Home » Cover Story » புத்திசாலித்தனமான தலைவர் யார்?

 
புத்திசாலித்தனமான தலைவர் யார்?


தாவே
Author:

புத்திசாலித்தனமான தலைவர் யார்?

தலைமைப்பதவியில் இருப்பவர் கட்டாயம் தெரிந்துகொள்ள வேண்டியவை

ஒன்றை அளவுக்கு மீறி வற்புறுத்துவதனால் ஏற்படும் விளைவுகள்:

அளவுக்கு மீறிய வற்புறுத்தல் தலைவரையே திரும்ப பாதிக்கும்.

ஒன்றில் அடிக்கடி தலையிடுதல், அடிக்கடி வலியுறுத்தல் நல்ல விளைவுகளைத் தராது. இத்தகைய தலைவர்கள் தங்களின் கீழ் உள்ளவர்களைக் கெடுப்பவர்கள் ஆவார்கள்.

ஒரு குழுவுக்குத் தலைமை தாங்குவது என்பது மிகவும் நாகரிகமான செயலாகும். அக்குழுவை வற்புறுத்தியோ, விவாதங்கள் செய்தோ அல்லது வலிமையால் வெற்றி கொண்டோ தலைமை ஏற்கமுடியாது.

ஒரு தலைவன் ஆள் பலம் கொண்டு ஒரு குழுவிற்குத் தலைமை ஏற்பது என்பது அவன் தலைமைத் தன்மையை அறியாதவன் என்பதே பொருள். அவ்வாறு செய்பவர்கள் அக்குழுவின் ஆதரவைப் பெற, பெரும் சிரமத்தை ஏற்கவேண்டி இருக்கும்.

தலைவர்கள், தனக்கு கீழுள்ள இளைஞர்களை வலிந்து முன்னுக்குத் தள்ளுவதை அவர்களுக்கு நன்மை செய்வதாகக் கருதுகிறார்கள். உண்மையில் அது அவர்களின் செயல்பாடுகளைத் தடைப்படுத்துவதே ஆகும்.

இப்படிச் செய்வது என்பது ஒரு நல்ல குழுவை உருவாக்குவதாகும் என்று தலைவர்கள் நினைக்கிறார்கள். ஆனால் இது உருவாக்கம் இல்லை. மாறாக ஒரு குழுவின் ஒழுங்குமுறைகளைக் குலைத்து பிளவு உண்டாக்கி அழிக்கிறார்கள் என்பதுதான் பொருள்.

ஒருகுழுவின் செயல்பாடுகளில் நிரந்தரமாகத் தலையிடுவது என்பது அவர்களது திறமையைக் கணிப்பதாகும் என்று சில தலைவர்கள் கருதுகிறார்கள். உண்மையில் அத்தகைய தலையீடு கொடுமையானதும் பொருத்தமற்றதும் ஆகும்.

தங்கள் தலைமைத் தன்மை தங்களுக்கு முழு அதிகாரத்தைக் கொடுத்துள்ளது. ‘தான் தான்’ எல்லாம் என்று கருதுகிறார்கள். உண்மையில் அத்தகைய போக்கு அவர்கள் மீது இருந்த மரியாதையைக் குறைத்து விடுகிறது.

புத்திசாலித்தனமான தலைவர், நடுநாயகமான ஓரிடத்தில் அமர்ந்துகொண்டு தனது மிகக்குறைந்த தலையீட்டால் மிகத்திறமையாக செயல்படுவர். அத்தகையவர்கள், ‘தான்’ என்ற மமதை இல்லாதவராக இருப்பார். அவரே தலையிட்டு எதையும் செய்யாமல் இருந்த இடத்தில் இருந்துகொண்டு ஒரு செயலைச் செய்யும்படித் தூண்டுவார்.

(சீனஅறிஞர் தாவேயின் “தலைமைத் தன்மை” என்ற நூலிலிருந்து)

குறிப்பு: நீங்கள் ஒருவர் அல்லது இரண்டு பேருக்குத் தலைவராக இருந்தாலும் சரி இந்தப் பண்புகளைக் கடைபிடியுங்கள். நாட்டில் நல்லவர்கள் எண்ணிக்கை கூடுதலாக நீதங்கள் உதவியவர்கள் ஆவீர்கள்.

சோகங்களை சுமப்பதற்காக அல்ல வாழ்க்கை
சுகங்களை பெறுவதற்காக அமைந்ததே வாழ்க்கை

1985ம் ஆண்டு இவ்விதழின் நிறுவன ஆசிரியர் இல.செ.க. அவர்கள் ஐரோப்பிய, அமெரிக்க சுற்றுப்பயணத்திற்குப் பின் நம்நாட்டு இளைஞர்களுக்கு தன்னம்பிக்கை தேவை, பொதுவாக அனைவரும் அறிவில் வளரவேண்டும் என்ற எண்ணத்தோடு சுயமுன்னேற்ற நூல்களை எழுதத் துவங்கினார். டாக்டர் இல.செ.க. அப்புத்தகங்களுக்கு இருந்த வரவேற்பின் விளைவே தன்னம்பிக்கை 1989ம் ஆண்டு நவம்பர் மாதத்தில் பிரசுரம் ஆயிற்று.

1992ம் ஆண்டு ஏப்ரல் மாதம் இதன் ஆசிரியர் டாக்டர் இல.செ.க.வின் மறைவுக்குப்பின் ஆசிரியர் குழுவால் நடத்தப்பட்டு வரும் இவ்விதழ் தனது இலட்சியம் மாறாது நடைபெற்று வருகிறது. குறித்த நேரத்தில் வெளிவரவே தன்னம்பிக்கை முயல்கிறது என்பதையும் பணிவுடன் தெரிவித்துக் கொள்கிறேன்.

இளைஞரிடையே தன்னம்பிக்கை வளர்ப்பதும், சமுதாயத்தில் விழிப்புணர்வை ஏற்படுத்தும், விவசாயிகளுக்கு உயிரான தண்ணீரை கங்கைக் காவிரி இணைப்பின்மூலம் உறுதி செய்வதும் இவ்விதழின் உயிர்மூச்சு.

முயலுங்கள் முன்னேறலாம்
சளைக்காதீர் வெற்றி பெறலாம்

அன்புடன்
ஆசிரியர் குழு

தொழில் அதிபர்களுக்கு,

உங்களுடைய தொழிலுக்கு மூலப்பொருள்கள் கொடுப்போரை கசக்கிப் பிழியக்கூடாது. அவருடைய பணபாக்கியை முடிந்த அளவு குறிப்பிட்ட நேரத்தில் கொடுங்கள். இல்லையேல் இது உங்களுக்கு மூலப்பொருள்கள் கொடுப்பவரது நல்லெணத்தைக் கெடுக்கம். நீங்கள் எதிர்பார்க்கும் தரம் கொடுக்கமாட்டார். அவரும் உங்களைப் போலவே தொழில் செய்து லாபம் சம்பாதிக்க முனைபவர் என்பதை உணர்ந்து செயல்படுங்கள்.

 

No comments

Be the first one to leave a comment.

Post a Comment


 

 


November 1993

புத்திசாலித்தனமான தலைவர் யார்?
நினைவாற்றலை வளர்த்துக் கொள்வது எப்படி?