Home » Cover Story » அக்டோபர் 10

 
அக்டோபர் 10


admin
Author:

அக்டோபர் 2 அனைவரும் அறிந்த நாள் அக்டோபர் 10ன் சிறப்பு என்ன? தமிழ் புதிய வரலாற்றில் தமிழ் நெஞ்சங்களை கொள்ளை கொண்ட அமரர் மு. வரதராசனார் அவர்களின் நினைவு நாள் விழா, டாக்டர் மு.வ. அவர்கள் இளைஞரிடையே அதிக தொடர்பு கொண்டிருந்தார். மக்களது வாழ்க்கை நடையில் திருத்தம் ஏற்பட காரணமாக இருந்தார். அவருடைய படைப்புகள் இன்றும் உயிருடன் இருப்பதற்கு முக்கிய காரணம் அவர் கொண்டிருந்த தொடர்பு.

இவ்விழாவை அமரர் டாக்டர் இல.செ. கந்தசாமி அவர்களின் நினைவு மேடையில் நடத்த உள்ளது பொன்னி இலக்கிய அமைப்பு. ஏனட டாக்டர் இல.செ.க. அவர்களின் நினைவு மேடையில் இவ்விழாவை நடத்த வேண்டும்? டாக்டர் மு.வ.வுக்குப் பின் தமிழ்துறையில் வாழ்வை துவங்கி இளைஞரிடையே அதிக தொடர்பைக் கொண்டிருந்தவர், டாக்டர் இல.செ.க. வாழ்வில் இருவரும் தத்தம் தொழில் துறையில் ஒன்றுபோல் முன்னேற்றமடைந்தனர். இந்நாடு செழிப்படைய வேண்டும், மக்கள் தன்னம்பிக்கையோடு முன்னேற்றமடைய வேண்டும் என்ற உயர்ந்த இலட்சியங்களோடு தம் வாழ்விலும் முன்னேற்றமடைந்து மற்றவர்களுக்கு வழிகாட்டியாகவும், எடுத்துக்காட்டாகவும் விளங்கினார்கள். இதனை இவ்விருவருடன் பழகிய டாக்டர் ம.ரா.போ. குருசாமி அவர்கள் டாக்டர் இல.செ.க. அவர்களின் புத்தக வெளியீட்டின் போது இதனைக் குறிப்பிட்டார்.

நம்மோடு வாழ்ந்த இவர்களது சிறப்பு என்ன நம்மிலிருந்து இவர்கள் மேலோங்கி நிற்பதற்கான உண்மை என்ன? தலைசிறந்த தமிழறிஞர்கள் பேசக் கேட்போம். நம்மை உயர்த்திக்கொள்ள என்ன வழி என்பதனை ஆராய்வோம். நமது எண்ணங்களை மேம்படுத்திக் கொள்ள இவ்வறிஞர்கள் கூறப்போவதை செவிசாய்த்து கேட்போம்.

வாரீர்!

நடைபெறும் இடம்:

கோவை ஆர்.எஸ். புரம்
ஸ்ரீ அன்னபூர்ணா கலையரங்கம்
அக்டோபர் 10, 1993
மாலை 3.00 மணி

– ஆசிரியர் குழு


Share
 

No comments

Be the first one to leave a comment.

Post a Comment


 

 


October 1993

அக்டோபர் 10
மனச்சுமைகளை இறக்கி வைப்போம்
ஆசிரியரின் டைரி குறிப்பு
நாமே புத்திசாலிகள்
சூப்பர் நினைவாற்றலுக்கு
சிக்கனமும் சேமிப்பும்