எழுதி வையுங்கள். பின்னர் அதைப் பார்த்து நீங்களோ அல்லது உங்கள் செயலாளரோ பதில் எழுத வசதியாக இருக்கும்.

8) உங்களுடைய நேரத்தை முழுமையாக பயன்படுத்துங்கள். ரயிலுக்காக காத்திருக்கும் நேரத்தை முழுமையாக பயன்படுத்துங்கள். ரயிலுக்காக காத்திருக்கும் நேரம், ரயில் பயண நேரம், தனியாக உண்ணும் நேரம். இவைகளின் போது உங்களுடைய பிரச்சனைகளின் தீர்வுகளைப் பற்றி சிந்திக்கலாம்.

9) எவ்வளவு நேரம் எந்த விஷயத்தில் வீணாக்கினீர்கள் என்று தினமும் 7மாலை உங்கள் தனிப்பட்ட குறிப்பேட்டில் எழுதிக்கொள்ளுங்கள். மீண்டும் அவ்வாறு வீணாக்காமலிருக்க அது உதவும்.

10) ஒரு வேலையைத் தொடங்கும் பொழுது, அதன் தகுதியை பண அடிப்படையில் ஒப்பிட்டுப் பார்த்து ஆரம்பியுங்களேன். உங்களுக்கு ஒரு மணி நேர வேலைக்கு எவ்வளவு ஊதியம் தரப்படுகிறது என்பதைக் கணக்கிட்டால் தெரிந்து விடுகிறது.

11) சக ஊழியர்களிடம் கண்ணியமாகப் பழகுங்கள். அவர்களுக்கு மரியாதை கொடுத்து நீங்கள் மரியாதையைப் பெற்றுக்கொள்ளுங்கள்.


Share
 

No comments

Be the first one to leave a comment.

Post a Comment


 

 


December 1993

சோகங்களை சுமப்பதற்காக அல்ல வாழ்க்கை சுகங்களை பெறுவதற்காக அமைந்ததே வாழ்க்கை
புத்திசாலித்தனமான தலைவர் யார்?
உங்கள் மதிப்பை அதிகப்படுத்தும் வழி
உயர்ந்த மனோபாவங்களை உருவாக்குங்கள்
ஆசிரியரின் டைரி குறிப்பு
நினைவாற்றலை வளர்த்துக் கொள்வது எப்படி?