உயர்ந்த நிலை
நாம் உயர்ந்து நின்றால் உயர்ந்த நிலையில் இருந்தால் பலர் வலய வந்து பேசுவார்கள். நாம் தாழ்ந்து போனால் வலியச் சென்று பேசினாலும் விலகிப் போவார்கள்.
இயற்கை
இயற்கை புசுமை போர்க்கும்போது இதயங்களும் துன்ப இலைகளை உதரிவிட்டுத் துளிர்விடத் தொடங்குகின்றன.
உண்மை மனிதன்
உண்மையாக நடந்து கொள்ள வேண்டும் என்று விரும்புகின்ற மனிதர்கள் பிறருடைய விருப்பு வெறுப்புகளைக்கண்டு வருந்திப் பயனில்லை.
எல்லாருக்கும் நல்லவர்
யாரையும் மனம் வருந்தாமல் நடத்தவேண்டும் என்று விரும்பினாலும் அப்படி நடத்த முடிவதில்லை. தவறு செய்கின்றவர்களைத் தண்டித்துத்தானே ஆகவேண்டும். அவர்கள் மனம் வருந்துவார்கள் என்பதற்காக விட்டுவிட்டால் பெரிய பெரிய தவறுகளை அல்லவா வந்து சேரும். எல்லோருக்கும் நல்லவர் ஆக இருக்கமுடியாது.
எப்போது துன்பம் உணர்கிறோம்?
நியாயமானவைகள் நடைபெறாவிட்டால் கோபம் வருகிறது. கொதிப்படைகிறோம். துன்பம் அடைகிறோம்.
அவசரம்
மிக விரைவிலேயே எல்லாவற்றையும் அடைந்துவிடவண்டும் என்ற வெறியினால் வாழ்க்கையைப் பலபேர் இழந்து விடுகிறார்கள்.
ஆசை
பலர் பதவிக்காகவும், பணத்துக்காகவும்,புகழுக்காகவும், துடிக்கிறார்கள். அவற்றிற்காக எதை வேண்டுமானாலும் செய்யத் தயாராகி விடுகிறார்கள்.
அறம்
அடிப்படை அற உணர்வு செத்துக்கொண்டே வருகிறது என்றே எண்ணத் தோன்றுகிறது. வெளி உலகத்துக்கு நல்லவர்கள என்று கருதப்படுகின்ற பலர் உள்ளுக்குள் கொடியவர்களைவிட மோசமானவர்களாக இருக்கிறார்கள். வேர் இல்லாத மரத்தில் பசுமையான இலைகள் எத்தனை நாளைக்கு இருக்கமுடியும்?